search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "E-Cemetery"

    • 500க்கும் மேற்பட்டோர் நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த காமராஜர் காலனியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் இந்த பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, அரசு தொடக்கப்பள்ளி அருகே மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மின் மயானம் நம்பியூரில் இருந்து செல்லும் எலத்தூர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் இங்கு மின் மயானம் கட்டினால் சுகாதார சீர்கேடு ஏற்படும் எனக் கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும் நேற்று கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

    மேலும் இந்த திட்டம் இந்த பகுதியில் கைவிடப்பட வில்லை என்றால் மேலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதனை அடுத்து பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • செக்கானூரணி பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • வேறு இடத்திற்கு மாற்ற தேவையான நடவடிக்கைகளையும் விரைந்து முடிக்க கோரி உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆ. கொக்குளம், தேங்கல்பட்டி, செக்கானூரணி கிராம பகுதிகளுக்கு பாத்தியமான மயானம் செக்கானூரணியில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மயானத்தை மின் மயானமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்கு அப்பகுதி பொதுமக்கள் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமாரும் செக்கானூரணியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆ. கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தேங்கல்பட்டி கிராமம், செக்கானூரணி கிராம மக்களுக்கு பாத்தியமான மயானம் செக்கானூரணியில் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது. இந்த மயானத்தில் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பாரம்பரிய முறையில் சாஸ்திரங்கள், சம்பிர தாயங்கள், முறைப்படி காரியங்கள் செய்து வருகிறார்கள்.

    தற்போது அந்த பகுதியில் பாரம்பரிய மயானத்தை மாற்றி மின்மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பாரம்பாரிய மான மயானத்தை மாற்றினால் தங்களின் பாரம்பரிய சாஸ்திர சம்பிரதாய முறை பாதிக்கப்படும் என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.

    எனவே மின் மயானம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட்டு செக்கானூரணியில் பாரம்பரிய மயானம் தொடர்ந்து நடைபெற நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செக்கானூரணியில் அமைக்க திட்டமிட்டிருந்த மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற தேவையான நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×