என் மலர்
மதுரை
- அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் ரமேஷின் தந்தை மரணமடைந்தார்.
- இறுதிச் சடங்கு இன்று மாலை 6 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் நடக்கிறது.
மதுரை
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ், எம்.பாலசுப்பிர மணி, எம்.ராஜா எம்.சுரேஷ் காந்த் ஆகியோரின் தந்தை திருப்பரங்குன்றம் கீழத்தெரு நடுச்சந்தை சேர்ந்த குழாய் கடை எம்.முத்துத்தேவர் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
அவர் இறந்த செய்தியை அறிந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும்.முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைப்பு செயலாளரும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முத்துத்தேவர் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினார்.
முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., ஆகியோரும் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்தியன், மற்றும் கிழக்கு மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் கிளை நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், தொண்டர்க ளும், உறவினர்களும் நண்பர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
முத்துத்தேவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 6 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் நடக்கிறது.
- உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
- மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களு டன் வந்து கலந்து கொண்டு பயன டையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர் களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குவது தொடர்பாக தமிழக அரசால் நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற சிறப்பு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற வுள்ளது.
மேற்படி சிறப்பு விழிப் புணர்வு மற்றும் வழிகாட்டு தல் நிகழ்ச்சிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் தலை மையில் நடைபெறவுள்ளது.
மேற்படி நிகழ்ச்சியில், மாணவர்களின் உயர்கல்வி தொடர்பான ஆலோசனை கள் மற்றும் வழிகாட்டுதல் களை பல்வேறு துறை சார்ந்த அலுவவர்கள் வழங்க வுள்ளார்கள். மேலும், பொறி யியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பது தொடர் பாகவும் கல்விக்கடன், கல்வி உதவித் தொகை பெறுவது தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். உயர்கல்வி பயிலுவதற்கு தேவையான சாதிச்சான்று, வருமானச் சான்று உட்பட இணைய வழிச்சான்றுகள் அங்கேயே அமைக்கப் பட்டுள்ள இரு சேவை மையம் மூலமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு மாண வர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களு டன் வந்து கலந்து கொண்டு பயன டையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருப்பரங்குன்றம் வந்த காவடி பக்தர்களுக்கு மேலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- திருப்பரங்குன்றம் கோவிலுக்கு காவடி எடுத்து கொண்டு பக்தர்கள் புறப்பட்டு சென்றது.
மேலூர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி, கண்டனூர் ஆகிய பகுதியிலிருந்து ஒவ் வொரு ஆண்டும் திருப்பரங் குன்றம் முருகனுக்கு காவடி எடுத்து ஏராளமான பக்தர் கள் சென்று வருகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டு பாதயாத்தி ரையாக நேர்த்திக் கடன் செலுத்த காவடி எடுத்துக் கொண்டு பாதயாத் திரையாக வந்த பக்தர்கள் மேலூருக்கு வந்தனர். அவர்களுக்கு மேலூர் பகுதி முருக பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் காவடி எடுத்து வந்தவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த னர்.
பின்னர் மேலூரில் உள்ள ஒரு திருமண மண்ட பத்தில் காவடிகள் வைத்து அங்கு முருகனுக்கு சந்தனம், திருநீறு, பால், பழ அபிஷே கம் மற்றும் தீபஆராதனை நடைபெற்றது. காவடி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு காவடி எடுத்து கொண்டு பக்தர்கள் புறப்பட்டு சென்றது.
- சோழவந்தான் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
- பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தானில் உள்ள பிரளயநாத சுவாமி கோவிலில் சனிபிரதோஷ வழிபாடு நடைபெற்றது.இதனை முன்னிட்டு நந்திக்கு 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
பா.ஜ.க. விவசாய அணி மாநில செயலாளர் மணிமுத்தையா, கவுன்சி லர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன், தக்கார் இளமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். திருவேடகம் ஏடகநாத சுவாமி கோவிலில் நடந்த வழிபாட்டில் சனி பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.
