விபத்தில் இறந்த சிறுமியின் கண்கள் தானம்

விபத்தில் இறந்த சிறுமியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. கார் மோதியதில் செடோரா பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் இறந்த சிறுமியின் கண்கள் தானம்
Published on

மதுரை

மதுரை மேல பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் அடோசென்டன். இவரது மனைவி அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் செடோரா(வயது 9) 4-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு குடும்பத்தினர். கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு செடோரா மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் வெளியே சென்றார். அப்போது கார் மோதியதில் செடோரா பரிதாபமாக இறந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் பெற்றோர் ஒப்புதலின் பேரில் சிறுமி செடோராவின் கண்கள் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com