search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palamedu"

    • 14 காளைகளை அடக்கி பொதும்பு பிரபாகரன் முதல் இடம் பிடித்தார்
    • 11 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் இரண்டாம் இடம் பிடித்தார்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

    இதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடக்கும் போட்டிகள் பிரபலமானவை.

    மாட்டு பொங்கலான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவடைந்தது.

    முதல் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் கார் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும், பைக், தங்கக்காசு, ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி பெட்டி என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    இதில் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்தார். 2020, 2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களிலும் முதலிடம் பிடித்தவர் பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

    11 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் 2-ஆம் இடத்தில் உள்ளார். அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக கிடைத்தது.

    கொந்தகை பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகளை அடக்கி 3-வதாக இடம் பிடித்தார்.

    சிறந்த காளையாக புதுக்கோட்டை ராயவயல் சின்னகருப்பு காளைக்கு முதல் பரிசை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

    பாலமேடு ஜல்லிக்கட்டில் 42 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாலமேடு அருகே நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட மாணிக்கம்ப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள வலையப்பட்டி மற்றும் எர்ரம்பட்டி பீடர்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (29-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையார் அணை, எர்ரம்பட்டி, தேவசேரி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    பொங்கல் பண்டிகையையொட்டி பாலமேடு, அவனியாபுரத்தில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது, காளைகள் முட்டியதில் 92 வீரர்கள் காயம் அடைந்தனர். #Jallikattu #AvaniyapuramJallikattu
    மதுரை:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலைசாமி கோவில் ஆற்று மைதானத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. போட்டியை காண கோவில் மைதானத்துக்கு அதிகாலை 5 மணியில் இருந்தே பார்வையாளர்கள் வந்து குவியத் தொடங்கினர். சீறிப்பாய்ந்து வரும் காளைகளை பிடிக்கும் வீரர்கள், காயம் அடையாத வகையில் மைதானத்தில் தென்னை நார் கழிவுகள் பரப்பி வைக்கப்பட்டு இருந்தன. போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்த காளைகளுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தினார்கள்.

    அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு போட்டியை மாவட்ட கலெக்டர் நடராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதலில் வாடிவாசல் வழியாக கிராமத்து கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.

    பின்னர் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. மொத்தம் 567 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை அடக்குவதற்காக 739 வீரர்கள் களத்தில் இறங்கினார்கள். காளைகளை அவர்கள் ஆர்வத்துடன் அடக்கினார்கள்.

    போட்டியின் போது காளைகள் முட்டியதில் வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 48 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 13 பேர் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில், மிக்சி, கிரைண்டர் போன்றவை பரிசாக வழங்கப்பட்டன.

    சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மலைப்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவரின் காளை முதல் பரிசான காரை தட்டிச் சென்றது.

    சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட அலங்காநல்லூரைச் சேர்ந்த பிரபாகரனுக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. பிரபாகரன் மொத்தம் 10 காளைகளை பிடித்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

    மதுரை அவனியாபுரம் அய்யனார் கோவில் மைதானத்தில் பொங்கல் தினமான நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. மதுரை ஐகோர்ட்டு நியமித்த, ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான குழுவின் வழிகாட்டுதலின்படி அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

    மொத்தம் 641 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், 476 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளுடன் மல்லுக்கட்டினர். ஜல்லிக்கட்டின் போது சீறிப்பாய்ந்து வந்த மாடுகள் முட்டியதில் பார்வையாளர்கள், வீரர்கள், மாடு வளர்ப்போர் என 44 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் படுகாயம் அடைந்த 9 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பாலமேட்டிலும், அவனியாபுரத்திலும் நடந்த போட்டிகளில் காளைகள் முட்டியதில் மொத்தம் 92 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

    திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், வேடிக்கை பார்த்தவர்கள் என மொத்தம் 40 பேர் காயம் அடைந்தனர்.

    பெரிய சூரியூரில் காளைகளை அடக்குவதற்காக களத்தில் நின்ற மாடுபிடி வீரர்களுக்கு இடையே அவ்வப்போது மோதலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. உடனே போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு விநாயகர் கோவில் தெருவில் காளை விடும் விழா நடைபெற்றது. அப்போது காளைகள் முட்டியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. #Jallikattu #AvaniyapuramJallikattu
    மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் போட்டியை தொடங்கி வைத்தார். #Jallikattu #PalameduJallikattu
    மதுரை

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன் அரசாணை வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முறையே ஜனவரி 15, 16, 17-ந் தேதிகளில் நடைபெறும் அறிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. வாடிவாசல், தடுப்பு, கேலரி, மைதானம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், 55 கிலோ எடை அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நடைமுறைகள் முடிந்தபின்னர் பலத்த பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் தினமான நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.



    இந்நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் போட்டியை தொடங்கி வைத்ததும், வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின்னர் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க காளையர்கள் களத்தில் ஆக்ரோஷமாக களமிறங்கி உள்ளனர்.  இந்த ஜல்லிக்கட்டில் 800 வீரர்கள், 900 காளைகள் பங்கேற்றுள்ளன.

    ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரருக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசு வழங்கப்படுகிது. ஆம்னி கார், இருசக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.  #Jallikattu #PalameduJallikattu
    அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை தயார் செய்யும் பணிகளில் காளைகள் வளர்ப்போர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Jallikattu
    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று கிராமப்புறங்களில் நடைபெறும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு. இது 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

    தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இந்த வீர விளையாட்டு தை மாதத்தில் நடைபெறும்.

    வருகிற ஜனவரி 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடை பெறுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர்.



    இந்நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கண்மாய்களில் நீச்சல் பயிற்சியும் மைதானங்களில் ஓட்டமும், மண்குவியலில் மண் குத்துதலும், மாதிரி வாடி அமைத்து அதில் காளைகளை அவிழ்த்து விடுவதும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை காளைகள் வளர்ப்போர் அளித்து வருகின்றனர்.

    அ.கோவில் பட்டியைச் சேர்ந்த மண்டு கருப்புச்சாமி கிராம கோவில் காளைக்கு அப்பகுதியில் உள்ள குளத்தில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறியதாவது:-

    பொதுவாக காளைகளுக்கு டிசம்பர், ஜனவரி மாதம் வந்தாலே தெம்பும், தைரியமும், துணிச்சலும் இயற்கையாகவே வந்து விடுகிறது. காளைகளுக்கு தீவனமாக பச்சை புல், வைக்கோல், முற்றிய தேங்காய் பருப்பு, நாட்டு பருத்தி விதை போன்ற பலவகையான தீவனங்கள் வழங்கி சிறப்பாக கவனிக்கப்படும்.

    அத்துடன் அதற்கான பயிற்சிகளில் வழக்கம் போல் ஈடுபடுத்தப்படும். தென்மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் போட்டிகளில் பங்கேற்கும்.

    ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்பே அனைத்து பகுதிகளிலும் காளைகள் வளர்ப்போர் ஆர்வத்துடன் பயிற்சி அளித்து முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார். #Jallikattu



    ×