இதேபோல் மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவால வாநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்க ளில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- படுகாயமடைந்த என்ற பெண் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
மதுரை
மதுரை மாநகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1-வது தெரு பகுதியில் தமிழ் முரசு என்பவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணிகளை அழகுபெருமாள் என்ற ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியை சேர்ந்த மூக்காயி(52), தொண்டிச் சாமி, கட்டையன்(46), ஜோதி(52) ஆகிய 4 தொழிலாளர்கள் நேற்று கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது மாடிக்கு செல்வதற்காக அமைக்கப் பட்ட படிக்கட்டு கட்டுமானம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வேலை பார்த்து கொண்டிருந்த 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். படுகாயமடைந்த என்ற பெண் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
மேலும் 3 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர்களை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர் பாக கூடல்புதூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் ஒப்பந்ததாரர் அழகு பெருமாள், பொறியாளர் இளமதி மற்றும் வீட்டின் உரிமையாளர் தமிழ் முரசு ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்தனர்.
- சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:
மதுரை மாநகரருக்கு உட்பட்ட கரிமேடு விஸ்வசாபுரி 1-வது தெரு பகுதியை சேர்ந்தவர் அஜித். தனியார் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வரும் இவர் அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று இரவில் அஜித்தின் வீட்டிற்குள் இருந்து திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் பதறியடித்து எழுந்தனர்.
பின்னர் தங்களது வீட் டிற்கு வெளியே வந்து அச்சத்துடன் பார்த்தனர். முதலில் அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் வெடிச்சத்தம் கேட்ட அஜித்தின் வீட்டிற்குள் இருந்து நெடியுடன் கூடிய புகை வெளிவந்துள்ளது. மேலும் உடனடியாக இதுபற்றி அப்பகுதியினர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.
ஆனால் வீட்டில் யாரும் இல்லை. அப்பகுதியில் விசாரித்தபோது கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஜித் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்தனர். பின்னர் பூட்டை உடைத்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு மர்ம பொருள் வெடித்து அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிய நிலையில் கிடந்தது. சமையல் அறையில் இருந்த பொருட்களும் சேதமடைந்து கருகிய நிலையில் கிடந்தது. இதனையடுத்து போலீசார் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.
வீட்டிற்குள் வெடித்தது நாட்டு வெடிகுண்டா? அல்லது வேறு ஏதேனும் வெடிக்கும் மர்ம பொருளா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
- செல்வராஜ் பேரையூரில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட் செல்வதற்காக ஆம்னி காரில் வந்தார்.
- பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென கார் தீ பற்றியது.
திருப்பரங்குன்றம்:
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் போஸ். இவரது மகன் செல்வராஜ், மீன் வியாபாரி. வியாபாரம் செய்வதற்காக செல்வராஜ் பேரையூரில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட் செல்வதற்காக இன்று அதிகாலை ஆம்னி காரில் வந்தார்.
திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் ஆம்னி காருக்கு கியாஸ் நிரப்பியுள்ளார். ஆனால் காரை இயக்க முடியவில்லை. இதனால் காரில் பெட்ரோல் இல்லாததால் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு காரை தள்ளி சென்றார். பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென கார் தீ பற்றியது.
இதனால் அதிர்ச்சிடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இருப்பினும் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை முக்கிய சாலையில் திருப்பரங்குன்றம் பெட்ரோல் பங்க் அருகிலேயே ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை வேளை என்பதால் அதிக போக்குவரத்து இல்லாமல் இருந்தது. இதனால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.
- ரூ.50 லட்சத்தில் டி.எம்.சவுந்தரராஜனுக்கு வெண்கல சிலை அமைக்க பூமிபூஜை செய்யப்பட்டது.
- வெண்கல குரலில் கணீரென இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை.
மதுரை
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுக்கு பின்னனி பாடல்கள் பாடி புகழ் பெற்றவர் டி.எம்.சவுந்தர ராஜன். வெண்கல குரலில் கணீரென இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள சாலைக்கு அவரது பெயரை தமிழக அரசு அண்மையில் சூட்டியது.மேலும் அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரின் சொந்த ஊரான மதுரையில் அரசின் சார்பில் டி.எம்.சவுந்தரராஜனின் முழு திருவுருவச்சிலை அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தார்.
அதன்படி மதுரை முனிச்சாலை சந்திப்பில் டி.எம்.சவுந்தரராஜனின் வெண்கல சிலை ரூ.50 லட்சத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பூமிபூஜை இன்று நடந்தது. இதில் மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், வெங்க டேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் முகேஷ் சர்மா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் முனியசாமி, புகழ் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- டெய்லர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
- ரூ.5 லட்சம் ஆடைகள் எரிந்து சேதமானது.
