என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு
- மதுரையில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
- உலக மாதவிடாய் சுகாதார தினத்தையொட்டி மதுரை மாவட்ட குடும்ப கட்டுப்பாட்டு நலச்சங்கம் சார்பில் நடந்தது.
வாடிப்பட்டி
உலக மாதவிடாய் சுகாதார தினத்தையொட்டி மதுரை மாவட்ட குடும்ப கட்டுப்பாட்டு நலச்சங்கம், மீனாட்சி மில் ஜி.எச்.சி.எல் அறக்கட்டளையுடன் இணைந்து பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு சமயநல்லூர் அருகே ஊர்மெச்சிகுளம் சமுதாய கூடத்தில் நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு அறக்கட்டளை தொழில் மேலாளர் நாகராஜ பாண்டியன் தலைமை தாங்கினார். சமூக பொறுப்பாளர் சுஜின் முன்னிலை வைத்தார். குடும்ப கட்டுப்பாட்டு நலச்சங்க மேலாளர் டாக்டர் பிரதீபன், திட்ட அலுவலர் ஆஷீபா ஆகியோர் மாதவிடாய் சுகாதார மேலாண்மை பற்றி விளக்கிப் பேசினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
Next Story






