ஓட்டலில் பணம் பறித்த கும்பல்

ஓட்டலில் சாப்பிட்டு பணம் பறித்த கும்பல் தப்பி ஒட்டம் உரிமையாளர் பாண்டி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார்.
ஓட்டலில் பணம் பறித்த கும்பல்
Published on

மதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மிளகனூரை சேர்ந்தவர் பாண்டி (வயது31). இவர் கீரைத்துறை சிந்தாமணி ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு 6 வாலிபர்கள் சாப்பிட சென்றனர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றனர்.

அவர்களிடம் உரிமை யாளர் பாண்டி பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அவரை ஆபாசமாக பேசி கத்திமுன்னையில் மிரட்டி ஓட்டல் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து உரிமையாளர் பாண்டி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் பணம் பறித்த வாலிபர்கள் ஆவாரங்காட்டை சேர்ந்த லட்சுமணன் அகிலன், கண்ணன் என்ற கேடி கண்ணன், நிதீஷ் குமார், கோலிகுமார், தனுஷ் என்று தெரியவந்தது. அவர்கள் 6பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com