என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை அருகே தாத்தா வீட்டில் தங்கியிருந்த இளம்பெண் திடீர் மாயமாயானார்.
    • பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அந்த பெண் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் நந்திரெட்டிபட்டி கிரா–மத்தை சேர்ந்தவர் கோபி–ராஜ் மகள் மலர் (வயது 19). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மகள் மலரை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிந்து–பட்டி போலீஸ் சரகத் திற்கு உட்பட்ட நக்கலக் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அழகுமலை (62) வீட்டில் தங்க வைத்திருந்தார்.

    கடந்த 4 மாதங்களாக மலர் அங்கு தங்கியிருந்தார். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் மலர் குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவரது தாத்தா கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீ–சார் வழக்குப்பதிவு செய்து மாயமான மலர், தானாகவே எங்கேனும் சென்றாரா அல்லது யாராவது மர்ம நபர்களால் கடத்தப்பட்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசா–ரணை மேற்கொண்டு வருகி–றார்கள்.

    • சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.
    • வீடு இல்லாதவர்கள் வீடு கேட்டு, முதியோர் பென்சன் உட்பட அடிப்படை வசதிகளை கேட்டு மனு கொடுத்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் கிராம பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது .

    சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சியில் நடந்த சிறப்பு முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாரன் தலைமை ஏற்று கிராம மக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டார். இதில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி, தோட்டக் கலை மாரிச்செல்வம், ஊராட்சி செயலாளர் கதிரேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கருப்பட்டி ஊராட்சியில் தலைவர் அம்பிகா மனுக்கள் பெற்றுக் கொண்டார். கிராம நிர்வாக அலுவலர் பழனி, துணைத்தலைவர் சித்ராதேவி, ஊராட்சி செயலாளர் முனியாண்டி மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    இரும்பாடி ஊராட்சியில் தலைவர் ஈஸ்வரி பண்ணை செல்வம் மனுக்களை பெற்றுக் கொண்டார். துணைத்தலைவர் பிரியா சேகர், ஊராட்சி செயலாளர் காசிலிங்கம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தென்கரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டார் துணைத்தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் முனியராஜ். கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ், கால்நடை ஆய்வாளர் ஜெயராமச்சந்தி ரன் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.

    வாடிப்பட்டி யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சை மணி, ஊராட்சி செயலாளர் மனோபாரதி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாக ரன் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    மன்னாடிமங்கலம் ஊராட்சியில் தலைவர் பவுன் முருகன், துணைத் தலைவர் பாக்கியம் செல்வம், ஊராட்சி செயலா ளர் திருச்செந்தில் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.

    காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன், ஊராட்சி செயலாளர் ஒய்யனன் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.

    இதேபோல் மேலக்கால், திருவேடகம், நெடுங்குளம், திருவாளவாயநல்லூர், சித்தாலங்குடி, சி.புதூர், ரிஷபம், குருவித்துறை ஆகிய ஊர்களிலும் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.

    இந்த முகாமில் வீடு இல்லாதவர்கள் வீடு கேட்டு, முதியோர் பென்சன், குடிநீர் குழாய் இணைப்பு உட்பட அடிப்படை வசதிகளை கேட்டு கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மனு கொடுத்தனர்.

    • கலவரம் நடக்கும் மணிப்பூர் தலைநகர் இம்பால் போய் பார்க்கவில்லை.
    • பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    மதுரை:

    பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மணிப்பூரில் நடைபெறும் மதக்கலவரம் நீடித்துக் கொண்டே செல்கிறது. அங்கு மனித உரிமைகள் நிறைய நடக்கிறது. மெய்தி எனும் இந்து சமுதாயம் சுமார் 50 சதவீதம் பேர் உள்ளனர். மாற்று சமுதாயத்தினர் அவர்களை முந்த முயற்சிக்கிறார்கள்.

