மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிக்கப்பட்டது.கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மூதாட்டியிடம் செயின் பறிப்பு
Published on

மதுரை

மதுரை எஸ்.ஆலங்குளம் டிசைன்நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமாரி(வயது67). இவர் அதே பகுதியில் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற நபர்கள், அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கசெயினை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து விஜயகுமாரி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

வண்டியூர் சி.எஸ்.ஆர். தெரு பாலச்சாமி மகன் விஜய் (வயது26). இவர் வண்டியூர் மெயின் ரோடு மாநகராட்சி வாட்டர்டேங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து ஆயுதங்களை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.5400-ஐ வழிப்பறி செய்து தப்பினர். இந்த சம்பவம் குறித்து விஜய் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் பறித்த 5 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com