search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jasmine flowers"

    • கெட்வெல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • கனமழையின் காரணமாக சந்தைகளுக்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.

    நெல்லை:

    கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக நெல்லையில் இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    விறுவிறுப்பான விற்பனை

    நெல்லை மாவட்டத்தின் பிரதான மொத்த மலர் சந்தையான நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள கெட் வெல் பூ மார்க் கெட்டில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூக்களின் விற்பனை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சந்தைகளுக்கு வரும் பூக்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

    விலை உயர்வு

    குறிப்பாக மல்லிகை மற்றும் பிச்சி பூக்கள் நெல்லை மாவட்டம் மானூர், அழகிய பாண்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந் தும், தென்காசி மாவட்டம் மாறாந்தை பகுதிகளில் இருந்தும் நெல்லை பூ மார்க்கெட்டுக்கு விற்ப னைக்கு வருவது வழக்கம்.

    தற்போது மழையின் காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்து வரத்து குறைவாக இருந்தது. பண்டிகை மற்றும் முகூர்த்த தினங்களின் காரணமாக பூக்களின் தேவை அதிகரிப்பு இருந்து வருவதால் பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    மல்லிகை பூ

    அதன்படி நெல்லை சந்திப்பு மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கு இன்று விற்பனையானது.

    பிச்சிப்பூ ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்ப னை செய்யப்பட்டது. இதே போல் கேந்தி பூ ரூ.100-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.150-க்கும் விற்பனையானது.

    • நாளை முகூர்த்த நாள் என்பதால் மதுரையில் மல்லிகை பூக்கள் விலை இருமடங்கு உயர்ந்து உள்ளது.
    • கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது,

    மதுரை

    மலர்களின் கதாநாய கியாக திகழ்கிறது மதுரை மல்லிகை. முகூர்த்தம், திருவிழா, பண்டிகை காலங்களில் மல்லிகை இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மல்லிகை பூக்களின் தேவை அதிகமாக காணப்படும். இதனால் முகூர்த்தம் மற்றும் சுப தினங்களில் மதுரையில் பொதுமக்கள் மல்லிகை பூக்களை ஆர்வத்துடன் வாங்கி செல்வது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக முகூர்த்தம் மற்றும் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் குறைந்த காரணத்தால் மல்லிகை பூக்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன. 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. மல்லிகை பூக்களை வாங்குவதற்கும் மக்கள் அதிக ஆர்வமின்றி காணப்பட்டனர்.

    பூக்களின் வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் கவலை தெரிவித்தனர். இந்த நிலையில் நாளை முகூர்த்த நாள் என்பதால் மதுரையில் மல்லிகை பூவுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக நேற்று 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூக்கள், இன்று இருமடங்கு விலை உயர்ந்து கிலோ 600 ரூபாயாக விற்பனையானது.மற்ற பூக்களான முல்லை ஒரு கிலோ 400 ரூபாய்க்கும், பிச்சி 500 ரூபாய்க்கும், சம்பங்கி 120 ரூபாய்க்கும், செண்டுமல்லி 100 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    நாளை முகூர்த்த நாள் என்பதால் அனைத்து பூக்களின் விலைகளும் சற்று உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரி வித்தனர். பொதுமக்களும் பூக்களை வாங்க அதிக அளவில் மார்க்கெட்டுகளில் திரண்டதால் விற்பனை அதிகமாக நடைபெற்றது.

    • வனப்பகுதியில் காட்டு மல்லி பூ வழி நெடுக பூத்துக்குலுங்குகிறது.
    • மேலும் மல்லி பூவின் வாசம் ரம்மியாக உள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை மலை வனப்பகுதி 1,700 ஏக்கர் பரப்பரளவு கொண்டது. இந்த பெரிய மலையில் தான் 4 கிலோ மீட்டர் மலை வழி பயணம் செய்தால் மலை மீதுள்ள முருகன் கோவிலை அடையலாம்.

    வரலாற்று சிறப்பு மிக்க முருகனை தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பலர் தங்களது குழந்தைகளுடன் குடும்பம், குடும்பமாக சென்னிமலை முருகனை தரிசித்து மலை அழகினை ரசித்தும், செல்பி எடுத்தும் செல்கின்றனர்.

    இந்த வனப்பகுதியில் தற்போது காட்டு மல்லி பூ வெள்ளை போர்வை போர்த்தியது போல் ஆங்காங்கே மலை பாதை வழி நெடுக பூத்துக்குலுங்குகிறது.

    மேலும் மல்லி பூவின் வாசம் ரம்மியாக உள்ளது. அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் இந்த பூக்கள் வெள்ளை வெள்ளையாக தெரிகிறது.

    இதை மலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர். காட்டு மல்லியின் வாசனை மிக நன்றாக தெரிகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு தான் ஏராளமான பூக்கள் பூத்து குலுங்கிறது என்கின்றனர் வன ஆர்வலர்கள்.

    மழை இல்லை எனில் பூக்கள் உற்பத்தி இவ்வளவு இருக்காது. குறைந்த அளவில் பூக்கும். மழை பெய்ததால் ஒரு சேர அனைத்து மரங்களிலும் பூத்துள்ளது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    • கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.2,500-க்கு விற்பனையானது.
    • கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

    மதுரை

    உலகம் முழுவதும் வெகுவி மரிசையாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை மதுரையிலும் நாளை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை கடந்த மூன்று நாட்களை ஒப்பிடு கையில் கிலோ 1500 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

    இன்று 2500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ மல்லிகை பூ ஆயிரம் ரூபாய் என்று விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ஒரு கிலோ மல்லிகை 2500 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. அது போல பிச்சி மற்றும் முல்லை பூக்கள் கிலோ 1200 ரூபாய்க்கும், அரளி, சம்பங்கி மலர்கள் கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

    இது தொடர்பாக மலர் வியாபாரிகள் கூறுகையில் தற்போது பனி அதிகமாக உள்ளதால் மல்லிகைப்பூ வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது. இந்த விலை வருகிற புத்தாண்டு வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற பூக்களின் விலை வழக்கம்போல இருப்பதால் பூ மார்க்கெட்டில் பொது மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி வருகிறார்கள்.

    • மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து சென்று கொண்டு இருக்கின்றனர்.
    • கனகாம்பரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் நாளை (24-ந் தேதி) தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முதல் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து சென்று கொண்டு இருக்கின்றனர். தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அமாவாசை, சஷ்டி தொடங்குவதால் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திரண்டு தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி சென்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை மற்றும் விழாக்காலங்கள் தொடர்ந்து இருந்து வருவதால் பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.

    இதில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரும்பு 800 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ 1,000 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை மட்டும் வாங்கி சென்றதையும் காணமுடிந்தது. மேலும் தற்போது மழை காலம் தொடங்கியுள்ள நிலையிலும் விழா காலங்கள் தொடர்ந்து இருப்பதால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளதாக பூ வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×