    பிரதமர் மோடி அமெரிக்கா போவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. கலவரம் நடக்கும் மணிப்பூர் தலைநகர் இம்பால் போய் பார்க்கவில்லை. பிரதமர் உடனே போய் கலவரத்தை அடக்க முயற்சி செய்ய வேண்டும்.

    பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து வந்தால் ஒற்றுமையாக செயல்பட்டால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது. நரேந்திர மோடி பிரதமராக இருந்த காலத்தில் எதுவும் செய்யவில்லை.

    கோவில்கள் அனைத்தும் வெளிவர முயற்சி செய்து கொடுத்தோம். ஜாதி, மதம் மற்றும் அனைத்து இந்துக்களையும் ஒற்றுமையாக்க முயற்சி செய்தோம். இந்து ஒற்றுமைக்காக பா.ஜனதாவுக்கு ஓட்டு கிடைக்கும். பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. மோடி எதுவும் செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகிறார்கள்.

    வெள்ளைக்காரர்கள், முஸ்லிம்கள் நமது கலாச்சாரத்தை கெடுத்து விட்டு சென்றனர். அதை மீட்பதற்கும், மறுமலர்ச்சி ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என இந்துக்களிடம் எண்ணம் வந்துள்ளது. அதற்காக நமக்கு ஓட்டு கிடைக்கும்.

    மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க பெயர் வைப்பது குறித்து பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது. பிரபுல் பட்டேல் என்னிடம் கூறினார். மதுரை விமான நிலைய திறப்பு விழா சமயத்தில் மேடையில் பிரபுல் பட்டேல் அறிவிக்க இருந்த நேரத்தில் ப.சிதம்பரம் அறிவிக்க விடாமல் தடுத்து விட்டார்.

    முத்துராமலிங்க தேவர், தேவர் என்பதை தவிர நாட்டுடைய விடுதலைக்காக போராடியவர். ராஜ குடும்பத்தை சேர்ந்தவர். மதுரை விமான நிலையத்திற்கு அவர் பெயர் வைக்காதது எனக்கு மிகவும் வருத்தம். இன்றைக்கு ஆட்சியில் இருந்தாலும் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. யாரும் ஆதரிக்கவில்லை.

    இவர்கள் கடிதம் கொடுத்தால் பாராளுமன்றத்தில் பேசி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க ஏற்பாடு செய்வேன். ஒருவருக்கு ஒருவர் பொறாமையில் பேசி செயல்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவ மாட்டார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப தி.மு.க. தொண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
    • தி.மு.க. வரலாறு தெரியாமல் சிலர் சவால் விடுகிறார்கள்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் அருகே தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆளும் கட்சியினராக இருப்பதால் தி.மு.க.வினருக்கு பழைய உணர்வுகள் இல்லை என்று நினைக்க வேண்டாம். கட்சிக்கு ஒரு பிரச்சனை என்றால் குடும்பத்தை விட்டு வருகிறவன் தி.மு.க. தொண்டன். அதுபோல வேறு எந்த கட்சியிலும் கிடையாது. அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவ மாட்டார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப தி.மு.க. தொண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

    தி.மு.க. வரலாறு தெரியாமல் சிலர் சவால் விடுகிறார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பெங்களூரு சென்று விட்டு திரும்ப முடியாது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். முடிந்தால் அவர் முதலமைச்சரை தடுத்து பார்க்கட்டும். பிறகு என்ன நடக்கும்? என தெரியும். மற்ற கட்சிகளை போல் தி.மு.க. வில் தற்போது வந்தவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் மோடிகள் வந்தாலும் தி.மு.க. வை அழிக்கவும் முடியாது. ஒழிக்கவும் முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய மேம்பாலம் விரைவில் கட்டப்படும்.
    • அமைச்சர் எ.வ.வேலு கூட்டத்தில் பேட்டியளித்தார்.

