என் மலர்tooltip icon

    மதுரை

    • அ.தி.மு.க.வினர் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும்.
    • ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை

    வருகிற ஆகஸ்டு 20-ந் தேதி மதுரையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தக்கால் அமைக்கும் பணி மற்றும் ஆலோசனை கூட்டம் மதுரை ரிங் ரோடு கருப்புசாமி கோவில் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது.

    இதற்காக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை யில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:-

    தாய் தமிழ்நாட்டை இந்திய அளவில் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்தி, கழகத்தின் எளிய தொண்ட னும் மக்கள் சேவையாலும், உழைப்பாலும் உயர்ந்த இடத்திற்கு வரலாம் என்ற வரலாற்றை கழகத்தில் உருவாக்கித்தந்து, ஜனநா யகத்தை கட்டி காத்து, எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும். இங்கு இல்லாமல் இல்லாத நிலை வேண்டும் என்ற அம்மாவின் கனவை நனவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி.

    இந்த இயக்கம் இன்னும் நூற்றாண்டு காலம் அன்னை தமிழகத்தில் மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்று அம்மா வின் வார்த்தைகளை வேத வாக்காக கொண்டு க உறுப்பி னர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணியில் 2 கோடி தொண்டர்களை கழகத்தில் இணைத்திட இலக்காக வைத்து, இந்த 75 நாட்களில் ஒரு கோடியே 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து தாய் தமிழ்நாட்டில் புதிய வெற்றி சரித்திரம் படைத்து காட்டியுள்ளார்.

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வருகின்ற ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறு கிறது. இந்த மாநாட்டை புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் நேசித்த தென்தமிழகத்தின் தலை நகரம் மதுரையில் நடைபெறும் என்று அறிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டத் தின் சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    இந்திய தேசமே திரும்பி பார்க்கும் வகையில், மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா போல நடைபெறும் இந்த மாநாட்டில், கழகத் தொண்டர்கள், பொது மக்கள் குடும்பம், குடும்ப மாக பங்கேற்று எடப்பாடி யார் தலைமை யில், அம்மாவின் புனித ஆட்சியை தாய் தமிழகத்தில் மீண்டும் ஏற்படுத்திட உறுதி ஏற்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் சரவணன், பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சாலை மறியலில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிலையத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என 4 மாவட்டங்களில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த 4 மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதி யாக உசிலம்பட்டி பஸ் நிலையம் உள்ளது.

    1996-ம் ஆண்டு கட்டப்பட்ட பஸ் நிலையம் சிதிலமடைந்தது. இதைத் தொடர்ந்து சுமார் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணி களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    பயணிகள் வசதிக்காக அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 2 தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. புனரமைப்பு மற்றும் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடங்களை நகராட்சி சார்பில் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன் அறிவிப்பின்றி பஸ் நிலையத்தை மூடியுள்ளதாக குற்றம் சாட்டி பஸ் நிலைய வளாக கடை வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த அய்யப்பன் எம்.எல்.ஏ., வியாபாரிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டார். உசிலம்பட்டி போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் எம்.எல்.ஏ., வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து தடுப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது. கால அவகாசம் அளிக்கப்பட்டு அனைத்து துறைகளின் அனுமதி பெற்ற பின்னர் பணிகள் தொடங்கும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அரசு பள்ளிகள் அடிப்படை வசதிகளின்றி செயல்படுகின்றன.
    • முறையாக பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்குட் பட்ட விளாங்குடி 20-வது வார்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் கழிப்பறை முழுவதுமாக சேதமடைந்துள்ளது. சுவற்றில் விரிசல் ஏற்பட்டு கீழே விழும் நிலையில் உள்ளது. பராமரிப்பின்றி தரை பெயர்ந்து காணப்படு கிறது. போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறை பராமரிக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த கழிப்ப றையை பயன்படுத்தும் மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    மேலும் பள்ளி வளாகம் அருகே கால்நடைகள் கட்டுப்படுகின்றன. அவற்றின் கழிவுகள் அகற்றாமல் கேட் அருகிலேயே கிடக்கின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படா மல் உள்ளதாக கூறப்படு கிறது.

    இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டி, கழிப்பறைகள், பள்ளி வளாகத்தை சீரமைத்து தர வேண்டும் என்றும், முறையாக பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

    • பரிதிமாற்கலைஞர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தப்பட்டது.
    • நாம் தமிழர் கட்சி சார்பில் மருதமுத்து உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.

