என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரையில் நடக்கும் அ.தி.மு.க. மாநாடு கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வளையங்குளம் கருப்பசாமி கோவில் மைதானத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது. இதற்கு அனுமதி கேட்டும், பாதுகாப்பு அளிக்க கோரியும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்தி டம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான், தகவல் தொழில் நுட்ப பிரிவின் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். பின்னர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதா வது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மிகச்சிறப்பாக கட்சியை வழி நடத்தி வருகி றார். ஆகஸ்டு 20-ந்தேதி மதுரை வளையங்குளம் பகுதியில் மிகப்பெரிய அளவில் அ.தி.மு.க. மாநில மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாடு நடத்த அனுமதிக்க கோரியும், பாதுகாப்பு அளிக்க கோரியும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு அளித்துள்ளோம். இந்தியாவில் இதுவரை நடக்காத அளவில் இந்த மாநாட்டை நடத்தவும், கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நடத்தப் படும் இந்த மாநாட்டில் 60 லட்சம் அ.தி.மு.க. தொண்டர் கள் பங்கேற்க உள்ளனர்.

    இவவாறு அவர் கூறினார்.

    • 2-ந்தேதி விசாக விழா கொண்டாடப்படுகிறது.
    • பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்துவார்கள்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந் தேதிகாப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் இரவு 7 மணியளவில் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளுதல் நடந்து வருகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 2-ந்தேதி விசாக விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்துவார்கள். கோவிலுக்குள் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் காலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை இடைவிடாது சண்முகப் பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கும்.

    அதன் பால் பெரிய சில்வர் தொட்டியில் விழும். பிறகு அங்கு இருந்து கோவில் வெளிப்புறமான சஷ்டி மண்டப வளாகம் வரை குழாய் வழியாக அபிஷேகம் கொண்டுவரப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக விசாக கொறடு மண்டபத்தில் இருந்து சஷ்டி மண்டபம் வளாகம் வரை 100 அடி நீளத்திற்கு புதியதாக குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    பக்தர்கள் பாட்டில் மற்றும் பாத்திரங்கள் மூலம் அபிஷேக பால் பெற்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விசாக கொறடு மண்டபத்தில் தற்காலிகமாக மின்விசிறிகள் பொருத்தப்பட்டு வருகிறது.

    • மதுரை சமயநல்லூர் கோட்டத்தில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்தை சார்ந்த மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை (1-ந் தேதி) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சமயநல்லூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சமயநல்லூர் கோட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைககளை தெரிவிக்கலாம்

    மேற்கண்ட தகவலை மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    • கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வடகரை சுடுகாடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

    திருமங்கலம், மே.31-

    திருமங்கலம் டவுன் போலீசார் வடகரை சுடுகாடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர் .அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வந்திருந்தனர். சந்தேகத்தின் பேரில் நடத்திய சோதனையில் அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது அவர்களிடம் இருந்து 1.600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது விசாரணையில் அவர்கள் திருமங்கலம் ஊத்துப்மேட்டை சேர்ந்த தினேஷ் பாண்டி (வயது 19 ), விருதுநகர் மாவட்டம் பாலவ நத்தத்தைச் சேர்ந்த மலையரசன் (53 )என்று தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • மதுரையில் நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள்- தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
    • மருத்துவ பிரிவு டாக்டர் கே .முரளி பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் பா.ஜ.க. மருத்துவ பிரிவு டாக்டர் கே.முரளி பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் மத்திய பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் பயன் பெறும் வகையில் செயல்ப டுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அனைவரும் அறிய செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி பேசி வருகின்றனர். இதேபோல் மதுரை அண்ணாநகரில் பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதே போல் பூத் கமிட்டி மாநாடும் நடைபெற உள்ளது.

    இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார். எனவே இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சோழவந்தான் அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடந்தது.
    • இன்று காலை சிலைகளை எடுத்து கோவிலை சென்றடைந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தில் உள்ள அய்யனார், ஊர்க்காவலன், கொடிப்புலி கருப்புச்சாமி கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இந்த விழா 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மார்ச் 23-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிராமத்தினர் குலவேளாளர்க ளிடம் சிலைகள் செய்வதற்கான பிடி மண் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வேளாளர் வீட்டில் இருந்து சுவாமி, குதிரை சிலைகளை எடுத்து மேள தாளம் முழங்க வானவேடிக்கையுடன் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து மந்தையில் வைத்தனர். இரவு கலை நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை சிலைகளை எடுத்து கோவிலை சென்றடைந்தனர். பின்னர் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டாண்மை, கட்டையன், வாராமிலி கூட்டத்தினர் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடந்தது.
    • இன்று காலை சிலைகளை எடுத்து கோவிலை சென்றடைந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தில் உள்ள அய்யனார், ஊர்க்காவலன், கொடிப்புலி கருப்புச்சாமி கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இந்த விழா 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மார்ச் 23-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிராமத்தினர் குலவேளாளர்க ளிடம் சிலைகள் செய்வதற்கான பிடி மண் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வேளாளர் வீட்டில் இருந்து சுவாமி, குதிரை சிலைகளை எடுத்து மேள தாளம் முழங்க வானவேடிக்கையுடன் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து மந்தையில் வைத்தனர். இரவு கலை நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை சிலைகளை எடுத்து கோவிலை சென்றடைந்தனர். பின்னர் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டாண்மை, கட்டையன், வாராமிலி கூட்டத்தினர் செய்திருந்தனர்.

    • மதுரையில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • உலக மாதவிடாய் சுகாதார தினத்தையொட்டி மதுரை மாவட்ட குடும்ப கட்டுப்பாட்டு நலச்சங்கம் சார்பில் நடந்தது.

    வாடிப்பட்டி

    உலக மாதவிடாய் சுகாதார தினத்தையொட்டி மதுரை மாவட்ட குடும்ப கட்டுப்பாட்டு நலச்சங்கம், மீனாட்சி மில் ஜி.எச்.சி.எல் அறக்கட்டளையுடன் இணைந்து பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு சமயநல்லூர் அருகே ஊர்மெச்சிகுளம் சமுதாய கூடத்தில் நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு அறக்கட்டளை தொழில் மேலாளர் நாகராஜ பாண்டியன் தலைமை தாங்கினார். சமூக பொறுப்பாளர் சுஜின் முன்னிலை வைத்தார். குடும்ப கட்டுப்பாட்டு நலச்சங்க மேலாளர் டாக்டர் பிரதீபன், திட்ட அலுவலர் ஆஷீபா ஆகியோர் மாதவிடாய் சுகாதார மேலாண்மை பற்றி விளக்கிப் பேசினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாளை 100 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடந்தது. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை மதுரை தெற்கு மாவட்டத்தில் 100 நாள்கள் தொடர்ந்து கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு நலத்திட்டங்களை வழங்க உள்ளோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் மற்றும் தேனி தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் அல்லது கூட்டணி வேட்பா ளர்களின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட்டு அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் அவர்களை வெற்றி பெற செய்யவேண்டும். உறுப்பி னர் சேர்க்கையில் திருமங்க லம் தொகுதி தலைமை அறிவித்த இலக்கை தாண்டி சாதனை படைத்து உள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் உசிலம்பட்டி தொகுதிகளை சேர்ந்தவர் களும் இலக்கை தாண்டி புதிய உறுப்பி னர்களை சேர்க்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட்பாண்டி, துணை செயலாளர் லதாஅதியமான், திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, மதன்குமார் பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொருப்பாளர் பாசபிரபு, திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதிய மான், நகர துணை செயலாளர் செல்வம், இளைஞரணி கௌதம், ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • செக்கானூரணி பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • வேறு இடத்திற்கு மாற்ற தேவையான நடவடிக்கைகளையும் விரைந்து முடிக்க கோரி உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆ. கொக்குளம், தேங்கல்பட்டி, செக்கானூரணி கிராம பகுதிகளுக்கு பாத்தியமான மயானம் செக்கானூரணியில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மயானத்தை மின் மயானமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்கு அப்பகுதி பொதுமக்கள் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமாரும் செக்கானூரணியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆ. கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தேங்கல்பட்டி கிராமம், செக்கானூரணி கிராம மக்களுக்கு பாத்தியமான மயானம் செக்கானூரணியில் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது. இந்த மயானத்தில் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பாரம்பரிய முறையில் சாஸ்திரங்கள், சம்பிர தாயங்கள், முறைப்படி காரியங்கள் செய்து வருகிறார்கள்.

    தற்போது அந்த பகுதியில் பாரம்பரிய மயானத்தை மாற்றி மின்மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பாரம்பாரிய மான மயானத்தை மாற்றினால் தங்களின் பாரம்பரிய சாஸ்திர சம்பிரதாய முறை பாதிக்கப்படும் என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.

