என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில் “பைக்” ரேசில் இளைஞர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
    • சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

    மதுரை

    மதுரையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்ல வசதியாகவும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை-நத்தம் சாலையில் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சுமார் ரூ.615 கோடி செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் பாலத்தில் ஐயர் பங்களா, திருப்பாலை பகுதிகளில் இறங்குவதற்கு வசதியாக சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி களுக்கும், நத்தம் உள்ளிட்ட வெளியூர்களுக்கும் செல்லும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பகல் நேரங்களில் அதிக அளவில் செல்லுகிறது.

    ஆனால் இரவு நேரங்களில் சொற்ப அளவி லேயே கார், இருசக்கர வாகனங்கள் பறக்கும் பாலத்தில் சென்று வருகின்றன. இதனால் பறக்கும் மேம்பால பகுதிகளில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடை பெறுவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் இரவு நேரங்களில் போலீசார் அவ்வப்போது ரோந்து பணிகளிலும் ஈடுபடு கிறார்கள். பறக்கும் மேம்பாலத்தில் குறைந்த அளவே வாகனங்கள் செல்வதால் சாலைகளில் சாகசம் செய்பவர்களின் அட்டகாசமும் அவ்வப் போது அறங்கேறி வருகிறது. அதிவேகத்தில் பைக் ரேஸ் சென்று அந்த காட்சிகளை இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் பதிவிட்டு அதிக 'லைக்'களை பெறுவதும் இளசுகளின் தெளியாத கனவாக உள்ளது. இளம்பெண்களும் பாலத்தின் மையப் பகுதிகளிலிருந்து நடனமாடி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் சமீபகாலமாக டிரெண்டாகி வருகிறது.

    இதனை போலீசார் கடுமையாக எச்சரித்து வருகின்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் நான்கு இரு சக்கர வாகனங்களில் வாலிபர்கள் அதிவேகத்தின் சைரன் ஒலிக்க முன்பக்க சக்கரத்தை உயரே தூக்கிய படி அதிவேகத்தில் சென்று சாகசம் என்ற பெயரில் அபாயகரமான பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

    இது அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்களை கடும் பீதிக்கு உள்ளாக்கியது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் இந்த பைக் ரேஸ் இளைஞர்கள் மாயமாய் மறைந்து விட்டனர்.

    இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள் ளனர். இந்த நிலையில் பறக்கும் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சென்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக்ரேஸ் செல்வது சமூக விரோத செயலாகும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    நத்தம் மேம்பாலத்தில் பைக் ரேஸ் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பலமுறை எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதனை மீறி தொடர்ந்து மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் தேவை யின்றி வாகனங்களை நிறுத்துவது பாலத்தின் மேலே நின்று செல்பி எடுப்பது, வாகனங்களில் அதிவேகமாக சென்று சாகசம் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, பாலத்தின் மேலே அமர்ந்து கொண்டு கேக் வெட்டுவது, பாலத்தின் இருபுறங்களில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்து பொழுது போக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

    • மேலூர் அருகே தொழிலாளியை கொன்று கிணற்றில் பிணம் வீசப்பட்டது.
    • பிணமாக கிடந்தவர் நீல நிற சட்டை அணிந்திருந்தார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பனங்காடி கிராமத்தில் உள்ள வட்டக்கிணற்றில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே மேலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கிணற்றில் மிதந்த வாலிபரை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர் நீல நிற சட்டை அணிந்திருந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் பிணமாக கிடந்தவர் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது51) என தெரியவந்தது. தொழிலாளியான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.

    கடந்த 3 நாட்களாக மாயமாகி இருந்த மணிகண்டன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள் ளார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் 18 தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மதுரை

    பருவ மழைக்கு முன்ன–தாக மதுரையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க மழை நீர் வடிகால் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை–களை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் பருவ மழை காலம் என்பதால் மதுரையில் தாழ்வான பகு–திகளில் அதிகளவில் மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், அந்த பகுதிகளை கண்டறிந்து அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவ–டிக்கைகளை எடுப்பதற்காக மாநகராட்சி கமிஷனர் பிர–வீன்குமார் அதிகாரிக–ளுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். அந்த பகுதிளில் மழைநீரை தேக்கமின்றி வெளியேற்றுவது குறித்தும் ஆலோசித்து வருகிறார்கள்.

    மதுரை ஆழ்வார்புரம், செல்லூர் சுயராஜபுரம், மீனாம்பாள்புரம், பந்தல்குடி கால்வாய், பி.பி.குளம், கீழ தோப்பு, தத்தனேரி, காந்தி நகர், தைக்கால் தெரு, ஓபுளா படித்துறை, கிருது மால் கால்வாய், அண்ணா தோப்பு பகுதி, பேச்சியம்மன் படித்துறை சாலை, சுங்கம் பள்ளிவாசல், இஸ்மாயில் புரம், தாமிரபரணி வீதி, ஆத்திகுளம் கண்மாய் மற் றும் வண்டியூர் ஆகிய 18 பகுதிகள் தாழ்வான இடங்க–ளாக கண்டறியப்பட்டுள் ளன.

