வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.கீரைத்துரை போலீசில் புகார் செய்தார்.
வாலிபர் தற்கொலை
Published on

மதுரை

காமராஜர்புரம் கக்கன் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன் திருமுருகன் (வயது23). இவர் அரசு வேலைக்காக 2 வருடங்களாக படித்து வருகிறார். இவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமுருகனின் தந்தை முத்துராமலிங்கம் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com