என் மலர்tooltip icon

    மதுரை

    • 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • அண்ணாநகர் எஸ்.எம்.பி. காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் அர்ஜூன் என்பவரை ேபாலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுைர மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் பலனில்லை. சமூக விரோதி கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர்.

    கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க ேபாலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன்படி சம்ப வத்தன்று தல்லாகுளம் போலீசார் புதுநத்தம் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஓம்சக்தி கோவில் அருகே 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர்.

    அவர்கள் ேபாலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர். உடனே போலீசார் 2 பேரையும் விரட்டி பிடித்து ேசாதனையிட்டபோது அவர்களிடம் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    தொடர் விசாரணை யில் அவர்கள் ஆண்டிப்பட்டி கள்ளர் தெருவை சேர்ந்த விருமாண்டி(வயது52), மணியாரம்பட்டி கணேசன்(52) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை ஒபுளாபடித்துரை பகுதியில் மதிச்சியம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அண்ணாநகர் எஸ்.எம்.பி. காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் அர்ஜூன் என்பவரை ேபாலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

    • தமிழ்நாடு நாடக நடிகர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாடக நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தமிழ்நாடு நாடக, நடிகர் சங்கத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழு கூடி தேர்தல் முறையில் புதிய தலைவர் செயலாளர் பொருளாளரை தேர்வு செய்தனர். புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளிடம் முன்னாள் நிர்வாகிகள் சங்க கணக்கு வழக்குகளை ஒப்படைப்பது வழக்கம். இந்த நிலையில் முன்னாள் சங்க நிர்வாகிகள் சங்க கட்டிடம் கட்டியது, வசூல் பெற்றது ஆகியவற்றில் முறைகேடு செய்ததை தொடர்ந்து அவர்களை சங்கத்தில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். அதை பதிவாளரிடம் சமர்ப்பித்தனர். தீர்மானங்கள் செல்லாது எனவும், பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பதிவாளர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து தமிழ்நாடு நாடக, நடிகர் சங்க பேரவை கூட்டம் மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் தலைவர் கலைமணி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாடக நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடப்பட்டது.
    • இதுகுறித்த புகாரின்பேரில் புதூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    கப்பலூர் அருகே உள்ள உச்சப்பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார்(வயது28). இவர் சம்பவத்தன்று தனது காரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையம் அருகே நிறுத்திவிட்டு சென்றார். மர்மநபர் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், ஐபேட், ஸ்மா ர்ட் வாட்ஸ், ஹெட்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி னான். இதுகுறித்த புகாரின்பேரில் புதூர் போலீ சார் வழக்குப்ப திவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
    • ஜூலை மாதம் 15-ந்தேதி திறந்து வைத்து பெருமை சேர்க்க உள்ளார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகம் திறப்பு விழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

    இவ்விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து வடக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் மூர்த்தி, மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடப் பட்டி மணிமாறன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகம் போற்றும் மாபெரும் தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டா டப்பட்டு வருகிறது.

    மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவி கள் பல்வேறு போட்டி கள் நடத்தி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தென்னகமே போற்றும் வகையில் சரித்திர சான்று படைக்கும் வகையில் மதுரையில் மாபெரும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் சுமார் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    மதுரையில் மற்றொரு அடையாளமாக வரவுள்ள சிறப்பு மிக்க இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நம் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகிற ஜூலை மாதம்

