என் மலர்
மதுரை
- முதியவர் உள்பட 2 பேரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதில் தொடர்புடைய கோழிகுமார், தனுஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாநகரில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, நகைப்பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலும் 17 வயதுடைய இளைஞர்கள் தான் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-
மதுரை ஆண்டாள் கொட்டாரம் கபீர் நகரை சேர்ந்தவர் முத்து கருப்பன் (வயது60). இவர் சம்பவத்தன்று அண்ணா நகரில் உள்ள ஆரம்ப சுகாதாரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி ரூ.3 ஆயிரத்து 250-ஐ பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சென்னை வடபழனியை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் பவித்ரன், திருநகர் 3-வது நிறுத்தம் நல்லான் மகன் ராஜேஷ் குமார் (37), திருப்பாச்சேத்தி ஆவாரங்காடு முருகன் என்ற குட்டை முருகன் (40), திண்டுக்கல் பேகம்பூர் சக்திவேல் மகன் சுபாஷ் (23) ஆகிய 4 பேர் முதியவரிடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லாபுரம் வேலுபிள்ளை தெருவை சேர்ந்தவர் துரைபாண்டி. இவரது மகன் செல்வம்(30). இவர் சம்பவத்தன்று நாகுபிள்ளை தோப்பு ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது 6 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் மிரட்டி பணத்தை பறித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் வழிப்பறியில் ஈடுபட்டதுமானாமதுரை ஆவாரங்காடு சிவசிங்கம் மகன் லட்சுமணன் (32),மானாமதுரை ஆவாரங்காடு சரவணகுமார் மகன் அகிலன் (22), சிவகங்கை திருப்புவனம் நந்தகோபால் மகன் கண்ணன் என்ற கேடி கண்ணன் (20), சிவகங்கை கலியநத்தூர் முருகன் மகன் நிதிஷ்குமார் என தெரியவந்தது.
இவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய கோழிகுமார், தனுஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- இலவச சிறுநீரக பரிசோதனை முகாம் நடந்தது.
- மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
மேலூர்
தமிழக முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டம், வருமுன் காப்போம் திட்டத்துடன் இணைந்து தனியார் ஆஸ்பத்திரி சார்பில், மேலூர் டைமண்ட் ஜூப்ளி கிளப்பில் சிறப்பு சிறுநீரக பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடந்தது.
இந்த முகாமில் டாக்டர் சிவக்குமார், மேலாளர் சாமுவேல் மற்றும் மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு சிறுநீரகம், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
முகாமில் மேலூர் டைமண்ட் ஜூப்ளிக் கிளப் தலைவர் மணிவாசகம், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம், ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- அன்னதானம் வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கோணப்பட்டி கிராமத்தில் உள்ளது பகவதிஅம்மன் என்ற மந்தையம்மன் கோவில் உள்ளது.
இங்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தன. கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோணப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- ரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அய்யப்பன் எம்.எல்.ஏ. புகார் கூறினார்.
- தரம் இல்லாத கம்பி, மண், சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு தண்ணீர் ஊற்றி கட்டப்படவில்லை.
திருமங்கலம்
மதுரை அருகே உள்ள செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்னியான் ஊராட்சி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி யில் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் படித்து வருகிறார்கள்.
இங்கு போதிய இடவசதி இல்லாததால் நபார்டு வங்கி மூலம் ரூ.55 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு 2 மாதங்களுக்கு முன்பு பயன் பாட்டுக்கு கொண்டுவரப்பட் டது. இந்த கட்டிடத்தில் உள்ள வகுப்பறை கட்டிடத்தின் ஒரு அறையில் கடந்த வாரம் முதல் மாண வர்கள் பயின்று வருகின்ற னர்.
மற்றொரு அறையில் ஸ்மார்ட் கிளாஸ் அமைப்ப தற்காக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவா ளருமான அய்யப் பனிடம் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தி ருந்தனர்.
இதனை தொடர்ந்து ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துக் கொடுப்ப தற்காக அய்யப் பன் எம்.எல்.ஏ. புதிதாக கட்டப் பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ஆய்வு செய்தபோது கட்டிடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஆசிரி யர்களிடம் மாணவர்க ளின் பாது காப்பற்ற சூழல் உள்ளதால் மாணவர்களை வகுப்பறைக் குள் அனுமதிக்க வேண்டாம் என வலியுறுத்தினார். தொடர்ந்து அய்யப்பன் எம்.எல்.ஏ கூறியதாவது:-
உசிலம்பட்டி சட்ட மன்றத்திற்கு உட்பட்ட 10-க் கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளில் கூடுதல் வகுப் பறை கட்டிடங்கள் கட்டுவ தற்கான பணிகளை ஆய்வு மேற்கொண்ட போது தரம் இல்லாத கம்பி, மண், சிமெண்ட் மற்றும் கட்டு மான பொருட்களைக் கொண்டு தண்ணீர் ஊற்றி கட்டப்படவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் முதல மைச்சருக்கு தரமான கட்டிடங்கள் கட்ட வேண்டு மென கடிதம் எழுதியிருந்தேன். அதன் அடிப்படையில் செயற்பொறியாளர் கட்டி டங்கள் தரமான முறை யில் கட்டப் பட்டதாக பதில் கடிதம் அனுப்பி யிருந்தார்.