    மதுரை

    மதுரை முனிச்சாலை பகுதியில் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு சிலை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனி–வேல் தியாகராஜன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், மேயர் இந்தி–ராணி, பொன் வசந்த் ஆகி–யோர் ஆய்வு மேற்கொண் டனர்.

    அதனைத் தொடர்ந்து வருகிற (ஜூலை) 15-ந்தேதி தமிழக முதல்-அமைச்சரால் திறக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிரு–பர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறி–யதாவது:-

    கடந்த 11.1.2022 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டா–லின் ஆய்வு மேற்கொண்டு ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் அமைப்ப–தற்காக ஆணை பிறப்பித் தார். பின்னர் இந்த நூலகம் அமையும் இடத்திற்கு ஒன் றுக்கு மூன்று முறை நேரில் முதல்வர் ஆய்வு செய்து இறுதியாக ரூ.134 கோடி மதிப்பீட்டில் இந்த கட்டிடம் அமைக்கப்படுகிறது.

    மேலும் இந்த நூலகத்தில் ரூ.60 கோடிக்கு புத்தகங்கள், ரூ.18 கோடிக்கு பர்னிச்சர் கள், ரூ.5 கோடிக்கு கணினி வசதிகள் செய்யப்படுகிறது. ஆக மொத்தம் ரூ.215 கோடி மதிப்பீட்டில் தென் பகுதி மக்களின் பயன்பெறும் வகையில் இந்த நூலகம் அமைகிறது. அண்ணா நூற் றாண்டு விழாவின் போது சென்னை கோட்டூர்பு–ரத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அண்ணா நூற் றாண்டு நூல–கத்தை திறந்து வைத்தார்.

    தற்போது முதல்வர் மு.க.–ஸ்டாலின் 5 முறை தமிழ–கத்தை ஆண்ட கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மது–ரையில் கலைஞர் நூற் றாண்டு நூலகத்தை வரும் ஜூலை 15-ந்தேதி திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மக்களை சந்திக் கும் வகையில், நிகழ்ச்சிகள் அனைத்தும் மதுரை ஆயுதப் படை மைதானத்தில் நடை–பெறுகிறது.

    அதற்கான ஆயத்த பணி–களை ஆய்வு செய்வதற்காக தற்போது இறுதியாக வந்து உள்ளோம். இந்த கட்டிடப் பணிகள் ஜூலை 10-ந்தேதி–யுடன் நிறைவு பெற்று மீத–முள்ள ஐந்து நாட்கள் நிகழ்ச்சி நடத்துவது சம்பந்த–மான வேலைகள் நடைபெ–றும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசும் போது, சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையை பெருமைப்படுத்தும் வகை–யில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணா–நிதி மதுரை மாநகராட்சியாக அறிவித்தார். மேலும் பல திட்டங்களை மதுரைக்கு கொண்டு வந்தார் என்றும், அதேபோல் மதுரைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை கொடையாக அளித் தார் என்று சொல்வதற்கு பதிலாக தவறான வார்த் தையை உபயோகப்படுத்தி விட்டேன், உணர்ச்சி வசப் பட்டு விட்டேன்.

