என் மலர்tooltip icon

    மதுரை

    • சாலைகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் சாலைகள் படு மோசமாக உள்ளது. மழை காலங்களில் சேறும், சகதியுமாகவும் மற்ற நேரங்களில் குண்டும், குழியுமாகவும் காணப்படு கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

    தரமற்ற சாலைகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் 67-வது வார்டான எச்.எம்.எஸ்.காலனி பகுதியில் சாலைகள் போக்கு வரத்திற்கு லாயக்கற்ற முறையில் உள்ளது. இதனால் அந்தப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

    இந்த நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக எச்.எம்.எஸ். காலனி பகுதியில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. தற்போது முடக்கு சாலையில் இருந்து எச்.எம்.எஸ். காலனி வழியாக தேனி மெயின் ரோட்டிற்கு வாகனங்கள் விடப்படுவதால் அதிகள வில் தூசி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதை கண்டித்தும், எச்.எம்.எஸ். காலனி பகுதியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், அந்தப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி தலைவி பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.
    • தெற்கு வாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    மதுரை

    வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் தென் மண்டல அமைப்பாளரும், மாநில மகளிர் அணி தலைவியு மான அன்னலட்சுமி சகிலா கணேசனின் பிறந்தநாள் விழா மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

    இதில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவி களை பாராட்டும் விதமாக கல்வி வளர்ச்சி விருதினை வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஹரிஹரன் பிள்ளை மற்றும் மாநில பொதுச் செயலாளர் வேளச்சேரி மாதவன், தென்னக மக்கள் இயக்கத் தின் நிறுவனத்தலைவர் அய்யப்பன் கார்த்தி, மாநில ஆலோசனை குழு தலைவர் ஆடிட்டர் முருகேசன் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வின் வெள்ளா ளர் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து மாவட்ட நிர்வா கிகள், அனைத்து சமூக உறவுகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பரங்குன்றத்தில் முப்பழ பூஜை நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த இன்று (24-ந் தேதி) ஆனி ஊஞ்சல் உற்சவ திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் மக்கள் சுப்பிர மணிய சுவாமி தெய்வா னையுடன் கோயிலில் உள்ள திருவாச்சி மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப் பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளினார்.

    அங்கு கோவில் ஓதுவார் பொன்னூஞ்சல் பாடி சிறப்பு தீபாரனை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முப்பழ பூஜை இன்று நடைபெற்றது.

    விழாவினை முன்னிட்டு கோவில் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், சத்யகிரீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு மா பலா வாழை என முப்பழங்கள் கொண்டு சம காலத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து மா, பலா, வாழை என முக்கனிகளை உற்சவர் சுப்ரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    • ஆபத்தான “பைக்” ரேசில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.
    • சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

    மதுரை

    மதுரையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்ல வசதியாகவும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை-நத்தம் சாலையில் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சுமார் ரூ.615 கோடி செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் பாலத்தில் ஐயர் பங்களா, திருப்பாலை பகுதிகளில் இறங்குவதற்கு வசதியாக சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி களுக்கும், நத்தம் உள்ளிட்ட வெளியூர்களுக்கும் செல்லும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பகல் நேரங்களில் அதிக அளவில் செல்லுகிறது.

    ஆனால் இரவு நேரங்களில் சொற்ப அளவி லேயே கார், இருசக்கர வாகனங்கள் பறக்கும் பாலத்தில் சென்று வருகின்றன. இதனால் பறக்கும் மேம்பால பகுதிகளில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடை பெறுவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் இரவு நேரங்களில் போலீசார் அவ்வப்போது ரோந்து பணிகளிலும் ஈடுபடு கிறார்கள். பறக்கும் மேம்பாலத்தில் குறைந்த அளவே வாகனங்கள் செல்வதால் சாலைகளில் சாகசம் செய்பவர்களின் அட்டகாசமும் அவ்வப் போது அறங்கேறி வருகிறது. அதிவேகத்தில் பைக் ரேஸ் சென்று அந்த காட்சிகளை இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் பதிவிட்டு அதிக 'லைக்' களை பெறுவதும் இளசுகளின் தெளியாத கனவாக உள்ளது. இளம்பெண்களும் பாலத்தின் மையப் பகுதிகளிலிருந்து நடனமாடி அதனை சமூக வலைத்த ளங்களில் வெளியிடுவதும் சமீப காலமாக டிரெண்டாகி வருகிறது.

