என் மலர்
மதுரை
- குடோனில் இரும்பு பொருட்களை திருடி எடைக்கு போட்டவர் கைது செய்யப்பட்டார்.
- அதன் மதிப்பு ரூ.60 ஆயிரமாகும்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் இரும்பு பொருட்கள் வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் திருவள்ளூரை சேர்ந்த பத்மநாபன் (வயது 55) என்பவர் தனக்கு சொந்த மான டிராக்டர் தொழிற்சா லைக்கு பயன்படுத்தும் இரும்பு டிஸ்க் பொருட்களை வைத்திருந்தார்.
அந்த குடோனுக்கு மேலாளர் கணேசன் ஆய்வு செய்தபோது, இரும்பு பொருட்கள் திருடப்பட்டி ருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு
ரூ.60 ஆயிரமாகும். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அந்த குடோனில் திருடிய பொருட்களை இரும்பு கடைகளில் சானாம் பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவர் எடைக்கு போட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- மக்கள் மீதான வரிச்சுமை அதிகரிக்கும் சாலை வரி உயர்வை அரசு கைவிட வேண்டும்.
- ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
2021-ம் ஆண்டில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற போது மக்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்தனர். அதனை தகர்த்து எறியும் வகையில் தொடர்ந்து தி.மு.க. அரசு சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, குப்பை வரி உயர்வு, கழிவுநீர் இணைப்பு கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு இப்படி விலைவாசியை உயர்த்தி கொண்டிருக்கிறது.
தற்போது சாலை வரி உயர்வு குறித்து தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தி இருப்பது உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
5 சதவீதம் வரி உயர்வு என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது ஆகும்.
அதேபோல் மோட்டார் வாகன வரியை உயர்த்தப் போவதாகவும் செய்தி வருகிறது. இந்த வரி உயர்வால் வாகனங்கள் விலை உயரும். தற்போைதய நிலவரப்படி 15 ஆண்டுக்கான சாலை வரியை வாகனங்களில் இருந்து 8 சவீதமாக வசூலிக்கப்படுகிறது.
இனி இரு சக்கர வாகனங்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் 10 சதவீத வரியும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வாகனங்களின் விலைக்கு ஏற்றபடி வரிகள் உயர்த்த படலாம்.
2022-23-ம் ஆண்டில் 14.77 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 12.5 லட்சம் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது இந்த வரி உயர்வால் லாரி வாடகை கட்டணம் உயரும். அதன் மூலம் காய்கறி உள்ளிட்ட அத்தியா வசிய பொருள்கள் கடுமை யாக உயர்ந்து மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும்.
சாலை வரிக்கு அக்கறை காட்டும் முதலமைச்சர், நல்ல முறையில் சாலை அமைக்க முன்னுரிமை அளிப்பாரா? என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆகவே சாலை வரியை உயர்த்தும் முடிவை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மதுரை மெட்ரோ ரெயில் பணிகள் விரிவான திட்ட அறிக்கை தொடர்பான ஆய்வு தொடங்கியது.
- மாசி வீதிகளை அதிகாரி சித்திக் பார்வையிட்டார்.
மதுரை
ஸ்மார்ட் சிட்டியாக மாறி வரும் மதுரை மாநகரில் ரூ. 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
மதுரையில் ஒத்தக்கடை, திருமங்கலத்தை இணைக்கும் வகையில் 31 கிலோ மீட்டர் தொலைவுக்கு, திருமங்க லத்தில் இருந்து தோப்பூர், திருநகர், மதுரை கல்லூரி, காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளை யம், கே.புதூர், மாட்டுத்தாவணி, ஐகோர்டு வழியாக ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்ய ப்பட்டுள்ளது. அதற்கான சாத்திய கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை யை தயாரிப்ப தற்கான ஒப்பந்தம் கையெ ழுத்திடப்பட்டது.
அந்த அறிக்கை ஜூலை 15-ந்தேதி அரசிடம் சமர்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவ னத்தை அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை தனியார் நிறுவ னத்திடம் வழங்கி உள்ளது.
இந்த நிலையில் மெட்ரோ ரெயில் மேலாண் இயக்குனர் சித்திக் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள நான்கு மாசி வீதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
ஏற்கனவே திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் பரிசோத னையும், போக்குவரத்து சோதனையும் நடத்தப் பட்டுள்ளது.
மேலும் நில எடுப்பு நில அளவை உள்ளிட்ட பணி களும் நடைபெற்று உள்ளது. குறிப்பாக அரசு நிலங்கள், பணிகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நிலங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
மதுரை நகரின் மைய பகுதிகளில் பூமிக்கு அடியில், திருமங்கலத்தையும், ஒத்தக்கடையையும் இணைக்கும் வகையில் அமைய இருக்கும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டமா னது, மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன் செயல் படுத்தப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடியின் கடும் உழைப்பால் பொருளாதாரத்தில் இந்தியா முதலிடம் நோக்கி செல்கிறது என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
- பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.
மதுரை
மதுரை கே.கே.நகரில் மாநகர் மாவட்ட பா.ஜ.க. வடக்கு தொகுதி அணி பிரிவு நிர்வாகிகள் மாநாடு நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜ்குமார், இளைஞர் அணி தலைவர் பாரி ராஜா, மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வசித்தனர்.
மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் நலத்திட்டங்களை வீடு, வீடாக கொண்டு சேர்க்கிற பணியில் இந்தியா முழுவதும் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடியின் கடும் உழைப் பால் பொருளாதாரத்தில் இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக தலைவர்கள் பலருடன் பிரதமர் மோடி பேசி வருகிறார். பா.ஜ.க.வுக்கு இளைஞர்கள் ஆதரவு பெருகி வருகிறது. தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை நடை பயணம் தொடங்கு கின்ற வேளையில் பா.ஜ.க.வின் பலம் மேலும் அதிகரிக்கும். பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, துணைத்தலைவர்கள் ஜெயவேல், ஜோதிமாணிக் கம், பொதுச் செயலாளர்கள் குமார், பாலகிருஷ்ணன், மகளிரணி தலைவி ஜீவா நகர் மீனா, இளைஞர் அணி நிர்வாகிகள் அருண்பாண்டி யன், முகேஷ்குமார், ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- கீரைத்துரை போலீசில் புகார் செய்தார்.
மதுரை
காமராஜர்புரம் கக்கன் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன் திருமுருகன் (வயது23). இவர் அரசு வேலைக்காக 2 வருடங்களாக படித்து வருகிறார். இவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமுருகனின் தந்தை முத்துராமலிங்கம் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓட்டலில் சாப்பிட்டு பணம் பறித்த கும்பல் தப்பி ஒட்டம்
- உரிமையாளர் பாண்டி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார்.
மதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மிளகனூரை சேர்ந்தவர் பாண்டி (வயது31). இவர் கீரைத்துறை சிந்தாமணி ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு 6 வாலிபர்கள் சாப்பிட சென்றனர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றனர்.
அவர்களிடம் உரிமை யாளர் பாண்டி பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அவரை ஆபாசமாக பேசி கத்திமுன்னையில் மிரட்டி ஓட்டல் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து உரிமையாளர் பாண்டி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் பணம் பறித்த வாலிபர்கள் ஆவாரங்காட்டை சேர்ந்த லட்சுமணன் அகிலன், கண்ணன் என்ற கேடி கண்ணன், நிதீஷ் குமார், கோலிகுமார், தனுஷ் என்று தெரியவந்தது. அவர்கள் 6பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- பாதாள சாக்கடை திட்டத்தில் பணிகள் நடைபெறவில்லை என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டி உள்ளார்.
- ஜெயலலிதா ரூ.250 கோடி சிறப்பு நிதி வழங்கினார்.
திருப்பரங்குன்றம்
அ.தி.மு.க. சார்பில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருநகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட செயலாளரும், பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
மதுரையில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் மதுரை மாநகராட்சி உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ. பூமிநாதன், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது மதுரை மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக அப்போ தைய முதல்வர் ஜெயலலிதா ரூ.250 கோடி சிறப்பு நிதி வழங்கினார். தற்போதைய தி.மு.க. அரசு அது போன்ற எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை வருகிற 2026-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என மத்திய அமைச்சர் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். எனினும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2028-ல் தான் எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட பணிகள் முடியும் என மக்களுக்கு தவறான தகவலை தெரிவித்து வருகிறார்.
தி.மு.க. அரசு மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைபிடிப்பதால் நிதிகளை கேட்டு பெற முடியாத சூழல் உள்ளது. மதுரையின் விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என சட்டப்பேரவையில் தெரிவித்தேன். அப்போது ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அது தொடர்பாக எந்த பணிகளும் நடைபெற வில்லை.
முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மீது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தாக்குதல் நடைபெற்றது. இது தொடர்பாக அவர் புகார் அளித்த நிலையில், அவர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலுமாக பழி வாங்கும் நடவடிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டத் துணைச் செயலாளர் ஓம்.கே.சந்திரன், வட்டச் செயலாளர் என்.எஸ். பாலமுருகன் வரவேற்புரையாற்றினார். பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார், சாக்கிலிபட்டி மணி, வட்டச் செயலாளர் எம்.ஆர்.குமார், நாகரத்தினம், பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாளை முகூர்த்த நாள் என்பதால் மதுரையில் மல்லிகை பூக்கள் விலை இருமடங்கு உயர்ந்து உள்ளது.
- கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது,
மதுரை
மலர்களின் கதாநாய கியாக திகழ்கிறது மதுரை மல்லிகை. முகூர்த்தம், திருவிழா, பண்டிகை காலங்களில் மல்லிகை இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மல்லிகை பூக்களின் தேவை அதிகமாக காணப்படும். இதனால் முகூர்த்தம் மற்றும் சுப தினங்களில் மதுரையில் பொதுமக்கள் மல்லிகை பூக்களை ஆர்வத்துடன் வாங்கி செல்வது வழக்கம்.
கடந்த சில நாட்களாக முகூர்த்தம் மற்றும் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் குறைந்த காரணத்தால் மல்லிகை பூக்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன. 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. மல்லிகை பூக்களை வாங்குவதற்கும் மக்கள் அதிக ஆர்வமின்றி காணப்பட்டனர்.