இந்நிலையில் ஸ்மார்ட் கிளாஸ் வேண்டுமென பள்ளி சார்பில் எனக்கு கோரிக்கை வைத்தனர். இதற்காக ஆய்வு செய்ய வந்தபோது அனைத்து சுவர்களும் விரிசல் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது பன்னியான் ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- வாடிப்பட்டி, சோழவந்தானில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- ரத வீதிகள் வழியாக பேரணி நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தானில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம் தலைமை தாங்கினார்.பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாரியம்மன் கோவில், சன்னதி தெரு, பெரிய கடை வீதி, ரத வீதிகள் வழியாக பேரணி நடந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சத்யபிரகாஷ், சப்-இன்ஸ் பெக்டர் முத்து தலைமை காவலர்கள் மாரியப்பன், பெரியமாயன் உக்கிர பாண்டியன், விவே கானந்தா கல்லூரி முதல்வர் வெங்கடேசன், அரசு பள்ளி தலைமை ஆசிரி யர்கள் சரவணன், தீபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டியிலும் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. போலீஸ் இன்ஸ் பெக்டர் நித்யபிரியா தலைமை தாங்கினார். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் எட்வின் ராஜா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாயாண்டி, சேர்வை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் விஜயரெங்கன், மதுவிலக்கு பிரிவு ஏட்டு நாகூர்கனி, ஏட்டு நாகராஜன், விவசாய ஆசிரியர் சுரேஷ், உடற்கல்விஆசிரியர்கள் சுரேஷ், பாண்டி, ஸ்டாலின் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சொசைட்டிதெரு, தாதம்பட்டி மந்தை, பெருமாள் கோவில், ஜெமினி பூங்கா, போஸ்ட் ஆபிஸ், பஸ் நிலையம், லாலாபஜார் வழியாக பேரணி நடந்தது.
- தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 94, 95-வது வார்டு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. திருநகர் பகுதியில் பொதுமக்கள், நடைபயிற்சி செல்வோர், மாணவ-மாணவிகள், பெண்கள் அதிகளவில் சென்று வரும் சாலைகளில் நாய்கள் கூட்டமாக திரிகின்றன.இவைகள் வாகனங்களில் செல்ப வர்களையும் துரத்துகின்றன. இதனால் அவர்கள் பயந்து கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.
மேலும் வீட்டில் வளர்க்கப்படும் கோழி, ஆடு, வாத்து போன்ற வளர்ப்பு பிராணிகளை நாய்கள் தூக்கிச்செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்துட னேயே வெளியே சென்று வருகின்றனர்.
நாய்களுக்கு கருத்தடை செய்யப் பட்டு அவற்றின் இனப்பெருக்கம் தடுக்கப்படுவதாக மாநக ராட்சி சார்பில் கூறப்பட்டா லும், தொடர்ந்து தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே கூட்டமாக திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கருப்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பின் இந்த கண்மாயில் மீன்களை விட்டுச்செல்வது வழக்கம்.
- பெரும்பாலானோருக்கு பல்வேறு ரக மீன்கள் கிலோ கணக்கில் கிடைத்தன.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள முதலைக்குளம் கருப்பு கோவில் அருகே முதலைக்குளம் கண்மாய் உள்ளது. 487 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாய் மூலம் இந்தப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது.
கருப்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பின் இந்த கண்மாயில் மீன்களை விட்டுச்செல்வது வழக்கம்.
இந்த கண்மாயை ஏலம் விடும் நடைமுறை இல்லை. ஆனால் வருடந்தோறும் முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா உற்சாகமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது.
மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று இரவு முதல் முதலைக்குளம் கண்மாயை முற்றுகையிட்டனர். இன்று அதிகாலை 5 மணிக்கு கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி, பெரியாறு பாசன கூட்டமைப்பு தலைவர் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜை முடிந்தபின் 3 முறை வெடிகள் வெடிக்கப்பட்டு மீன்பிடி திருவிழா தொடங்கியது. வெடி வெடித்து முடித்தவுடன் கரையில் நின்றிருந்த சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் முதலைக்குளம் கண்மாயில் திபுதிபுவென இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்பிடித்தனர்.
