என் மலர்
மதுரை
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள ஆதி கோரக்கநாதர் சாமி கோவில் உள்ளது.
- இரு பிரிவினருக்கு இடையே கோவில் அறங்காவலர் நியமனம் குறித்து பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது.
மதுரை:
மதுரையை சேர்ந்த முத்து கணேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள ஆதி கோரக்கநாதர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையான நூற்றாண்டுகள் கடந்த கோவிலாகும். இந்தக் கோவில் ஒரே சமூகத்திற்கு சார்ந்ததாக இருந்து வருகிறது.
இந்த சமூகத்தை சார்ந்த இரு பிரிவினர் தொடர்ந்து கோவில் அறங்காவலராக இருந்து வந்த சூழலில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட நிர்வாக பிரச்சினை காரணமாக தற்போது சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மேற்பார்வையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கோவிலில் இந்து அறநிலையத்துறை மேற்பார்வை மட்டுமே செய்ய முடியும். வேறு எந்த பணிகளோ அல்லது நன் கொடைகளோ வசூலிக்க அதிகாரம் இல்லை. இந்தக் கோவிலில் தற்போது சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கண்காணிப்பில் அய்யனார் என்பவர் கோவில் ஆய்வாளராக இருந்து வருகிறார்.
இரு பிரிவினருக்கு இடையே கோவில் அறங்காவலர் நியமனம் குறித்து பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் "திருப்பணி" வேலைகளை கோவில் ஆய்வாளர் அய்யனார் செய்து வருகிறார். இது விதிகளுக்கு எதிரானது.
கோவில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் எந்த பணிகளும் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இடைக்கால தடை விதிக்கப்பட்ட போதிலும், நீதிமன்ற உத்தரவுகளை மீறி தொடர்ந்து பணி நடைபெறுகிறது. எனவே கோவிலில் எந்த பணியும் நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி அறநிலையத்துறை ஆய்வாளர் அய்யனார் கோவில் உள்ளே திருப்பணி வேலைகள் செய்து வருவதற்கான புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதனைப் பார்த்து கோபம் அடைந்த நீதிபதி, திருப்பணி குறித்து இடைக்கால தடை விதித்திருந்த போதிலும் நீதிமன்ற உத்தரவை மீறி இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் எவ்வாறு திருப்பணி வேலை செய்கிறார்.
இந்நிலை தொடர்ந்தால் அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் கோவில் ஆய்வாளர் அய்யனார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதி கோவிலில் எந்த பணிகளும் நடைபெறக்கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைத்தார்.
- தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்த குழந்தை இறந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசகாளன்பட்டியை சேர்ந்தவா் கண்ணன் (வயது24). இவருக்கு 1½ வயதில் ருத்ரபாண்டி என்ற ஆண் குழந்தை உள்ளது. ராயபாளையம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழா விற்காக கண்ணன் குடும்பத்துடன் உறவினர் லட்சுமி வீட்டிற்கு வந்தார்.
அந்த வீட்டில் பெயிண்ட் பணிகள் நடந்து கொண்டி ருந்தன. இதற்காக தின்னர் மற்றும் ெபயிண்டுகளை வைத்திருந்தனர். விளையாடிக் கொண்டி ருந்த ருத்ரபாண்டிக்கு தாகம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த தின்னரை பார்த்து குடிநீர் பாட்டில் என குழந்தை நினைத்துள் ளான். பின்னர் அந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து மயங்கினான்.
இதை பார்த்து அதிர்ச்சிய டைந்த உறவினர்கள் உடனடியாக குழந்தையை மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனா லும் சிகிச்சை பலனின்றி ருத்ர பாண்டி பரிதாபமாக இறந்தான்.
தின்னர் குடித்து குழந்தை பலியானது தொடர்பாக திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீதிமன்றத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரு மங்கலம் முன்சீப் கோர்ட் சார்பு நீதிமன்றம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வட்டாட்சி யர் அலுவலகம் வளாகத்தில் பாம்பு ஒன்று சுற்றி திரிந்தது திடீரென பொது மக்களை பார்த்தவுடன் அங்கிருந்த மரத்தில் ஏறியது.
அங்கிருந்தவர்கள் பாம்பை அப்புறப்படுத்த முற்பட்டனர் ஆனால் பாம்பு மரத்தில் கிளைக்கு சென்றது. இந்நிலையில் இது தொடர்பாக திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீய ணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் கழித்து வந்தனர்.
