கிடுகிடுவென உயர்ந்த மல்லிகைப்பூ விலை- கிலோ ரூ.7500க்கு விற்பனை

தொடர் மழை காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது.சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது.
கிடுகிடுவென உயர்ந்த மல்லிகைப்பூ விலை- கிலோ ரூ.7500க்கு விற்பனை
Published on

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

அதனால், தொடர் மழை காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் விளைவாக சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது.

இந்நிலையில், இன்று சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேசமயம் கன்னியாகுமரி தோவாளை மலர்சந்தையில் ரூ.4000-க்கு விற்பனையாகிறது.

நாளை இந்தாண்டின் கடைசி முகூர்த்த நாள் என்பதும் மல்லிகைப்பூ விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com