search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லிக்கட்டு"

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை.
    • போட்டியின்போது தனிநபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ எந்த பிரச்சனை, இடையூறு செய்யக்கூடாது.

    மதுரை:

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து கமிட்டி அமைத்து நடத்த கோரிய வழக்கின் விசாரணை ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை என்றும் போட்டியின்போது தனிநபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ எந்த பிரச்சனை, இடையூறு செய்யக்கூடாது என்றும் கூறினர்.

    ஜல்லிக்கட்டு போட்டியின்போது இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    சேலத்தை அடுத்த நிலவாரப்பட்டி மூலக்காடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது.
    சேலம்:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது.

    இதையொட்டி சேலம் , கரூர், திருச்சி உள்பட பல மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதையொட்டி சேலத்தை அடுத்த நிலவாரப்பட்டி மூலக்காடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் கார்மேகம், கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது சேலம் தொகுதி எம்.பி., எஸ். ஆர்.பார்த்திபன், பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் பாரப்பட்டி சுரேஷ்குமார், துணை செயலாளர் ராஜா, பி.எஸ்.என்.எல். ஆலோசனைக்குழு உறுப்பினர் நிலவாரப்பட்டி தங்கராஜ், விலங்குகள் நல வாரியம் ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அதிகாரி மிட்டல், சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. இந்த காளைகள் மைதானத்தில் மாடு பிடி வீரர்களை தூக்கி வீசிய படி சீறிப்பாய்ந்தன. இதில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். காளைகள் முட்டியதில் சில வீரர்கள் காயம் அடைந்தனர்.

    காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. சேலம் அருகே நடந்த இந்த போட்டியை காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதையொட்டி கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறை குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. 108 அவசர சிகிச்சை வாகனம், காவல்துறை பாதுகாப்பு, பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
    ×