    15-ந்தேதி திறந்து வைத்து பெருமை சேர்க்க உள்ளார். இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஒரு மாநாடு போல் வரலாற்று சிறப்புமிக்கதாக திகழும் வகையில் ஏற்பாடுகள் செய்வது குறித்தும், மதுரையே விழா காணும் வகையில் ஏற்பாடுகள் செய்வது குறித்தும் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணியளவில் மதுரை பசுமலையில் உள்ள கோபால்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் , பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், த்தினர் என பெரும் திரளானோர் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறா ர்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் பெரிய பூசாரி பட்டம் சூட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரையோ அல்லது நீதிமன்றத்தை நாடலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் பாப்பாபட்டி கிராம பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பாப்பாபட்டியில் அமைந்துள்ளது ஒச்சாண்டம்மன் கோவில். இக்கோவிலின் பெரிய பூசாரியாக இருந்த ராமகிருஷ்ணன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு இறந்துவிட்டார். அவர் இறந்த பின்பு பெரிய பூசாரி இடம் காலியாக இருந்தது. இந்த நிலையில் பெரிய பூசாரி பட்டம் 5-வது வகையறவை சேர்ந்த சிவத்த கருப்பன் வகையறாவில் ராஜா, ஜெயபிரகாஷ், அசோக், சங்கர், செல்ல பாண்டி ஆகிய 5 பேர் பெரிய பூசாரி பட்டத்திற்கு போட்டியிடுகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த செல்ல் பாண்டி என்பவரும் பெரிய பூசாரி பட்டத்திற்கு போட்டி யிடுகிறார்.இதனால் இருதரப்பி னருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது குறித்து கோட்டாட்சியர், முன்னி லையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் செல்லப்பாண்டி மற்றும் சிவத்த கருப்பன் வகையறாவை சேர்ந்தவர் களுடன் கோட்டாட்சியர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சிவத்த கருப்பன் வகையறாவை சேர்ந்தவர்கள் ஆஜராகததால் செல்லப்பாண்டியை பூசாரியாக நியமனம் செய்யப்படுவதாக கோட்டாட்சியர் அறிவித்தார்.

    இதை எதிர்த்து மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் 20-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். மனுவை பரிசீலித்த கலெக்டர் சங்கீதா கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். இப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரையோ அல்லது நீதிமன்றத்தை நாடலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    • வாடிப்பட்டியில் மலேரியா விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • மாணவ மாணவிகள் கலந்துகொண்டு மலேரியா விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டனர்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக மலேரியா விழிப்புணர்வு கருத்தரங்கு கண்காட்சி தாய் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. கருத்தரங்கிற்கு மாவட்ட மலேரியா அலுவலர் வரதராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், மருத்துவ அலுவலர் சந்திர பிரபா, இளநிலை பூச்சிகள் ஆய்வாளர் ராமு, கணேஷ் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், பிரபாகர், சதீஷ், இனியகுமார், மாணவ மாணவிகள் கலந்துகொண்டு மலேரியா விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டனர்.

    • அலங்காநல்லூர் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • மருத்துவ குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைந்து சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் முகாமை தொடங்கி வைத்தார். அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் பொது மேலாளர் சாந்தி வரவேற்றார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நடராஜகுமார், துணைப் பதிவாளர் பால்வளம் செல்வம், உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினர். சிறந்த பசுவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • பாலத்தில் இருந்து கீழே விழுந்த ஒரு வயது குழந்தை இறந்தது.
    • போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நகரில் உள்ள தெற்குவசால் என்.எம்.ஆர்.பாலத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. 30 ஆண்டு களுக்கு மேலான பழைய பாலம் என்பதால் சில இடங்களில் பாலத்தின் தடுப்புகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

    மேலும் பாலம் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பாலத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்குவதும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தெற்கு வாசல் பாலத்தில் தந்தை யுடன் சென்ற 1 வயது பெண் குழந்தை தவறி விழுந்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    மதுரை சோலையழகு புரம் முதல் தெருவை சேர்ந்தவர் முத்துகருப்பன். இவருக்கு 1 வயதில் கவிப்பிரியா என்ற மகள் இருந்தார். சம்பவத்தன்று தனது மகளை மோட்டார் சைக்கிளின் முன்புறம் அமரவைத்து வெளியே புறப்பட்டார்.

    தெற்குவாசல் என்.எம்.ஆர்.பாலத்தில் சென்ற போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக முத்து கருப்பன் திடீரென பிரேக் பிடித்தார். இதில் மோட்டார் சைக்கிள் முன்பு அமர்ந்தி ருந்த கவிப்பிரியா நிலை தடுமாறி பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தாள். இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய கவிப்பிரியாவை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேரோட்ட பாதைகளுக்கு இடையூறு இன்றி அமைக்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் தற்போது ரூ. 8 ஆயிரத்து 500 கோடியில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ெரயில் திட்டத்திற்கு 20 சதவீதம் மத்திய அரசு பங்கும், 20 சதவீதம் மாநில அரசு பங்கும், 60 சதவீத நிதி உதவியுடன் நடைபெறுவ தாக கூறப்பட்டுள்ளது.இதற்காக பல்வேறு இடங்களில் மண் பரிசோ தனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 31 கிலோமீட்டர் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் 21 நிறுத்தங்கள் நிலத்திலும், 6 நிறுத்தங்கள் பூமிக்கடியில் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    இதில் மூன்று பெட்டிகள் பொருத்தப் பட்டு 750 முதல் 900 வரை மக்கள் பயணம் செய்யும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