    எனவே மின் மயானம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட்டு செக்கானூரணியில் பாரம்பரிய மயானம் தொடர்ந்து நடைபெற நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செக்கானூரணியில் அமைக்க திட்டமிட்டிருந்த மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற தேவையான நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.
    • பாரதிய ஜனதா நடைபயணம் ஜூலை 9-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது.

    மதுரை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் குறித்து இப்போது பேசப்படுகிறது. ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற வாதத்தின் படி ஒரு குற்றம் சுமத்தப்பட்டால் அதற்கான ஆதாரத்தை பார்க்க வேண்டும். முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். பின்பு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கொடுத்த வீரர்கள், சுப்ரீம் கோர்ட் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரும், புகார் கூறப்பட்டவரை கைது செய்த பின்னர்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறுவது தவறானது.

    தமிழகத்தில் கவியரசு வைரமுத்து மீது எத்தனை புகார்கள் உள்ளது. அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. விசாரணை நடத்தி பின்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

    பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது இலாகா மாற்றம் நடவடிக்கை மதுரை மண்ணுக்கு தி.மு.க. அரசு இழைத்திருக்கும் துரோகம். பி.டி.ஆர். ஒரு தவறும் செய்யவில்லை. முதல்வர் மீது கருத்து சொல்லியதற்காக தூக்கி வீசப்பட்டிருக்கிறார் என்றால் இந்த திராவிட மாடலில் யாருக்கு வேண்டுமானால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை எடுத்துரைக்கிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட செல்லும் போது, அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அப்படி தாக்கியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக, மேயராக மற்றும் பதவிகளில் உள்ளவர்கள். அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை இனி ஒரு அரசு அதிகாரிகள் மீது இது போன்ற செயல்கள் செய்யும் நபர்களுக்கு காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கை பெரிய பாடமாக இருக்க வேண்டும்.

    மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் கட்சியின் பதவி ஏற்பு விழாவில் முதல்வர் கலந்து கொண்டது எந்த வகையில் சரியாகும். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது.

    நிச்சயமாக மேகதாது அணையை கட்டினால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.

    பாரதிய ஜனதா நடைபயணம் ஜூலை 9-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது. 6 மாதம் நடக்கும் இந்த நடைபயணத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாமிசிலை, குதிரைகள் கிராமத்தின் பொது மந்தையில் வைக்கப்பட்டது.
    • பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை நடைபெறும்.

    சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் சுவாமி, ஊர்காவலன்சுவாமி, கொடிப்புலி கருப்புச்சாமி ஆகிய கோவில்களின் குதிரை எடுப்பு திருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. குதிரை எடுப்பு திருவிழா நேற்று மாலை வாணவேடிக்கை மேளதாளத்துடன் நடைபெற்றது. முதலில் சாமியாடிகள் அழைப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து சாமிசிலை மற்றும் குதிரை சிலைகளை நான்கு வீதி வழியாக சாமியாடிகள், பொதுமக்கள் எடுத்து வந்தனர். சாமிசிலை, குதிரைகள் கிராமத்தின் பொது மந்தையில் வைக்கப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் இன்று அய்யனார் கோவில், ஊர்க்காவலன் சாமி, கொடிப்புலி கருப்புசாமி ஆகிய கோவில்களுக்கு சம்பந்தப்பட்ட சாமி சிலை மற்றும் குதிரைகள் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இதைத்தொடர்ந்து அந்தந்த கோவிலில் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை நடைபெறும். இவ்விழாவில் பல்வேறு கிராமத்திலிருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேலூர் அருகே உள்ளது சாத்தமங்கலம் கண்மாய்க்கரையில் ஹரிஹரபுத்திர சாத்தை அய்யனார் கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாத புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதற்காக பாரம்பரிய வழக்கப்படி பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக 73 புரவிகள் எனப்படும் மண் குதிரைகளை இ.மலம்பட்டியில் தயார் செய்யப்பட்டது. அங்கிருந்து 73 புரவிகளை பக்தர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் சுமந்து தனியாமங்கலம் அடுத்துள்ள சாத்தமங்கலம் மந்தை திடலில் வைத்தனர். பின்னர் அங்கிருந்து ஹரிஹரபுத்திர சாத்தை அய்யனார் கோவிலுக்கு புரவிகளை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து வழிபட்டனர். கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    ×