பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டம்

மதுரையில் நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள்- தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.மருத்துவ பிரிவு டாக்டர் கே .முரளி பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டம்
Published on

மதுரை

மதுரை மாநகர் பா.ஜ.க. மருத்துவ பிரிவு டாக்டர் கே.முரளி பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் மத்திய பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் பயன் பெறும் வகையில் செயல்ப டுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அனைவரும் அறிய செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி பேசி வருகின்றனர். இதேபோல் மதுரை அண்ணாநகரில் பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதே போல் பூத் கமிட்டி மாநாடும் நடைபெற உள்ளது.

இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார். எனவே இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com