    இந்த மெட்ரோ ெரயில் திட்டத்தில் பூமிக்கு அடியில் அமைக்கும் போது பல்வேறு பழமையான கட்டிடங்கள் உள்ளது. அதையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக யானைக்கல் முதல் பெரியார்நிலையம் பகுதி வரை உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. அதே இடத்தில் தான் மெட்ரோ திட்டமும் வருகிறது. ஒரே இடத்தில் இரு வழித்தடங்களால் குழப்பம் ஏற்படுகிறது இதற்கு உரிய விளக்கத்தை அரசு வழங்க வேண்டும்.

    மீனாட்சி அம்மன் கோவில் அருகே திட்டம் வருகிறது என்று கூறுகி றார்கள். மதுரையில் பாரம்பரியமிக்க மாசி வீதிகளில் தேர் வரும் இடத்தில் பூமிக்கு அடியில் அமைக்கும் போது எந்த இடையூறும் இல்லாமல் அமைக்கப்பட வேண்டும்.

    தேரோட்டத்திற்கு எந்த இடையூறு இல்லாமல் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக உரிய பாது காப்பை பார்க்க வேண்டும்.

    மேலும் பூமிக்கு அடியில் அமைக்கும் பொழுது ஏற்கனவே குடிநீர் திட்டப்பணிகள், மின்சார கேபிள் உள்ளிட்ட இணைப்புகளை சரி பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பசுமலை முதல் பழங்காநத்தம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளனர்.

    மதுரை

    மதுரை நகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு ரூ.1,295 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் செயல் கபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

    இதற்காக தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் இருந்து 125 எம்.எல்.டி.குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப் பட்டு வைகை அணை அருகே உள்ள பண்ணை பட்டியில் சுத்திகரிக்கப்பட உள்ளது. பின்னர் அங்கி ருந்து மதுரை நகருக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் மதுரை நகரில் தற்போது நடை பெற்று வருகின்றன.

    அதன்படி திருப்ப ரங்குன்றம் அருகே யுள்ள மூலக்கரையில் இருந்து பழங்காநத்தம் வரை முதற்கட்டமாக பூமிக்கடி யில் ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. இதற்காக மூலக்கரை -பழங்காநத்தம் வரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இரவு, பகலாக பள்ளம் ேதாண்டி குழாய் பதிக்கும் பணிகள் நடக்கி றது. ஆனால் இந்தப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் எந்த வித முன்னேற்பாடு நட வடிக்கைகளும் எடுக்க வில்லை. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் சாலை யில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    இந்தநிலையில் இன்று காலை குடிநீர் திட்டப்பணி களால் பழங்காநத்தம், ஆண்டாள்புரம், பசுமலை, மூலக்கரை, பைக்காரா, வசந்தநகர் ஆகிய பகுதி களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ், லாரிகள், கார், ஆட்டோ போன்றவை இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறுக்கும், நெடுக்குமாக சென்றதை காண முடிந்தது. காலை 9 மணி முதல் 12 மணி வரை போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இதனால் இந்த மார்க்கத்தில் பயணம் மேற்கொண்டவர்கள் கடும் அவதியடைந்தனர். அவசர வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், நோயாளிகள் ஆகியோர் கடும் அவதி யடைந்தனர். போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை. மாறாக போக்குவரத்து பாதிப்பு அதிகமானது.

    இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், கடந்த ஒரு வார காலமாக குடிநீர் திட்டப்பணிகள் திருப்ப ரங்குன்றம் சாலையில் நடந்து வருகிறது. பணிகள் தொடங்கிய நாளில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. இன்று வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது.

