search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதரவற்ற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இலவசமாக ஆட்டோக்கள் வழங்கப்படும்
    X

    ஆதரவற்ற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இலவசமாக ஆட்டோக்கள் வழங்கப்படும்

    • ஆதரவற்ற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இலவசமாக ஆட்டோக்கள் வழங்கப்படும்.
    • இந்த ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது ரோட்டரி மாவட்டம் 3000. இந்த ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வருகிற2-ந்தேதி பதவி யேற்க உள்ளார்.

    இதை முன்னிட்டு மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    எங்களது ரோட்டரி சங்கம் மூலம் ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்து, டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக்கொடுத்து இ-ஆட்டோ வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி களுக்கு சவாரி எடுக்கவும், ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். இதன் மூலம் அவர்களின் வருமானம், வாழ்க்கை தரம் உயர ரோட்டரி சங்கம் உறுதுணையாக இருக்கும். 2024-ம் ஆண்டுக்குள் ரூ. 4 கோடி மதிப்பில் ஒரு சங்கத்துக்கு ஒரு ஆட்டோ வீதம் 127 ஆட்டோ ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு வழங்கப்படும்.

    சுகாதார வசதி இல்லாத மாணவிகள் பயிலும் அரசு பள்ளியை கண்டறிந்து கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படும். 12 மாதங்களில் 12 திட்டங்கள் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். வருகிற 1-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மேம்பாட்டுக்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மண்டல ஒருங்கிணைப் பாளர் அசோக், உதவி ஆளுநர் கவுசல்யா, ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் சேர்மன் நெல்லை பாலு, மகிழ்ந்திரு, மகிழ்வித் திரு திட்ட ஒருங்கிணைப் பாளர் மாதவன் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×