பூக்களின் வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் கவலை தெரிவித்தனர். இந்த நிலையில் நாளை முகூர்த்த நாள் என்பதால் மதுரையில் மல்லிகை பூவுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூக்கள், இன்று இருமடங்கு விலை உயர்ந்து கிலோ 600 ரூபாயாக விற்பனையானது.மற்ற பூக்களான முல்லை ஒரு கிலோ 400 ரூபாய்க்கும், பிச்சி 500 ரூபாய்க்கும், சம்பங்கி 120 ரூபாய்க்கும், செண்டுமல்லி 100 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
நாளை முகூர்த்த நாள் என்பதால் அனைத்து பூக்களின் விலைகளும் சற்று உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரி வித்தனர். பொதுமக்களும் பூக்களை வாங்க அதிக அளவில் மார்க்கெட்டுகளில் திரண்டதால் விற்பனை அதிகமாக நடைபெற்றது.
- நுகர்பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஜி.எஸ்.டி. விலைப்பட்டியல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
- உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியும், சங்க உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
மதுரை
மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஜி.எஸ்.டி.வரி முறையில் தற்போது புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைகள், மாற்றங்கள் போன்றவற்றில் உறுப்பினர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்கான கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில வரி ஆலோசகர் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜி.எஸ்.டி. வரி முறையில் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும், கடந்த 6 மாதங்களாக நமது உறுப்பினர்களுக்கு ஜி.எஸ்.டி. விலைப்பட்டியலில் ஏற்படும் சிறிய தவறுகளுக்கு கூட பெரிய அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராதத்தை தவிர்ப்பதற்கு உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியும், சங்க உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
- ஆதரவற்ற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இலவசமாக ஆட்டோக்கள் வழங்கப்படும்.
- இந்த ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதுரை
மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது ரோட்டரி மாவட்டம் 3000. இந்த ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வருகிற2-ந்தேதி பதவி யேற்க உள்ளார்.
இதை முன்னிட்டு மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
எங்களது ரோட்டரி சங்கம் மூலம் ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்து, டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக்கொடுத்து இ-ஆட்டோ வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி களுக்கு சவாரி எடுக்கவும், ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். இதன் மூலம் அவர்களின் வருமானம், வாழ்க்கை தரம் உயர ரோட்டரி சங்கம் உறுதுணையாக இருக்கும். 2024-ம் ஆண்டுக்குள் ரூ. 4 கோடி மதிப்பில் ஒரு சங்கத்துக்கு ஒரு ஆட்டோ வீதம் 127 ஆட்டோ ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு வழங்கப்படும்.
சுகாதார வசதி இல்லாத மாணவிகள் பயிலும் அரசு பள்ளியை கண்டறிந்து கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படும். 12 மாதங்களில் 12 திட்டங்கள் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். வருகிற 1-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மேம்பாட்டுக்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மண்டல ஒருங்கிணைப் பாளர் அசோக், உதவி ஆளுநர் கவுசல்யா, ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் சேர்மன் நெல்லை பாலு, மகிழ்ந்திரு, மகிழ்வித் திரு திட்ட ஒருங்கிணைப் பாளர் மாதவன் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்து சமய அறநிலையத்துறை பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
- வழக்கு விசாரணையை 4 வாரத் திற்கு ஒத்திவைத்தனர்.
மதுரை
மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராம லிங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:-
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விஸ்வநாதர் கோவிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளன. இந்த நிலையில் மலைக்கு போகும் பாதையில் நெல்லித்தோப்பு எனும் பகுதியில் ரம்ஜான் மாதங்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், "மலைக்கு மேல் தானே தர்காவும் அமைந்துள்ளது. அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடாது என கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரத் திற்கு ஒத்திவைத்தனர்.
- மதுரை அருகே உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடக்கிறது.
- வருகிற 7-ந்தேதி அன்று உசிலம்பட்டியிலும், 8-ந்தேதி திருமங்கலத்திலும் நடைபெற உள்ளது.
மதுரை
மதுரை மாவட்டம் மேலூர் அரசுக் கலைக் கல்லூரியில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் "உயர்வுக்குப் படி" என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழக அரசு மாணவ- மாணவிகளின் நலனை கருத்திற்கொண்டு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் பிளஸ்2 படித்து தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்களுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாமில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லுாரிகளில் விண்ணப்பித்தல், சேர்க்கை, கல்விக் கடன் உதவித்தொகை, முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச்சான்று மற்றும் விடுதியில் தங்கி படித்தல் உள்ளிட்ட சேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அனைத்து கல்வி நிறுவனங்கள், திறன்பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதலையும் கல்லுாரிக்கான சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இம்முகாமின் தொடர்ச்சியாக 03.07.2023-அன்று மதுரையிலும், வருகிற 7-ந்தேதி அன்று உசிலம்பட்டியிலும் மற்றும் 8-ந்தேதி ்ன்று திருமங்கலத்திலும் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் டாக்டர் சண்முகசுந்தர் , மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரிதோஷ் பாத்திமா, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.