அதன் பின் நீண்ட நேரம் தேடிப் பார்த்தனர் ஆனால் பாம்பு தென்பட வில்லை பின்பு அங்கிருந்து சென்று விட்டனர். நீதிமன்ற வளாகத்தில் கழிப்பறை போன்ற அடிப்படை வசதி ஏதும் இல்லை. மேலும் தற்போ துள்ள கழிப்பறைக்கு செல்லும் வழியில் புதர்மண்டி காணப்படு கிறது.
இதனால் இது போன்ற விஷம் தன்மை கொண்ட பாம்புக்கள் அவ்வப்போது நீதிமன்ற வளாகத்தில் தென் படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மற் றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சோழவந்தான் ரெயில் நிலைய விரிவாக்க பணி தொடக்க விழா நடந்தது.
- பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில்வே நிலையத்தை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்த மத்திய அரசின் ரெயில்வே துறையின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான திட்டப்பணி தொடக்க விழா நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
முதன்மை திட்ட மேலாளர் (காதி சக்தி) பாலசுந்தர், துணை தலைமை பொறியாளர் சூர்யமூர்த்தி, பிரிவு பொறியாளர்கள் யுகேந்தர், ரவி தேஜா முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- விசாரணையின்போது மதிப்பெண் தேர்ச்சி சான்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
- கோபம் அடைந்த நீதிபதி மதுரை காமராசர் பல்கலைக் பதிவாளருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.
மதுரை:
பழனியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் கடந்த 1992-96 வரையிலான கல்வி ஆண்டில் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்ட படிப்பு முடித்தேன். இறுதியாக தேர்வு தேர்ச்சி பட்டியலில் எனது பெயர் தேர்வு எண் இல்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது பல்கலைக்கழகத்திற்கு சென்று விவரம் கேட்க சொன்னார்கள்.
பின்னர் பல்கலைக்கழகத்தில் கேட்டபோது முழுமையாக அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாததால் உங்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் பட்டியல் வரவில்லை என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு அனைத்து தேர்வுகளிலும் எழுதி தேர்ச்சி பெற்றேன்.
பின்னர் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல் கேட்டு விண்ணப்பித்தேன். இதுவரை மதிப்பெண் பட்டியல் தரவில்லை. ஆகவே எனது பொறியியல் படிப்பிற்கான அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்த மதிப்பெண் சான்று வழங்க உத்தரவிடுமாறு கடந்த 2020 ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தனது பொறியியல் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்று கோரி கல்லூரி நிர்வாகத்திடமும் பல்கலைக்கழகத்திலும் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளார்.
வழக்கு தாக்கல் செய்தும் உள்ளார். எனவே மனுதாரர் கேட்கும் தேர்ச்சிக்கான மதிப்பெண் சான்றிதழை பல்கலைக்கழகம் வழங்க வேண்டும் அவ்வாறு வழங்காத பட்சத்தில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நேரில் ஆஜராக நேரிடும் என கடந்த விசாரணையின் போது நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மதிப்பெண் தேர்ச்சி சான்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த நீதிபதி மதுரை காமராசர் பல்கலைக் பதிவாளருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் செயல்படுத்தி பதிவாளரை நீதிமன்றத்தில் ஜூலை 7 ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
- கட்டிடம் 70 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சுவர்களில் பூச்சு வேலை நடந்து வந்தது.
- உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை:
மதுரை விளாங்குடியில் உள்ள சொக்கநாதபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். இதற்கான கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
தற்போது கட்டிடம் 70 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சுவர்களில் பூச்சு வேலை நடந்து வந்தது. இன்று காலை கட்டிடத்தின் படிக்கட்டு அமைந்துள்ள பகுதியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த ஜோதி (52), மூக்காயி (50), தொண்டிச்சாமி (55), கட்டையன்(43) ஆகியோர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது படிக்கட்டு, சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 4 பேரும் சிக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் இதுகுறித்து தகவலறிந்த கூடல்புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளை அகற்றினர்.
அப்போது அதில் சிக்கியிருந்த மூக்காயி இறந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மற்ற 3 பேர் படுகாயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக தலைமறைவான கட்டிட பொறியாளர், காண்டிராக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கோவிலில் உள்ள மற்ற விக்ரகங்களுக்கும் முப்பழம் படையல் நடக்கிறது.