    இதனை போலீசார் கடுமையாக எச்சரித்து வருகின்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நத்தம் பறக்கும் மேம்பா லத்தில் நான்கு இரு சக்கர வாகனங்களில் வாலிபர்கள் அதிவேகத்தின் சைரன் ஒலிக்க முன்பக்க சக்கரத்தை உயரே தூக்கிய படி அதிவேகத்தில் சென்று சாகசம் என்ற பெயரில் அபாயகரமான பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

    இது அந்த வழியாக வாகனத்தில் சென்ற வர்களை கடும் பீதிக்கு உள்ளாக்கியது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் இந்த பைக் ரேஸ் இளைஞர்கள் மாயமாய் மறைந்து விட்டனர்.

    இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள் ளனர். இந்த நிலையில் பறக்கும் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சென்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேஸ் செல்வது சமூக விரோத செயலாகும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    நத்தம் மேம்பாலத்தில் பைக் ரேஸ் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பலமுறை எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதனை மீறி தொடர்ந்து மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் தேவை யின்றி வாகனங்களை நிறுத்துவது பாலத்தின் மேலே நின்று செல்பி எடுப்பது, வாகனங்களில் அதிவேகமாக சென்று சாகசம் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, பாலத்தின் மேலே அமர்ந்து கொண்டு கேக் வெட்டுவது, பாலத்தின் இருபுறங்களில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்து பொழுது போக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

    • திருமங்கலம் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
    • பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள உயர்தர உணவகமும் கட்டிய நாள் முதல் மூடியே கிடக்கிறது.

    திருமங்கலம்

    மதுரை-நெல்லை வழித்தடத்தில் திருமங்கலம் ரெயில் நிலையம் முக்கிய நிலையமாக அமைந்துள்ளது. மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பயணிகள் ரெயில்களும் நின்று செல்லும் இந்த ரெயில் நிலையங்களில் சென்னை, பெங்களூர், புனலூர் உள்ளிட்ட எக்ஸ் பிரஸ் ரெயில்கள் நின்று செல்கின்றனர்.

    சமீபத்தில் மதுரையில் இருந்து நெல்லை வரையில் அமைக்கப்பட்ட இரட்டை வழிப்பாதையும் இங்கு அமைந்துள்ளது. இதனால் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளை தென்னக ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. என்.எல்.சி. நிறுவனம் சார்பில் பயணிகள் வசதிக்காக திருமங்கலம் ரெயில் நிலையம் முன்புறம் நவீன கழிப்பறை கட்டப்பட்டது.

    கட்டிடபணிகள் நிறைவடைந்த 6 மாதங்கள் கடந்துவிட்ட பின்பு இந்த புதிய கழிப்பிடம் திறக்கப் படாமல் பூட்டியே காட்சியளிக்கிறது. இதே போல் ரெயில்வே நிலையத்திற்குள் பல ஆண்டுகளாக இருக்கும் பொது கழிவறையும் திறக்கப் படாமல் காணப்படுகிறது. ரெயில்கள் வரும் வரையில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் சிமெண்டால் அமைக்கப்பட்ட நாற்காலிகளும் முதல்பிளாட்பாரத்தின் பராமரிப்பு பணிக்காக இடித்து அகற்றப்பட்டு விட்டது.

    இதனால் பயணிகள் ரெயில்கள் வரும் வரையில் நிற்கவேண்டியுள்ளது. பயணி களுக்கான ஓய்வறையில் உள்ள இரும்பு நாற்காலிகளும் உடைந்து சிதைந்து போய் காணப்படுகிறது. ரெயில் பயணிகளின் முக்கிய தேவை யான குடிநீர் வசதி திருமங்கலம் ரெயில்வே நிலையத்தில் இல்லை. இங்குள்ள 2 பிளாட்பாரங்களிலும் உள்ள குழாய்களை திறந்தால் தண்ணீ ருக்கு பதில் காற்றுதான் வருகிறது.

    ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் கட்டணம் கொடுத்து குடிநீர் பாட்டில்களை வாங்கி வரும் நிலை உள்ளது. இது தவிர முதலாம் பிளாட்பாரத்தை உயர்த்தவும், அகலப்படுத்தும் பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் மிகவும் குறுகலாக காணப்படும் முதல்பிளாட்பாரத்தில் நிற்கும் ரெயிலில் ஏறி இறங்க பயணிகள் குறிப்பாக முதியோர்கள், பெண்கள் கடும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர்.

    இது குறித்து பயணிகள் கூறுகையில், திருமங்கலம் ரெயில் நிலையத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. குடிநீர், கழிவறை வசதிகள் இல்லை. சென்னைக்கு செல்லும் முத்துநகர் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரண்டுமே இரவு 10.30 மணிக்கு மேல்தான் திருமங்கலம் வருகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் இரவு வேளையில் நிலையத்தில் நடந்து செல்ல இயலாது. ஏனெனில் இங்கு தெருவிளக்கு எரிவதில்லை. வளாகம் இருளாக காணப்படுகிறது.

    முதல்பிளாட்பாரத்தில் ரெயில்கள் நிற்பதால் குறுகலான பிளாட்பாரத்தில் இரவு வேளையில் ரெயிலில் ஏற இயலவில்லை. இங்கு பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள உயர்தர உணவகமும் கட்டிய நாள் முதல் மூடியே கிடக்கிறது. இதை திறப்பதற்கான வழிகள் எதுவும் தென்படவில்லை.

    தற்போது மெட்ரோ ரெயில் திருமங்கலத்தில் இருந்து தான் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி காணப்படும் திருமங்கலம் ரெயில் நிலையம் வசதிகளை ஏற்படுத்தி தரத்தினை உயர்த்த வேண்டும் என்பதே நகரமக்களின் கோரிக்கையாகும்.

    • நாராயணனின் பணம் மற்றும் நகைகள் அடிக்கடி குறைய தொடங்கியது.
    • ஓய்வு பெற்ற டாக்டரான நாராயணன் வீட்டில் வைத்திருந்த நகைகளை திருடியது யார் என்பதில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    மதுரை:

    மதுரை எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு டாக்டரான இவரது வீட்டில் கார் டிரைவராக ஜெயராமன் என்பவர் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

    நாராயணன் வயது மூப்பு காரணமாக வீட்டில் ஜெயராமனை அனைத்து பகுதிகளிலும் அவர் மீதான நம்பிக்கையின் பேரில் அனுமதித்ததுடன் தன்னுடைய கணக்கு வழக்குகளையும் பார்க்கும் பணியிலும் ஈடுபடுத்தினார்.

    இந்த நிலையில் நாராயணனின் பணம் மற்றும் நகைகள் அடிக்கடி குறைய தொடங்கியது. இதற்கிடையே வீட்டின் தனி அறையில் பீரோவில் வைத்திருந்த 32 பவுன் தங்க நகை மற்றும் 135 பவுன் மதிப்புள்ள தங்கப்பொருள்களையும் கடந்து சில மாதங்களாக கொஞ்சம், கொஞ்சமாக மாயமானது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணன், ஜெயராமன் மீது சந்தேகப்பட்டாலும் அவரது நடவடிக்கையில் மாற்றம் இல்லாததால் இந்த நகையை திருடியது யார் என்பதில் அவருக்கு குழப்பமான நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக மதுரை எஸ்.எஸ். காலனி போலீசில் நாராயணன் புகார் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஓய்வு பெற்ற டாக்டரான நாராயணன் வீட்டில் வைத்திருந்த நகைகளை திருடியது யார் என்பதில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    வீட்டின் கதவு மற்றும் பீரோக்கள் உடைக்கப்படாமல் நகைகள் மாயமாகி இருப்பதால் அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் தான் இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டிருக்க முடியும் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