    அதற்காக இப்பொழுது நான் வருந்துகிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மதுரை–யில் கோரிப்பாளையம் பகுதியில் ஒரு மேம்பாலமும், மதுரை அப்போலோ மருத்துவமனை அருகே ஒரு மேம்பாலமும் நிச்சயமாக வர இருக்கிறது. மதுரை நெல்பேட்டையில் இருந்து ஒரு மேம்பாலம் கட்ட முடிவு செய்தோம். ஆனால் அந்தப் பகுதி மிக குறுவலான பகுதியாக இருப்பதினால் அதிகமான கட்டிடங்களை எடுக்க நேரிடும் என்பதால் இப்பகுதியில் உள்ள மக்கள் வியாபாரிகள் பாலம் கட்டும் பணியினை செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்தனர். அதனால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் சாலைகளை பெரிது படுத்த நடவடிக்கை–கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் தொடர்ந்து மதுரை வைகை ஆற்றுச்சாலையை இணைக்கும் சாலைகள் விரைவில் நடைபெற இருக்கி–றது. நேற்றைய பொதுக்கூட்டத்தில் நான் பேசும்போது, ஆன்மீகத் துக்குள் தான் திராவிடம் இருக்கிறது என்று கூறி–னேன். அது ஒன்றும் தவ–றில்லை, காரணம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி–யில் தான் தமிழகத்தில் அதி–கமான கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது என்றும் மேலும் பல கோவில் திருப்பணிகளை தி.மு.க. அரசு செய்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    முன்னதாக இந்த ஆய்வு நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், மேயர் இந்தி–ராணி, மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றிருந்த ஓய்வூதியர்கள் இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை.
    • போதிய வசதிகள் செய்யப்படவில்லை.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஓய்வூதியதாரர் களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 60 வயதிற்கும் மேற்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    காலை 10 மணிக்கு தொடங்கிய நேர்காணல் மாலை வரை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்தவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை. ஒருவருக்கு நேர்காணல் நடத்த குறைந்தது 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஆனது. இதனால் நேர்காண லுக்கு வந்திருந்த வயதான வர்கள் அலுவலகத்தின் வெளியே நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால் கடுக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக அவர்களால் நிற்க முடியவில்லை. இதனால் பலர் அங்குள்ள மரத்தடி யில் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. எனவே ஓய்வூதியதாரர்களின் நேர்காணலுக்கு வருவோ ருக்கு இருக்கை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • மதுரையில் பள்ளி ஆசிரியர் வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை நடந்தது.
    • மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தெப்பக்குளம் கொண்டிதொழு தெருவை சேர்ந்தவர் பீமல் ராய் (32), பள்ளி ஆசிரியர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 வயது குழந்தையும் உள்ளனர்.

    நேற்று இரவு 8 மணியளவில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி யடைந்த பீமல் ராய் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 26 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம், ஒரு கைக்கடி காரம் ஆகியவை திருடப் பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து தெப்பக்கு ளம் போலீசில் பீமல்ராய் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து நகை, பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    மதுரை தெற்கு வாசல் தெற்கு கிருஷ்ணன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் ரத்தினகிரி (54). சம்பவத் தன்று அதிகாலை இவரது வீட்டில் புகுந்த மர்மநபர் பீரோவில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டார். இது குறித்து தெற்கு வாசல் போலீசில் ரத்தினகிரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • சிதம்பரம் நடராஜன் கோவிலில் அரசு தலையிட்டது ஏன்? என மதுரையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.
    • அனைத்து உரிமையும் இந்துசமய அறநிலையத்துறைக்கு உண்டு.

    மதுரை

    மதுரை மாவட்டம், அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நவீன பிரசாத தயாரிப்பு கூடத்தை யும், ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புனர மைக்கப்பட்ட சிறுவர் பூங்கா வையும் பயன் பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.

    அப்போது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு கடந்த 2 ஆண்டுகளில் இந்து சமய அறநிலை யத்துறையின் மூலம் தமிழ்நாட்டில் கோவில் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை அழகர்கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விைரைவில் தொடங்கப்பட உள்ளது.

    ஒரு மாதத்தில் ராஜ கோபுரத்திற்கும், அடுத்த 2 மாதத்தில் கள்ளழகருக்கும் குடமுழுக்கு நடத்திட திட்ட மிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 764 கோவில்களில் 501 கோவில்களுக்கு மத்திய அரசின் தர சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் கோவிலை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. சுவாமிமலை கோவில், திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவி லுக்கு ரோப்கார் ஆகியவற்றிற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 812 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப் பட்டுள்ளது.எனவே இந்த ஆட்சியை "குட முழுக்கின் உற்சவ ஆட்சி" என சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

    கடந்த ஆண்டு மேற்கொண்ட குடமுழுக்கு உள்ளிட்ட திருப்பணிகளை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் கூடுதலாக தொடர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்ட பத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறை வடையும்.

