search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaigaiyaru Bridge"

    • வேகத்தடை-பேரிகாட் எதுவும் இல்லாத காரணத்தால் குருவிக்காரன் சாலை- வைகையாற்று பாலம் சந்திப்பில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
    • போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

    மதுரை

    மதுரை நகரில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்கப்பட்டு வருகின் றன. அதன்படி வைகை யாற்றின் இரு புறமும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன.

    தற்போது வைகை யாற்றில் தென்கரை பகுதி யான ஆரப்பாளை யத்தில் இருந்து சிம்மக்கல், ஓபுளா படித்துறை, குருவிக்காரன் சாலை, தியாகராஜா கல்லூரி ஆகிய பகுதிகள் வழியாக விரகனூர் ரிங் ரோடு வரை சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ரிங் ரோட்டில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்க ளும், மதுரையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதால் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் நகர் பகுதியில் ஓபுளா படித்துறை, குருவிக் காரன் சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.

    குறிப்பாக குருவிக்காரன் சாலை-வைகையாற்று பாலம் சந்திப்பு பகுதியில் வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட் டுள்ளது. சில நேரங்களில் வாகன ஓட்டிகள் கவனிக் காமல் செல்வதால் விபத்துக் கள் ஏற்படுகின்றன. அங்கு வேகத்தடை, பேரிகார்டு எதுவும் இல்லை.

    அண்மையில் இந்தப்பகு தியில் நடந்து சென்ற ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். எனவே அந்தப்பகுதியில் விபத்துக்கள் நடக்காமல் இருக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×