- தெய்வானையுடன் முருகப்பெருமான் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஊஞ்சல் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான ஆனி ஊஞ்சல் திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. திருவிழாவையொட்டி தினமும் மாலை 6 மணியளவில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாராக உள்ள ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இதனையடுத்து ஆஸ்தான மண்டபத்தை 3 முறை வலம் வருகிறார். அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள்(3-ந்தேதி) முப்பழ பூஜை நடக்கிறது. விழாவையொட்டி பகல் 12 மணியளவில் உச்சிக்கால வேளையில் கோவிலின் கருவறையில் உள்ள முருகப்பெருமான், சத்யகிரீஸ்வரர், கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்பாள் ஆகிய 5 சன்னதிகளிலுமாக சுவாமி, அம்பாளுக்கு வாழை, மா, பலா, ஆகிய முப்பழங்கள் படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இதேபோல கோவிலில் உள்ள மற்ற விக்ரகங்களுக்கும் முப்பழம் படையல் நடக்கிறது. விழாவின் முத்தாய்ப்பாக இரவு 7 மணியளவில் சிம்மாசனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் மற்றும் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- உழவர் சந்தைகளில் கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி வெளிமார்க்கெட்டுகளில் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது.
- பச்சை மிளகாய் சீசன் இல்லாததாலும், வரத்து குறைந்ததாலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மதுரை:
சமீப காலமாக காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது. தற்போது பல்வேறு பகுதிகளில் காய்கறி உற்பத்தி அதிகளவில் செய்யப்பட்டாலும் மழை மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக காய்கறி மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் காய்கறி விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.
நாட்டு காய்கறிகளான கத்தரிக்காய், வெண்டை, புடலை மற்றும் சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் வரத்தும் கணிசமாக குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் கிலோ 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர்.
தக்காளி வரத்து தொடர்ந்து குறைந்து காணப்படுவதால் மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உழவர் சந்தைகளில் கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி வெளிமார்க்கெட்டுகளில் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த வரிசையில் கடந்த சில வாரங்களாக கிலோ 50 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் இன்று கிடுகிடுவென விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உழவர் சந்தைகளில் முதல் தர சின்ன வெங்காயம் கிலோ 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் 110 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதுபோல இஞ்சி கிலோ 220 ரூபாய்க்கு உழவர் சந்தைகளில் விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் 260 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சமீப காலமாக கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சை மிளகாய் இன்று திடீரென விலை எகிறியது.
உழவர் சந்தையில் 130 ரூபாய்க்கு பச்சை மிளகாய் விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் 160 ரூபாய் வரை விற்பனையானது. பச்சை மிளகாய் சீசன் இல்லாததாலும், வரத்து குறைந்ததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர மற்ற காய்கறிகள் உழவர் சந்தைகளில் இன்று விற்பனை செய்யப்பட்ட விலை விவரம் வருமாறு:-
உருளைக்கிழங்கு-ரூ.50, கேரட்-ரூ. 70, முட்டைகோஸ்-ரூ.28, பீட்ரூட்-ரூ.40, சவ் சவ்-ரூ.24, முருங்கை பீன்ஸ்-ரூ.110, பட்டர் பீன்ஸ்-ரூ.110, சோயா பீன்ஸ்-ரூ.110, பச்சை பட்டாணி-ரூ.170, நூல்கோல்-ரூ.70, டர்ணிப்-ரூ.60, குடை மிளகாய்-ரூ.70, காளிபிளவர்-ரூ.35, வெள்ளைபூண்டு-ரூ.200,
கத்தரிக்காய்-ரூ.42, வெண்டைக்காய்-ரூ.26, புடலை-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.60, சுரைக்காய்-ரூ.24, பெரிய வெங்காயம்-ரூ.25, பூசணி-ரூ.18, சர்க்கரை பூசணி-ரூ.24, அவரை-ரூ.90, சிறிய பாகற்காய்-ரூ.140, பெரிய பாகற்காய்-ரூ.60, கொத்தவரை-ரூ.36, கறிவேப்பிலை-ரூ.42, புதினா-ரூ.40, கொத்தமல்லி-ரூ.100, முருங்கைக்காய்-ரூ.60, கோவக்காய்-ரூ.25, மொச்சைக்காய்-ரூ.55, முள்ளங்கி-ரூ.24 ஆகிய விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டன.
கடந்த சில நாட்களில் விற்கப்பட்ட விலையை ஒப்பிடுகையில் ஒவ்வொரு காய்கறிகளும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ. 30 வரை விலை அதிகரித்துள்ளது.