    அதனை தொடர்ந்து கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தும் பணிகள் நடைபெறும். அழகர் மலையில் சாலை அமைக்கும் பணிகளுக்காக வனத்துறை யின் அனுமதி பெறப்பட்டு ஓரிரு நாட்களில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர் - பக்தர் உறவு சமூகமாக இல்லா விட்டால் அதை கேட்கும் உரிமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உண்டு. பக்தர்கள், இறைவனுக்கு அடுத்த படியாக கருதுவது தீட்சிதர்களையும், அர்ச்ச கர்களையும் தான். அதை மதித்து பக்தர்களை கவுரவிக்க வேண்டிய பொறுப்பு தீட்சி தர்களுக்கு உண்டு. அப்படிபக்தர்களுக்கு மதிப்பு அளிக்காவிட்டால் அங்கு அரசு தலையிடும். கோவிலில் சட்டமீறல் இருந்தால் சட்டத்தின் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் அதைக்கேட்கும் அனைத்து உரிமையும் இந்துசமய அறநிலையத் துறைக்கு உண்டு.

    உயர்நீதிமன்ற ஆணையை தீட்சிதர்கள் மீறியதால் தான் அரசு அதில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசின் ஆணையை மீறியஅர்ச்சகர்களின் நடவடிக்கையை உடைத்து எறிந்து பக்தர்கன் கனகசபை மீது ஏறி நான்காவது நாள் தரிசனம் செய்தார்கள். இதை ஒரு போட்டியாக கருதவில்லை.

    பக்தர்களின் தேவையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தெய்வத்திற்கு பணிவிடை செய்யும் தீட்சிதர்களுக்கு உண்டு. நேர்மையாக, மனசாட்சி யுடன் நடந்து கொள்ள வேண்டும். தனியார் வசம் சொத்துக்கள் இருந்த போது கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு உள்ளன. அதன் காரணமாகத்தான் அறநிலைய துறை வசம் கொண்டு வரப்பட்டன. அரசிடம் உள்ள வரை தான்கள்சொத்துக்கள், பக்தர்கள், பணியாளர்கள், அர்ச்சகர்க் அனைவருக்கும் பாதுகாப்பு என என்பதை உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் தி.மு.க. பொருளாளர் சுந்தரபாண்டியன், இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் சசிக்குமார், மருதுபாண்டி, கவுன்சிலர் காளிதாஸ் உள்பட பலர் உள்ளனர்.

    • திருவிழா 20-ந் தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.
    • 26-ந்தேதி மாற்றும் வைபவம் நடைபெறும்.

    ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர் வாக்கின்படி விவசாயப் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்வர். அவர்கள் தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.

    உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியவை நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டுத் திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது.

    விழாவின் தொடக்கமாக அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.

    அன்றைய தினத்தில் இருந்து விழா நடைபெறும் 10 நாட்கள் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    விழாவில் 3-ம் நாளான 22-ந் தேதி ஆடிப்பூரத்தன்று மூலஸ்தானம், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவமும், 7-ம் நாளான 26-ந் தேதி இரவு வீதிஉலா முடிந்த பின் உற்சவர் சந்நதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும்.

    ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மேலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • தேவையான அளவுக்கு உயரழுத்த மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தற்போது 2நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் பகல் நேரங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    மேலும் பகல் நேரங்களில் மிக குறைந்த மின்னழுத்தமே பிரச்சினை ஏற்படுகிறது. வீட்டில் இயக்கப்படும் மோட்டார், பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின் ஆகியவை செயல்படுவதில்லை. இதனால் வெளியே செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    கடை மற்றும் வீடுகளிலும் பல்புகள் அவ்வப்போது மினிட்டாம்புச்சியை மின்னுவது போல் விட்டுவிட்டு வருகிறது. இதனால் பல்புகள் செயலிழந்து விடுகிறது. எனவே மேலூர் நகர்பகுதியில் அறிவிக்காத மின்வெட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    குறைந்த அழுத்த மின்சாரம் வருவதை சரி செய்து தேவையான அளவுக்கு உயரழுத்த மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமங்கலம் நகராட்சியில் மக்கும் குப்பையில் உரம் தயாரித்து நகராட்சி தலைவர் இலவசமாக வழங்கினார்.
    • 45 நாட்களுக்கு ஈரப்பதத்துடன் தண்ணீர் தெளித்து உரம் பதப்படுத்தப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி யில் உள்ள 27 வார்டுகளில் பொதுமக்கள் துப்புரவு பணியாளர்கள் மூலம் பெறப்படும் குப்பைகளை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகிறது. முதற்கட்டமாக 100 மில்லி மீட்டர் அளவுக்கு மக்கும் கழிவுகள் பிரிக்கப்பட்டு அவற்றை அரைத்து உரமாக வெளியேற்றப்படுகிறது.

    அந்த உரத்தை குவித்து வைத்து 45 நாட்களுக்கு ஈரப் பதத்துடன் தண்ணீர் தெளித்து பதப்படுத்தப்படுகிறது. அதன்பின் 30 மில்லி மீட்டர் அளவுள்ள கழிவுகள் இயந்திரங்கள் மூலமாக குறைந்தபட்சம் நாலு மில்லி மீட்டர் அளவுக்கு இயந்திரம் உதவியுடன் பொடியாக மாற்றி இயற்கை உரமாக்கப் படுகிறது. மேலும் குப்பை கிடங்கில் வாழை இலை, தோட்ட கழிவுகள், மா இலைகள் போன்றவற்றை அரைத்து உலர வைத்து அதனை இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.

    இதனால் 16 டன் குப்பை களை 10 டன் மக்கும் குப்பைகளாக வருவதை தொடர்ந்து மக்கும் குப்பை களை இயற்கை உரம் ஆக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை பிளாஸ்டிக் கழிவுகள் இயந்திரம் மூலமாக சமப்படுத்தி பண்டலாக மாற்றி சிமெண்ட் தொழிற் சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் 10 டன் வரை தயாரிக்கப்படும் இலவச உரங்களை விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சின்னச்சாமி, வீரக்குமார், திருக்குமார், அமுதா, சரவணன், சங்கீதா, சுகாதார அதிகாரி சண்முகநாதன், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    • தமிழர்களின் வீர விளையாட்டை அடையாளப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் இந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர்களின் வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அமைய வேண்டும் என முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முழுவதுமாக நிறைவு பெறும். பணிகள் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து 4-வது முறையாக மைதான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன்.

    இதுவரை 35 சதவீதம் பணிகள் முடிவு பெற்றுள்ளது. தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    தற்போது மைதான நுழைவு வாயில் வளைவு, மழைநீர் வடிகால் வசதி, செயற்கை புல் தரை, குடிநீர் வசதி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி, வீரர்கள், உரிமையாளர்கள் ஓய்வு ஆறை, மருத்துவ வசதி, கால்நடை மருத்துவ வசதி, உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பிட்ட நாளில் பணிகள் நிச்சயம் முடிவு பெறும். மைதானத்திற்கு விரைந்து வர புதிதாக சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடையிடையே பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. அனைத்து பணிகளும் முழுமையாக முடிவு பெற்ற பின்னரே இந்த மைதானம் திறக்கப்படும். புதிய சாலை அமைக்கும்போது தனியார் நிலங்களும் கையகப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே அதற்கான பணிகளும் விரைவில் நடைபெற உள்ளது.

    வழக்கம் போல் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் ஆங்காங்கே வழக்கம்போல் நடக்கும். தமிழர்களின் வீர விளையாட்டை அடையாளப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் இந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசை மக்கள் பாராட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் விமர்சித்தால் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

    ×