    இதையடுத்து அடிக்கடி வந்து சென்ற கார் டிரைவர் ஜெயராமன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட் டது. ஆனாலும் ஜெயராமன் நகைகளை திருடவில்லை என்று தொடர்ந்து மறுத்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது ஜெயராமன் அடிக்கடி வீட்டிற்கு வருவதும், வெளியே செல்வதுமாக இருந்ததை உறுதி செய்தனர். பின்னர் விசாரணை நடத்தியபோது 167 பவுன் நகைகளை திருடியதை ஜெயராமன் ஒப்புக்கொண்டார்.

    அதன் அடிப்படையில் கார் டிரைவர் ஜெயராமனை கைது செய்த போலீசார் அபேஸ் செய்த நகைகளையும் மீட்டனர். இதன் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பணி செய்த வீட்டிலேயே தனது கைவரிசையை காட்டிய கார் டிரைவர் ஜெயராமனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த திருட்டு சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 தரப்பை சேர்ந்த வர்கள் மோதிக்கொண்ட னர். இதில் 4 பேர் காய மடைந்தனர்.

    இந்த மோதல் காரணமாக அந்த கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்ட னர். இந்த சம்பவம் தொடர் பாக சோழவந்தான் இன்ஸ் பெக்டர் சிவபாலன் வழக்குப்பதிவு செய்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தார். மேலும் இதில் தொடர்புடைய 2 பேர் தலைமறை வானார்கள். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை விக்கிரமங்கலம் மெயின் ரோட்டில் வடகாடுபட்டியை சேர்ந்த ஒரு தரப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தலைமறைவான 2 பேரை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • மதுரையில் முதல்-அமைச்சருக்கு அளிக்கப்படும் வரவேற்பில் தமிழகமே திரும்பி பார்க்க வேண்டும்.
    • அமைச்சர் மூர்த்தி கூட்டத்தில் பேசினார்.

    மதுரை

    மதுரை பசுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை வடக்கு, தெற்கு, மாநகர் ஆகிய 3 மாவட்டங்களில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமையில், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் முன்னிலையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற 15-ந்தேதி மதுரை யில் உலகத்தரம் வாய்ந்த நமது தலைவர் கலைஞர் பெயரால் அமைக்கப்பட்ட நூலகத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க வருகிறார். இது அரசு விழா என்பதால் வரவேற்பு நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். மதுரை விமான நிலையத்தில் இருந்து விரகனூர் ரவுண்டானா வரை மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அணி வகுத்து வரவேற்க வேண்டும்.

    மதுரை மாநகர் பகுதிகளில் நூலகம் வரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு அளிப்பார்கள். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்

    50-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பை மதுரை மட்டு மல்லாது தமிழகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டும். வருகிற பாராளு மன்றத் தேர்தலில் எதிரொ லிக்கும் வகையில் நாம் எழுச்சியுடன் வரவேற்க வேண்டும். 40-க்கு 40 நாம் வெற்றி பெற்ற வேண்டும்.

    மேலும் மதுரை, விருது நகர், தேனி ஆகிய 3 பாராளு மன்ற தொகுதியை தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்காக தலைமையிடம் இந்த 3 தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவோம்.

    அது நமது உரிமை, இருப்பினும் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்வோம் என்று தெரிவித்தார். தமிழகத்தில் நாம் பெரும் வெற்றி இந்திய பிரதமர் யார் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மதுரையில் நடந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் 72 ஆயிரம் பேருக்கு வழங்கி னோம். பிற மாவட்டங்களில் இல்லாத அளவு அந்த நிகழ்ச்சி இருந்தது என்று நாம் பாராட்டப் பெற்றோம். அதேபோல் விரைவில் ஒரு லட்சம் பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் உயர்மட்ட செயல் திட்ட குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பொன் முத்து ராமலிங்கம், மாநில தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்க டேசன், முன்னாள் மேயர் குழந்தை வேலு, மாவட்ட அவைத் தலைவர்கள் பாலசுப்பிர மணியன், ஒச்சு பாலு, நாக ராஜன், மாவட்ட பொரு ளாளர் சோமசுந்தர பாண்டி யன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கரு.தியாகராஜன், தனசெல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், லதா அதியமான்.

    மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகலா கலா நிதி, மண்டல தலைவர்கள் வாசுகி சசிகுமார், சுவிதா விமல், சரவண புவனேஸ்வரி, பகுதி செயலாளர்கள் மருதுபாண்டி, சசிகுமார், ஈஸ்வரன், கிருஷ்ணபாண்டி, ராமமூர்த்தி.

    ஒன்றிய சேர்மன்கள் வீரராகவன், வேட்டையன், பேரூராட்சி தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, ரேணுகா ஈஸ்வரி, ஜெய ராமன், நகர் மன்ற தலைவர்கள் ரம்யா முத்துக்குமார், முகமது யாசின், சுகாதார குழு தலைவர் ஜெயராஜ் ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, சிறைச்செல்வம், பால ராஜேந்திரன், தனசேகர், தன்ராஜ், பசும்பொன் மாறன்.

    கவுன்சிலர்கள் கருப்புசாமி, வழக்கறிஞர் குட்டி என்ற ராஜரத்தினம், காளிதாஸ், வாசு, செந்தா மரைக்கண்ணன், உசிலை சிவா, சுதன், ஆழ்வார், அணி அமைப்பா ளர்கள் விமல், வக்கீல் கலாநிதி, வட்ட செயலாளர் மகேந்திரன், புதூர் வேலு, ராஜேந்திரன், நெல்பேட்டை லயன் சீனிவாசன், நேதாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் ரியல் எஸ்டேட் தரகர் பலியானார்.
    • கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சிவசங்கர்(வயது59). ரியல் எஸ்டேட் தரகரான இவர் கடந்த 29-ந்தேதி வேலை நிமித்தமாக மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கு வேலையை முடித்த சிவசங்கர் இரவு ஊருக்கு புறப்பட்டார்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கள்ளிக்குடி ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் கீழே விழுந்த சிவசங்க ருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம், பக்கத்தி னர் அவரை மீட்டு விருது நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவசங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ஹரிகரசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.
    • ஒரு குழந்தைக்கு காதணி விழா நடந்தது.

    மதுரை :

    தமிழகத்தின் பழமை மாறாமல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற காதணி விழாவில் 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.

    இந்த வகையில் உசிலம்பட்டி அருகே ரெயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு காதணி விழா நடத்தினர். இந்த விழாவிற்கு கருமாத்தூரிலிருந்து வந்திருந்த அவரது தாய்மாமன் தலைமையில் ஊர்வலமாக வந்த பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி 7 மாட்டு வண்டிகளில் வெற்றிலை, பாக்கு, பழம், கரும்பு, இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை ஏற்றி வந்தனர்.

    மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மாதிரி யானை ஊர்வலம், கேரள செண்டை மேளங்கள் முழங்க கதகளி நடனம் என சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தாய்மாமன் ஊர்வலமாக வந்தது உசிலம்பட்டி பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    • டெய்லர் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • இதில் எந்திரங்கள்-துணிகள் எரிந்து நாசமானது.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் முதல் தெருவில் ஒரு டெய்லர் கடை உள்ளது. அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் இந்த கடையை நடத்தி வருகிறார். இங்கு துணிகள் ஏற்றுமதி செய்வதற்கான ஆடைகளையும் ஆர்டர் எடுத்து தைக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இரவு வழக்கம் போல் உரிமை யாளர் கடையை பூட்டிவிட்டு சென்றார். இந்த நிலையில் இன்று காலை பூட்டிய கடைக்குள் இருந்து புகை வெளிவர தொடங்கியது.

    பின்னர் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. உடனடியாக அவர்கள் கடையின் உரிமையாளர், போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின் வினியோகத்தை துண்டிக்க செய்தனர்.