    திருப்பரங்குன்றம்

    தமிழறிஞர் பரிதிமாற்கலைஞரின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு விளாச்சேரியில் அவரது இல்லத்தில் உள்ள சிலைக்கு கலெக்டர் சங்கீதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, மண்டல தலைவர் சுவிதா விமல், பி.டி.ஒ.க்கள் கீதா, ராமமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் முருகன், துணை தலைவர் குரும்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் விமல், துணை அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ், மாமன்ற உறுப்பினர்கள் உசிலை சிவா, இந்திராகாந்தி ஆகியோர் பரிதிமாற்கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், முன்னாள் சேர்மன் தர்மராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம் ,மருதுபாண்டியர் பேரவை கண்ணன்,ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்ற நிர்வாகி அய்யல்ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் மருதமுத்து உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.

    • பூவரசம் காயை சாப்பிட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவ-மாணவிகளை தி.மு.க. மாவட்ட செயலாளர் நேரில் சந்தித்தார்.
    • சிகிச்சையில் இருந்த மாணவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத்திற்குள் இருந்த பூவரசரம் மரகாயை எடுத்து சாப்பிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் ஒவ்வொரு மாணவராக மயக்கம் அடைந்தனர். அவர்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் மணி மாறன் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் சிகிச்சையில் இருந்த மாணவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் தெரி வித்தார்.

    மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் கேட்ட றிந்தார். அப்போது திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட துணைசெயலாளர் லதா அதியமான், தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், ஒன்றிய செயலாளர்கள் ஆலம்பட்டி சண்முகம், மதன்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவமுருகன்.

    பி.எஸ்.என்.எல். செல்வம், அணி அமைப்பா ளர்கள் விமல், வில்லூர் ஞானசேகரன், துணை அமைப்பாளர்கள் சுரேஷ், காளிதாஸ், வக்கீல் தங்க சாமி, நகர துணை செய லாளர் செல்வம், நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார் வீரக்குமார், சின்னசாமி, இளைஞரணி ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு நாளை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு-கட்டுரை போட்டிகள் நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தாய்த்தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளினைப் பெருமைப் படுத்தும் வகையில் அந்த நாள் "தமிழ்நாடு நாளாகக்" கொண்டாடப்படும் என முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

    இவ்வறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 12-ந்தேதி முற்பகலில் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகக் கூட்ட அரங்கில் நடத்தப்பெற உள்ளன. அரசு, தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.

    ''தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்" என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், "தமிழ்த் திரை உலகத்தைப் புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல்" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி யும் நடைபெற வுள்ளது.

    மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.7ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.5ஆயிரம் என்ற வீதத்தில் வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவி லான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர்.

    மாநில அளவிலான போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.50ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.30ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.20ஆயிரம் வீதம் வழங்கப் பெறும்.எனவே பள்ளி மாணவ- மாணவிகள் இப்போட்டி களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • ஆகஸ்டு 20-ந் தேதி மாபெரும் எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரையில் ஆகஸ்டு 20-ந் தேதி மாபெரும் எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டின் முகூர்த்த கால் மற்றும் பணிகள் தொடர்பாக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோ சனை செய்வதற்காக மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை பனகல் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி அளவில் நடைபெறு கிறது.

    இந்த கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. எழுச்சி மாநாடு குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப் படுகின்றன.

    இந்த ஆலோ சனை கூட்டத்தில் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்டக் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள், செயல் வீரர்கள் அனைவரும் திர ளாக பங்கேற்று சிறப் பிக்கும்படி வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • இளம்பெண்கள் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சிந்தாமணி கீழத்தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் பாண்டிராஜ்(வயது18). இவர் வேலைக்கு செல்லா மல் இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த பாண்டியராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை சோலையழகு புரம் மகாலட்சுமி கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் ரம்ஜான்பீவி(45). கணவ ருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனியாக வசித்து வருகிறார். இதனால் மன விரக்தியில் இருந்த ரம்ஜான்பீவி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் சுல்தான் அலாவு தீன் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அண்ணாநகர் தாசில்தார் நகரில் உள்ள சவுபாக்கிய கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி சுகந்தி(39). கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் மன முடைந்த சுகந்தி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தங்குடி அய்யன் பரமகுரு நகரை சேர்ந்தவர் பாண்டிகணேஷ்(37). திருமணமாகாத இவர் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஒப்படைக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022-ன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப் பட்டுள்ளளது. இதன் காரணமாக கிளிகளை வீடுகளில் வளர்ப்பதற்காக விற்பனை செய்வது தண்ட னைக்குரிய குற்றமாகும்.

    இந்நிலையில் மதுரை செல்லூர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் நூற்றுக்கணக்கான கிளிகள் வளர்க்கப்படுவதாகவும், அதற்கு அதனுடைய உடல்வாகுக்கு ஒவ்வாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கிளிகளை வளர்ப்பவர் கிளிகளின் இறக்கைகளை வெட்டுதல், கிளிகளை காயப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடு படுவதாகவும் தொடர்ந்து வனத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது.