    இந்த பகுதிகளில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள் ளது. மதுரையில் ஏற்கனவே கடந்த பல மாதங்களாக முல்லை பெரியாறு குடிநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகின்றன.

    ஒரு மணி நேரம் மழை பெய்தால் கூட அந்த சாலை–களில் சேறும் சகதியும் அதிக அளவில் குவிந்து வாகன ஓட்டிகளை திக்கு முக்காட வைத்து வருகிறது. மேலும் விரிவாக்க பகுதிகளான ஆனையூர், தபால் தந்தி நகர், திருப்பாலை, கூடல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் பொது–மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.

    மேலும் பல மாதங்களா கியும் செல்லூர்-குலமங்க–லம் மெயின் ரோடு போடப்படாததால் வாகன ஓட்டிகள் படும் பாடு சொல்லி முடியாது. அது போல கூடல் நகர், ஆனை–யூர் பகுதிகளிலும் சாலைகள் படு மோசமாக காணப்படு–வதால் அடிக்கடி விபத்துக–ளும் நடந்து வருகின்றன.

    பருவமழை தொடங்குவதற்கு முன்னர் இந்த பகு–திகளில் சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. இதனால் அந்த பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை–களை விரைந்து சீரமைக்க வேண்டும்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கை கைவிட்டு சாலை பணிகளில் அக்கறை செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் விரும்பு கிறார்கள். மேலும் பருவ மழை தொடங்குவதற்கு முன்னர் மதுரை நகரில் உள்ள மழை நீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.
    • கமிஷனரிடம், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ., கமிஷனர் பிரவீன்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி 62-வது வார்டு முதல் 69-வது வார்டு வரை கழிவுநீர் பிரச்சினை உள்ளது. முறையாக பராமரிக்கா ததால் மேற்கண்ட வார்டுகளில் உள்ள சாலை மற்றும் தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதே போல் 72-வது வார்டான பைக்காரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

    எனவே முத்துப்பட்டியில் உள்ள கழிவுநீரேற்று நிலையத்தை மேம்படுத்தி புனரமைக்க வேண்டும். அதிக விசைத்திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தி புதிய பம்பிங் ஸ்டேசன் அமைக்க வேண்டும்.

    காளவாசல் முதல் சம்மட்டிபுரம் பகுதிகளில் கழிவுநீர் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் நவீன கழிவுநீர் அகற்றும் வாகனத்தை வாங்க வேண்டும். இதனால் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினை குறையும்.

    கடந்த 2 ஆண்டுகளில் மதுரை மாநகராட்சியில் ரூ.717.10 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு உள்ளதாக நகராட்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் விபரங்களை வழங்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் சாலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலைகளை செப்பனிட வேண்டும்.

    மாநகராட்சியில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இருளில் மூழ்கும் நிலை உள்ளது. எனவே தெரு விளக்குகளை பராமரித்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் மலைபோல் தேங்குகிறது. எனவே உரிய பணியாளர்களை நியமித்து குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும்.

    வைகை ஆற்றில் ஆகாய தாமரையை அகற்ற வேண்டும். பனையூர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும். மாரியம்மன் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். தமுக்கத்தில் உள்ள வளாக கட்டிடத்திற்கு வாடகை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே அதனை குறைக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை போக்கால அடிப்படையில் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மதுரை காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
    • இஞ்சி விலை ரூ.300, சின்ன வெங்காயம்-ரூ.90..

    மதுரை

    மதுரையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தக்காளி, இஞ்சி உள்ளிட்டவற்றின் விலைகள் பொதுமக்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றன.

    மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படு கிறது. இதனால் ஒட்டன் சத்திரம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு வரும்.

    மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விற்ப னைக்கு வருவது வழக்கம். வெளி மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தற்போது காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக மதுரை மார்க்கெட்டுகளில் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மதுரை மார்க்கெட்டு களில் தக்காளியின் விலை கடந்த 2 வாரங்களாக உச்சத்தில் இருந்து வருகிறது உழவர் சந்தைகளில் ரூ.100-ஐ தாண்டி விற்கப்படும் தக்காளி வெளி மார்க்கெட்டுகளில் ரூ.140 வரை விற்பனையாகி வருகிறது. பச்சை மிளகாய் கடந்த சில நாட்களாக கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை சற்று குறைந்து ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது.

    இஞ்சியை பொறுத்த வரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.220-க்கு விற்கப்பட்டது. தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து ரூ.270-க்கு உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால் வெளி மார்க்கெட்டுகளில் இஞ்சியின் விலை ரூ.300-ஐ தாண்டி உள்ளது. தற்போது இஞ்சி சீசன் இல்லை என்பதாலும் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை என்பதாலும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர்.

    காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அசைவ உணவிற்கு அதிக முக்கியத்து வம் தருவதாகவும், அதற்காக இஞ்சியின் தேவை அதிகரித் துள்ளதாலும் விலை உயர்ந்து வருவதாகவும் சில வியாபாரிகள் கூறுகின்ற னர்.

    மதுரையில் உள்ள உழவர் சந்தைகளில் மற்ற காய்கறிகள் விலை விவரம் வருமாறு:-

    கத்திரிக்காய்-ரூ.36, முருங்கைக்காய்-ரூ.50, உருளை-ரூ.50, கேரட் -ரூ.70, பட்டர் பீன்ஸ் -ரூ.120, முட்டைக் கோஸ்-ரூ.30, பச்சை மிளகாய்-ரூ.110, சின்ன வெங்காயம்-ரூ.90, பெரிய வெங்காயம்-ரூ.30, பூண்டு-ரூ.200, மல்லி-ரூ.90, கறிவேப்பிலை-ரூ 36 ஆக உள்ளது.

    தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றின் திடீர் விலை உயர்வுக்கு பதுக்கலும் ஒரு காரணம் என்று தெரிய வந்துள்ளது. விலை ஏற்றம் காரணமாக அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இந்த காய்கறிகளை சில வியாபாரிகள் தங்களது குடோன்களில் அதிக அளவில் பதுக்குவதாகவும் அதனால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுவ தாகவும் புகார் எழுந்துள்ளது.

    எனவே காய்கறிகளின் விலை மேலும் உயராமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி குடோன்களில் தக்காளி, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் பதுக்கப்பட்டுள்ளதா? என்பதை சோதனை செய்து கண்டறிய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவை சேர்ந்த வர் முத்துசாமி மகன் சிவ குமார் (வயது26). இவர் இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் காதலை அந்த பெண்ணிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த சிவகுமார் விரக்தியில் இருந்துள்ளார். சம்பவத்தன்று மனஉளைச்சல் காரணமாக நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து சிவகுமாரின் தாய் இந்திராணி ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் சிவகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சாதிக் உசேன்(47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் குடிபோதையில் வந்தார்.

    அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சாதிக் உசேன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சுமைலத் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்மேனி காளிமுத்து நகரைச்சேர்ந்தவர் பால்பாண்டி (52). இவருக்கு கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பு இருந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்தாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் ஹரிகிருஷ்ணன் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மனு வாங்கும் முகாம் நடந்தது.
    • இன்று வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு முகாம் நடை பெறுகிறது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் கிராம பொதுமக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் நடந்தது. விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற அலுவ லகத்தில் நடந்த முகாமிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் கலியுகநாதன் தலைமை தாங்கி கிராம பொது மக்க ளிடம் 68 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதில் கிராம நிர்வாக அலுவலர் முத்துமணி, துணைத்தலைவர் செல்வி, ஊராட்சி செயலாளர் பால் பாண்டி, பி.எல்.ஓ. அமைப் பாளர் ஜெயபாண்டி அம்மாள், வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல் முதலைக் குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்றதலைவர் பூங்கொடி பாண்டி கிராம பொதுமக்களிடம் 77 மனுக்கள் பெற்றுக் கொண்டார்.

    துணைத்தலைவர் ரேவதி பெரியகருப்பன், ஊராட்சி மன்ற செயலாளர் பாண்டி, கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கிராம உதவியாளர் பிரபு, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜென்சிராணி சுப்பிரமணி யன் நிகழ்ச்சிக்கு தலைமை யேற்று கிராம பொது மக்களிடம் 11 மனுக்களை பெற்றுக் கொண்டார். துணைத்தலைவர் வெள்ளையம்மாள், ஊராட்சி செயலாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் பவித்ரா, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    பானாமூப்பன்பட்டி ஊராட்சி மன்றத்தில் தலைவர் மகாராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கிராம பொது மக்களிடம் 15 மணுக்கள் பெற்றுக் கொண்டார். துணைத்தலைவர் ஆறுமு கம், ஊராட்சி செயலாளர் பாண்டி, வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    எரவார்பட்டி ஊராட்சியில் தலைவர் பாண்டி, துணைத்தலைவர் செந்தா மரை, ஊராட்சி செயலாளர் மலைச்சாமி ஆகியோர் கிராம பொதுமக்களிடம் 27 மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த சிறப்பு முகாம்களில் செல்லம்பட்டி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முனி யப்பன் ஆய்வு செய்தார். இன்று வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு முகாம் நடை பெறுகிறது.