    இனி வரும் நாட்களி லாவது மேற்கண்ட பணி களை இரவில் மேற்கொள்ள வேண்டும். போக்கு வரத்துக்கு பாதிப்பு ஏற்ப டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளனர்.

    • மதுரையில் புதிய உரங்கள் குறித்த அறிமுக கூட்டம் நடந்தது.
    • விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மதுரை மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் புதிய உரங்கள் தயாரிப்பு குறித்த அறிமுக கூட்டம் நடந்தது.

    மதுரை மண்டல கூட்டு றவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான ஜீவா சிறப்புரையாற்றினார்.

    இக்கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் அதிகமான விவசாயி களுக்கு டான்பெட் உரம் தயாரிப்பு குறித்தும், இதன் பயன்பாடு, உரமிடும் முறை குறித்தும், உயிர் உரங்கள், உயிர்பூச்சிக் கொல்லிகள், நுண்ணூட்ட உரங்கள், நீரில் கரையும் உரங்கள், மண்புழு உரம் மற்றும் நெல்விதைகள் குறித்தும் துணைப் பதிவாள ரும், மண்டல மேலாளருமான பார்த்திபன் விளக்கினார்.

    இதில் மதுரை சரக துணைப்பதிவாளர் ராஜேந்திரன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளர் அமிர்தா, துணைப்பதிவாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் போது டான்பெட்டின் புதிய தயாரிப்புகள் விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னி லையில் அறிமுகப்படுத்தப் பட்டது.

    • மதுரையில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டும் என்று சப்புராம் கூறினார்.
    • கட்டண சலுகையை மூத்தகுடி மக்களுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணன் ஆகியோருக்கு, தென்னக ெரயில்வே மண்டல பயனீட்டாளர் ஆலோசனை கமிட்டி உறுப்பினர் சுப்புராம் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதா வது:-

    மதுரையில் இருந்து ஐதராபாத் செல்ல நேரடி ரெயில் சேவை இல்லை. எனவே சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் ரெயில்களில் ஒரு ரெயிலை சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரைக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.

    மேலும் மதுரையில் இருந்து திருப்பதி செல்வ தற்கு தினசரி ெரயில் இயக்கப்பட வேண்டும். உயிரிழப்பு போன்ற அசாதா ரணமான சூழ்நிலையில் பயணிகளுக்கு உதவிடும் வகையில் காப்பீட்டு திட்டங் களை மிக எளிமையான முறையில் செயல்படுத்தி நுகர்வோர்களுக்கு இழப்பீடு விரைந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் ெரயிலில் பயணம் செய்பவர்களின் உயிரை பாதுகாக்கும் வகையில் ரயில் மற்றும் தண்டவாளங் களில் பராமரிப்பு பணி களை மேம்படுத்த வேண்டும்.

    பயணிகளின் எண்ணிக் கையை கருத்தில் கொண்டு மதுரையில் இருந்து ராமேசுவரம், கன்னியா குமரி, கோவை, திருச்சி, நாகப்பட்டினம் போன்ற இடங்களுக்கு தினமும் இருவேளை ரெயில்களை இயக்க வேண்டும்.

    ராமேசுவரம் பாம்பன் கடலில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ரெயில்வே தூக்கு பாலத்தை பாரம் பரிய சின்னமாக அறி விக்க வேண்டும்.

    மதுரை ரெயில் நிலை யத்தில் பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடல்நகர் ரெயில் நிலையத்தை மேம்படுத்தி அங்கு ரெயில்கள் நின்று செல்லும் வகையில் ரெயில்வே நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மதுரை, ராமேசுவரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்யும் கைவினை பொருட்களை விற்க ஏதுவாக இலவச ஸ்டால் களை ஏற்படுத்தி தர வேண்டும்.

    மதுரையில் இருந்து சென்னை வரை இயங்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் வேகத்தை அதிகரிப்பதுடன் அதன் பயண நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும். ரெயிலில் மூத்த குடிமக்களுக்கு பெண்க ளுக்கு 50 வயதுக்கு மேல் 50 சதவீதம் சலுகை கட்ட ணம், ஆண்களுக்கு 60 வயதுக்கு மேல் 40 சதவீத சலுகை கட்டணம் நடை முறையில் இருந்து வந்தது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த கட்டண சலுகையை மூத்தகுடி மக்களுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    ×