    கடைக்கு எதிரே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அங்கு கட்டிடத்திற்கு தண்ணீர் அடிக்கும் குழாய் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு இருந்தவர்கள் சமயோசிதமாக செயல்பட்டு அந்த குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் போராடி தீயை அணைத்தனர்.

    இதனால் பெரும் அசம்பா விதம் தவிர்க்கப் பட்டது. இருந்தபோதும் கடை பூட்டிக்கிடந்ததால் உள்ளே இருந்த தையல் எந்திரங்கள், தைப்பதற்காக வாங்கி வைத்திருந்த துணிகள் எரிந்து சேமடைந்தன.

    இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்திற்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

    • ‘காய்கறி’ விலை கடும் உயர்வால் ‘கறி’க்கு பொதுமக்கள் மாறினர்.
    • இந்த விற்பனையால் இறைச்சி கடைக்காரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மதுரை

    பொதுவாக ஆன்மீகத் திற்கு உகந்ததாக கருதப்படும் கார்த்திகை, மார்கழி மாதங் களில் அசைவ பிரியர்கள் சைவத்திற்கு மாறுவார்கள் என்பதாலும், சபரிமலை யாத்திரை செல்பவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டும் காய்கறிகளின் விலை உச்சம் தொடும்.

    அதேபோல் சுபமுகூர்த்த நாட்கள் மிகுந்த தை, மாசி வைகாசி, ஐப்பசி மாதங்க–ளில் சராசரியாக காய்கறி–களின் விலை உயரும். மற்ற மாதங்களில் காய்க–றிகளின் விலை குறைவா–கவே இருக் கும்.

    ஆனால் தற்போது வழக் கத்திற்கு மாறாக ஆனி மாதத்தில் காய்கறிகளின் விலை எதிர் பாராத அள–வுக்கு புதிய உச்சம் தொட் டுள்ளது. குறிப்பாக தக்கா–ளியின் விலை 100 ரூபாயை தாண்டி–யுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.

    அதேபோல் சின்ன வெங் காயத்தின் விலையும் 100 எட்டி இல்லத்தரசிகளுக்கு பெரும் சுமையை கொடுத் துள்ளது. இதனால் பெரும் பாலான உணவகங்கள் தக்காளியை தவிர்த்து வருகி–றது. அதேபோல் சின்ன வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இந்தநிலையில் சைவம், அசைவம் இரண்டையும் சாப்பிடுபவர்கள் அசை–வத்திற்கு தற்போது முழுமை–யாக மாறியுள்ளனர். காய்க–றிகளின் விலையை விட இறைச்சி வகைகளின் விலை குறைவாக இருப்ப–தாக கருத்து தெரிவித்துள்ள அவர்கள் காய்கறிகளின் அபரிமிதமான இந்த விலையேற்றம் தங்களது அன்றாட செலவை இரு–மடங்காக்கி விட்டதாக ஆதங்கத்துடன் தெரிவித்து வருகிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை விடு–முறை தினமான இன்று காய்கறி மார்க்கெட்டுகள் பெரும்பாலும் வெறிச்சோ–டியே காணப்பட்டன. அதற்கு மாறாக இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதே–போல் மீன் விற்பனை–யும் இன்று அமோகமாக இருந் தது.

    மதுரை மாநகரில் நெல் பேட்டை, தெற்குவாசல், கருப்பாயூரணி, நரிமேடு, காளவாசல், மாட்டுத்தா–வணி, பழங்காநத்தம், மக–பூபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடு, மாடு, மீன் விற்பனை கடை–களில் ஏராளமானோர் குவிந்தனர்.

    இதில் ஆட்டுக்கறியை பொறுத்தவரை எலும்புடன் கிலோ ரூ.700, தனிக்கறி ரூ.800 என்றும், கறிக்கோழி கிலோ ரூ.190, நாட்டுக்கோழி கிலோ ரூ.550 முதல் ரூ.600 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. சராசரியாக ஆட்டு இறைச் சிக்கு ஒரு கடையில் 10 முதல் 15 ஆடுகள் வரை விற் பனையானது.

    அதிரடியான இந்த விற்பனையால் இறைச்சி கடைக்காரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×