மதுரை
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 6-வது பஸ் நிறுத்தத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜன்(வயது52). இவர் விளாச்சேரி பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் மறுநாள் அதிகாலையில் கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இைத பார்த்த அப்பகுதி மக்கள் ஆனந்தராஜனுக்கும், திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடையை திறந்து தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த ஆடைகள், தையல் எந்திரங்கள் போன்றவை எரிந்து சேதமாகின. இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வ.உ.சி.பேரவை நிறுவன தலைவர் அன்னலட்சுமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
- பாண்டிய வெள்ளாளர் திருமண மகாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
மதுரை
தென் மாவட்ட வ.உ.சி பேரவை நிறுவனத் தலைவரும், மதுரை அனுப்பானடியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஆட்டோ கணேசன் மகள் அன்னலட்சுமியின் பிறந்த நாள் விழா மதுரை தெற்கு வாசலில் அமைந்துள்ள பாண்டிய வேளாளர் திருமண மகாலில் நாளை (2-ந் தேதி) நடக்கிறது.
இதையொட்டி காலை 9 மணிக்கு சிம்மக்கல்லில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
காலை 11 மணியளவில் மதுரை தெற்கு வாசலில் அமைந்துள்ள பாண்டிய வெள்ளாளர் திருமண மகாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. அதனைத் தொடர்ந்து வேளாளர் வெள்ளாளர் சமுதாயத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு குவிந்தது.
- மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் மாவட்ட அளவில் நடந்தது. இதில் மதுரையை சேர்ந்த பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்றன. கால்பந்து, கிரிக்கெட் போட்டிகளில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
அதன்படி இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பாலமுருகன், யுகேஷ், அபிஷேக், அப்துல் ரகுமான் ஆகிய 4 பேர் கால்பந்து போட்டியிலும், கோபி, பிரவீன், சந்தோஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் கிரிக்கெட் போட்டியிலும், மதுரை மாவட்ட அணிகளில் கலந்து கொண்டு பதக்கங்களும், சான்றிதழ்களும் பெற்றனர். இவர்கள் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
தேர்வாண மாணவர்க ளை கல்லூரி தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன்,உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி, கல்லூரி முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி இயக்குநர் பிரபு, உடற்கல்வி இயக்குநர் ராகவன், உதவி இயக்குநர் கோவிந்தம்மாள் ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.
- 3 வாலிபர்களை கத்தியால் தாக்கி மோட்டார் சைக்கிள் பறிக்கப்பட்டது.
- மர்ம நபர்களை வாடிப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பசும்பொன் நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ரமேஷ் (வயது 36), கூலிதொழிலாளி. இவர் நேற்று இரவு அருகில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது வாங்கியதாக தெரிகிறது.
பின்னர் மோட்டார் சைக்கிளில் அங்குள்ள காட்டு பகுதிக்கு சென்றார். அங்கு மோட்டார் சைக்கி ளை நிறுத்தி விட்டு மது குடித்துக் கொண்டி ருந்தார். அப்போது 4 மர்ம நபர்கள் அங்கு வந்தனர்.
அவர்கள் ரமேஷிடம் செல்போன் வேண்டும் என கேட்டுள்ள னர். அதற்கு ரமேஷ் எதற்காக செல்போன் கேட்கிறீர்கள்? என கேட்டுள்ளார்.
அப்போது அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கை கலப்பாக மாறியது. திடீரென மர்மநபர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரமேஷின் தலையில் வெட்டி வெட்டினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
வலி தாங்க முடியாத ரமேஷ் கூச்சலிட்டார். உடனே அந்த மர்மநபர்கள் ரமேஷின் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர்.
இதனிடையே ரமேஷின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் வந்து கொண்டி ருந்த குட்லாடம்பட்டியைச் சேர்ந்த தவம் (30), விருமாண்டி(35) ஆகியோர் அங்கு வந்தனர். உடனே அந்த மர்ம நபர்கள் அவர்களையும் கத்தியால் தாக்கி உள்ளனர். இதில் இருவருக்கும் ரத்தக்கா யங்கள் ஏற்பட்டது. ரமேஷ், தவம், விருமாண்டி ஆகிய 3 ேபரும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ரமேஷ் உள்ளிட்ட 3 பேரும் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ் பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்ளை கத்தியால் தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