இதில் பெரும்பாலானோருக்கு பல்வேறு ரக மீன்கள் கிலோ கணக்கில் கிடைத்தன. அவர்கள் மகிழ்ச்சியுடன் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
- கணேசன் கருணாநிதி சிலை முன்பாக தான் வைத்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
- தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் இந்த போராட்டம் மதுரையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் பல்வேறு விவகாரங்களில் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பேசிவருகிறார். இதனால் தமிழக கவர்னரை மாற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மானகிரி பகுதியை சேர்ந்த ஆவின் தி.மு.க. தொழிற்சங்க தலைவரான கணேசன், தமிழக கவர்னரை ஜூன் 27-ந் தேதிக்குள் மத்திய அரசு மாற்றாவிட்டால், 28-ந் தேதி மதுரை சிம்மக்கலில் உள்ள கருணாநிதி சிலை முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து சாவேன் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு போஸ்டர் ஒட்டியிருந்தார்.
அவரின் இந்த நடவடிக்கை மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அறிவித்தபடி இன்று வரலாம் என்று கருதப்பட்டது. இதனால் அவர் கூறிய இடத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு திடீரென காரில் வந்த கணேசன், கருணாநிதி சிலை முன்பாக தான் வைத்திருந்த மண் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி கைது செய்து அழைத்துச் சென்றனர். தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் இந்த போராட்டம் மதுரையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
- 91 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை
மதுரை தல்லாகுளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செல்லூர் வணிக வளாகம் ஒன்றில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வ விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. அங்கிருந்து 91 கிலோ புகையிலை பொருட்கள், 4 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள், ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 160 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய ஜலில் இப்ராகிம்(61), எஸ்.ஆலங்குளம் அலமேலு நகர் ராஜேந்திரன் மகன் பாண்டியராஜன்(27), ஒத்தக்கடை அண்ணாமலை நகர் மாரியப்பன் மகன் கணேசன்(39), செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு கருப்புசாமி மகன் முருகேசன் (58), செல்லூர் பூந்தமல்லி மாரியப்பன் மகன் தினேஷ் குமார் (26), மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி 5-வது குறுக்கு தெரு திருச்சிற்றம்பலம் மகன் அருண்குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
- மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிக்கப்பட்டது.
- கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை எஸ்.ஆலங்குளம் டிசைன்நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமாரி(வயது67). இவர் அதே பகுதியில் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற நபர்கள், அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கசெயினை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து விஜயகுமாரி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வண்டியூர் சி.எஸ்.ஆர். தெரு பாலச்சாமி மகன் விஜய் (வயது26). இவர் வண்டியூர் மெயின் ரோடு மாநகராட்சி வாட்டர்டேங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து ஆயுதங்களை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.5400-ஐ வழிப்பறி செய்து தப்பினர். இந்த சம்பவம் குறித்து விஜய் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் பறித்த 5 வாலிபர்களை தேடி வருகின்றனர்.
- கிராமசபை கட்டிடத்தில் பேட்டரிகள் திருடப்பட்டது.
- ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் கொடிக்குளம் ஊராட்சி செயலர் ஜெகநாதன் புகார் செய்தார்.
மேலூர்
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ளது கொடிக்குளம். இங்கு ஊராட்சிக்கு சொந்தமான கிராம சபை கூட்ட அரங்கம் உள்ளது.
இந்த கட்டிடத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த 3 யு.பி.எஸ். பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் கொடிக்குளம் ஊராட்சி செயலர் ஜெகநாதன் புகார் செய்தார். அதன் பேரில் ஒத்தக்க டை இன்ஸ்பெ க்டர் சுகுமாறன், சிறப்பு சப்-இன்ஸ்பெ க்டர் பாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பேட்டரிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.
- குடோனில் இரும்பு பொருட்களை திருடி எடைக்கு போட்டவர் கைது செய்யப்பட்டார்.
- அதன் மதிப்பு ரூ.60 ஆயிரமாகும்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் இரும்பு பொருட்கள் வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் திருவள்ளூரை சேர்ந்த பத்மநாபன் (வயது 55) என்பவர் தனக்கு சொந்த மான டிராக்டர் தொழிற்சா லைக்கு பயன்படுத்தும் இரும்பு டிஸ்க் பொருட்களை வைத்திருந்தார்.
அந்த குடோனுக்கு மேலாளர் கணேசன் ஆய்வு செய்தபோது, இரும்பு பொருட்கள் திருடப்பட்டி ருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு
ரூ.60 ஆயிரமாகும். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அந்த குடோனில் திருடிய பொருட்களை இரும்பு கடைகளில் சானாம் பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவர் எடைக்கு போட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.






