என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
- பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 தரப்பை சேர்ந்த வர்கள் மோதிக்கொண்ட னர். இதில் 4 பேர் காய மடைந்தனர்.
இந்த மோதல் காரணமாக அந்த கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்ட னர். இந்த சம்பவம் தொடர் பாக சோழவந்தான் இன்ஸ் பெக்டர் சிவபாலன் வழக்குப்பதிவு செய்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தார். மேலும் இதில் தொடர்புடைய 2 பேர் தலைமறை வானார்கள். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை விக்கிரமங்கலம் மெயின் ரோட்டில் வடகாடுபட்டியை சேர்ந்த ஒரு தரப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தலைமறைவான 2 பேரை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.