    இதனை தொடர்ந்து நேற்று செல்லூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் மட்டும் வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த 10-க்கும் மேற்பட்ட கிளிகளை வனத்துறை அதி காரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாவட்ட வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டில் கிளிகளை வளர்ப்பது குற்றமாகும். எனவே கிளிகள் வளர்க்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வருகின்ற 17-ந் தேதிக்குள் கிளிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அதனை மீறி கிளிகளை வீட்டில் வளர்த்தால் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    • மருத்துவமனையில் மாணவர்களுக்கு ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆறுதல் கூறினார்.
    • மருத்துவ அதிகாரியிடம் சிகிச்சை குறித்து கேட்கப்பட்டது. மாண வர்களுக்கு தனிக்கவனம் செலுத்துமாறு கூறி உள்ளோம்.

    மதுரை

    திருமங்கலத்தில் பூவரசம் மரத்தின் பழக்கொட்டையை சாப்பிட்டு பாதிக்கப்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து மருத்துவரிடம் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்து, பெற்றோர்க ளுக்கு ஆறுதல் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து பிஸ்கட், ரொட்டி, பழங்கள், நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார். பின்னர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    திருமங்கலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத் துக்குள் உள்ள பூவரசம் மரத்தின் பழக் கொட்டை களை சாப்பிட்டனர்.

    பள்ளி முடித்து வீட்டுக்குச் சென்ற அவர்கள் அங்கு மயக்கம் அடைய தொடங்கினர். உடனடியாக பெற்றோர்கள் அவர்களை திருமங்கலம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். தரணிதரன், பாலாஜி, கோகுல பிரசாத் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாண வர்கள் மருத்துவமனையில் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர்.

    இவர்களில் பாலாஜி, கோகுலபிரசாத் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவ அதி காரியிடம் சிகிச்சை குறித்து கேட்கப்பட்டது. மாண வர்களுக்கு தனிக்கவனம் செலுத்துமாறு கூறி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய பெண் பரிதாப சாவு
    • கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய பெண் பரிதாபமாக இறந்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே–யுள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி விஜய–லட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே சாத்தங் குடி பகுதியில் உள்ள சூராயி அம்மன் கோவில் திருவிழா–வுக்கு பாலமுருகனின் தாய் அழகம்மாள் மகள்கள் அபிநயா, நாகலட்சுமி, அக்காள் மகன் சின்னமருது ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பின்னர் திருவிழாவை முடித்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் 4 பேரும் புறப்பட்டனர். வழி–யில் சிவரக்கோட்டை அருகே திடீரென்று கட்டுப் பாட்டை இழந்து தாறுமா–றாக ஓடிய இருசக்கர வா–கனம் சென்டர் மீடியனில் வேகமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனை–யில் அனுமதிக்கப்பட்ட அபி–நயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீ–சார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகி–றார்கள்.

    • ஓய்வூதியம் பெறும் ஆவணங்களை கேட்டு மூதாட்டியிடம் நகை திருடப்பட்டது.
    • நூதன திருட்டில் ஈடு பட்ட கில்லாடி பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகர் அன்ன–காமு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மனைவி தேவகி (வயது 73). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ள–னர். அவர்களுக்கு திருமண–மாகி வெளியூர்களில் குடும் பத்துடன் வசித்து வருகின் றனர்.

    கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக தேவகி வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்துள்ளார்.

    அவர் தன்னை ஓய்வூதியம் வழங்கும் அலுவகத்தில் இருந்து வந்திருப்பதாக கூறி அறிமுகம் செய்துகொண் டார். பின்னர் தேவகியிடம் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆவணங்களை கொண்டு வருமாறு கூறியதோடு, பக்கத்து தெருவில் உள்ள அலுவலகத்திற்கு அதிகாரி வந்துள்ளார்.

    அவரை பார்க்க வருமாறும், வரும்போது கழுத்தில் நகை எதுவும் அணிந்து வரக்கூடாது, எனவே நகையை கழுற்றி சாமி படத்திற்கு முன்பாக வைத்து–விடுமாறும் தெரிவித்துள் ளார். அதன்படி தேவகி நகையை கழற்றி வைத்ததும் பின்னால் சென்ற கில்லாடி பெண் அதனை அபேஸ் செய்துவிட்டு தலைமறை–வானார். நகையை பறிகொடுத்த தேவகி கொடுத்த புகாரின் பேரில் நூதன திருட்டில் ஈடு பட்ட கில்லாடி பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ×