search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நம்பியூரில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு- பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
    X

    நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

    நம்பியூரில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு- பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

    • 500க்கும் மேற்பட்டோர் நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த காமராஜர் காலனியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் இந்த பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, அரசு தொடக்கப்பள்ளி அருகே மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மின் மயானம் நம்பியூரில் இருந்து செல்லும் எலத்தூர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் இங்கு மின் மயானம் கட்டினால் சுகாதார சீர்கேடு ஏற்படும் எனக் கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும் நேற்று கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

    மேலும் இந்த திட்டம் இந்த பகுதியில் கைவிடப்பட வில்லை என்றால் மேலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதனை அடுத்து பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×