உழவர் சந்தைகளில் இந்த விலையில் காய்கறிகள் விற்கப்பட்டாலும் காய்கறி மார்க்கெட்டுகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் காய்கறிகளை வாங்க உழவர் சந்தைகளை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் மதுரை பீ.பி.குளம், பழங்காநத்தம், அண்ணாநகர் உழவர் சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- கருத்துக்களை வெளிப்படுத்துவதை எந்த வகையிலும் முடக்கக்கூடாது.
- அதேசமயம் தனிப்பட்ட நபர்கள் நினைப்பதை பேச அனுமதிக்க வேண்டும்.
மதுரை:
கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ஜூலை 1ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி பாஜக நிர்வாகி கார்த்திகேயன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஜூலை 1ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
அப்போது கருத்துரிமை மற்றும் பேச்சுரிமை குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை நீதிபதி விமர்சித்தார். நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:-
ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், எதிர்க்கட்சியினர் பொதுமக்களிடம் கருத்து தெரிவிப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது. அதே எதிர்க்கட்சி சில ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சியாக மாறும்போது, இதே வேலையை தான் செய்கிறது.
கருத்துக்களை வெளிப்படுத்துவதை எந்த வகையிலும் முடக்கக்கூடாது. கருத்துரிமை, பேச்சுரிமையை தடுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது, இதை அனுமதிக்க முடியாது.
அதேசமயம் தனிப்பட்ட நபர்கள் நினைப்பதை பேச அனுமதிக்க வேண்டும். அது பொதுக்கூட்டமாகவோ, வேறு எதாவது வகையில் இருக்கலாம். கருத்துக்களை முடக்கக்கூடாது. அதுபோன்ற முயற்சிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். மனுதாரரின் மனு உரிய காரணம் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நாளை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
- விளையாட்டு நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை:
கரூர் மாவட்ட பாஜக நிர்வாகி கார்த்திகேயன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் "கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ஜூலை 1ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு செய்தோம். எங்கள் மனுவை நிராகரித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். அதை ரத்து செய்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்" என கூறியிருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் திருவள்ளுவர் அரங்கில் பொதுக்கூட்டங்களுக்கோ வேறு எந்த நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை, விளையாட்டு நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஜூலை 1ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். மனுதாரரின் மனு உரிய காரணம் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறிய நிதிபதி, மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
- பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
- இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலூர்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கச்சிராயன்பட்டி ஊராட்சி. மாங்குளப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சியில் முறையாக கண்மாய் பணிகள் நடை பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதில் ஒரு சிலர் தொ டர்ந்து போலி அட்டையுடன் 100 நாள் வேலை திட்டப்பணிக்கு செல்வ தாகவும், அது குறித்து கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் பலமுறை முறையிட்டும் எந்த நட வடிக்கையும் மேற்கொள்ள வில்லை என தெரிகிறது.
ஆகவே இந்த விவகாரத்தில் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப்பகுதி பொதுமக்கள் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் இன்று திடீரெனசாலை மறியலில் ஈடுபட்டனர். ஏராளமான பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட் டத்தில் பங்கேற்றனர்.
இதுபற்றி தகவலறிந்த கச்சிராயன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தம், ஆண்டிச்சாமி சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்ப தாக கூறினர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கவர்னர் ரவிக்கு தமிழக அரசு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
- பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக் கறிஞர் பசும்பொன் பாண்டி யன் கூறியதாவது:-
பேரறிஞர் அண்ணா ஆட்டுக்கு தாடியும், நாட் டுக்கு கவர்னரும் தேவை யில்லை என்று தீர்க்கதரிசன மாக அன்றே உரைத்தார். அவரது கருத்துக்கு சான்றாக தமிழக கவர்னர் ரவியின் செயல்பாடு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கவர்னர் எந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி நட வடிக்கை எடுத்துள்ளார் என்பதை தெளிவுபடுத்த அவர் தயாராக இல்லை.
தமிழகத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆளுநர் மாளி கையில் அரசியல் நடத்தி குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று கவர்னர் ரவி நினைக்கிறார். அவரது இந்த மக்கள் விரோத செயல் பாடுகளுக்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆளுநர் மாளிகை அரசின் கட்டுப் பாட்டில் உள்ளது. எனவே தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் மாளிகைக்கு மின்சாரம், தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.போலீஸ் பாதுகாப்பையும் திரும்ப பெற வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறும் கவர்னர் ரவிக்கு உடனடியாக தமிழக அரசு சரியான பாடம் புகட்ட வேண்டும். என்று அவர் தெரிவித்துள்ளார்.