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் 9-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    மதுரை

    மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை மறுநாள் (6ந்-தேதி) சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலைமையில் நடக்கிறது.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி நாளை மறுநாள் வியாழக்கிழமை (6-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் நடைபெறுகிறது. பொது வாக விநாயகருக்கு அரு கம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய் களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    • திருமங்கலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தூம்பக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அஜித்குமார்(வயது24), கூலி தொழிலாளி.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காளீஸ்வரி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

    கடந்த 2-ந் தேதியும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்படவே, கணவனும், மனைவியும் தனித்தனி அறைகளில் தூங்க சென்றனர். நள்ளிரவு நேரத்தில் விழித்த அஜித்குமார் வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்கில் தொங்கினார். பக்கத்து அறையில் சத்தம் கேட்டு காளீஸ்வரி வந்து பார்த்தபோது அஜித்குமார் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அஜித்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான ஒரு வருடத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சாலையோரம் மலை போல் தேங்கி இருக்கும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் சிரமைப்படுகின்றனர்.
    • தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    திருமங்கலம்

    திருமங்கலம் விமான நிலைய சாலை செல்லும் பகுதியில் நகராட்சி எல்லைக்கு அடுத்தபடியாக வடகரை ஊராட்சி அமைந்துள்ளது. ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வீடுகள் கடைகள் இருந்து வெளி யேற்றப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது.

    குறிப்பாக உணவகங்களில் மீதமாகும் உணவு கழிவுகள் சிக்கன் கடைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கோழிக்கழிவு கள் மூட்டை, மூட்டையாக கட்டப்பட்டு கொட்டப்படு கிறது.

    குப்பைகளை நாய்கள் கிளறுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசப்படுகிறது. காற்று வீசும்போது பறக்கும் குப்பையால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே விமான நிலைய சாலை செல்லும் சாலையில் சாலையோரம் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், குப்பை மேடாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த குப்பைகளால் அந்தப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் கொட்டப் படும் கழிவுகளை உண்ப தற்காக வரும் நாய், பன்றி, மாடுகள் போன்றவை களுக்குள் ஏற்படும் சண்டையால் அவைகள் சாலைகளில் ஓடிவரு கின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.

    மேலும் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அந்தப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.

    எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதிக்கவும், குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், குப்பைகளை வாங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சியில் நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறவில்லை.
    • 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கலெக்டர் சங்கீதாவிடம் கொடுத்தனர்.

    மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தனம், ஜெயலட்சுமி, ஜெயக்கொடி, பஞ்சு, தங்கசாமி, பாண்டியராஜன் ஆகியோர் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சங்கீதாவை சந்தித்து தாங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து கோவிலாங் குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் கலெக்டர் விளக்கம் கேட்டார். அவர்கள் ஊராட்சியில் வெளிப்படை தன்மை இல்லை எனக்கூறி ராஜினாமா செய்வதாக தெரிவித்தனர்.

    ராஜினாமா கடிதம் கொடுத்த பின்பு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நிருபர்களிடம் கூறியதா வது:-

    செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சியில் நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து கேட்டால் உரிய பதில் இல்லை. வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார்கள். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனை கண்டித்து நாங்கள் ராஜினாமா கடிதத்தை கலெக்டரிடம் கொடுத்துள்ளோம். அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • எலும்பு நோய்கள் குறித்து சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • முகாமில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    மதுரை

    மதுரை கோச்சடை லட்சுமி மருத்துவமனை - ஒலிம்பஸ் எலும்பியல் சென்டர் சார்பில் ஆஸ்டியோ போரோசிஸ் (எலும்பு தேய்மானம்) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பின் அடர்த்தி மற்றும் தரம் குறைவதால், எலும்புகள் மிகவும் உடையக்கூடிய தாகவும், எலும்பு முறிவு களுக்கு ஆளாகக்கூடிய தாகவும் ஆகும். இது பெரும்பாலும் "அமைதி யான நோய்" என்று குறிப்பிடப்படுகிறது.

    இதுகுறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டது. இதில் எலும்பு, மூட்டு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை, அட்வான்ஸ் ட்ராமா கேர், எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை, ஆர்தோஸ் கோப்பி உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில் நுட்பம் வாயிலாக சிகிச்சை வழங்குவதில் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர் சரவணன், முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரூ.2500 மதிப்புள்ள இலவச எலும்பு அடர்த்தி பரிசோ தனை, இரத்த பரசோத னைகள், எக்ஸ்ரே மற்ற அனைத்து மருத்துவ சிகிச்சைகள் குறித்த ஆலோ சனைகள் வழங்கினார்.

    முகாமில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ×