என் மலர்
மதுரை
- வெகுநாட்களாக வீடு பூட்டி கிடப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம்-நகைகளை திருடி சென்றுள்ளனர்.
- திருட்டு சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை பாரதி நகரை சேர்ந்தவர் நாக ராஜன்(வயது 66). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி அறிவை.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறிவை உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
இதனால் வீட்டை பூட்டி விட்டு விருதுநகர் ஆஸ்பத்திரியில் மனைவியை சிகிச்சைக்காக சேர்த்தார். அவருடன் நாகராஜன் ஆஸ்பத்திரியில் தங்கி யிருந்தார். இந்த நிலையில் வீட்டின் முன்கதவு இரவில் திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் நாகராஜனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ஊருக்கு திரும்பி வந்தார். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்தி ருந்த 21 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் திருடு போனது தெரிய வந்தது. வெகுநாட்களாக வீடு பூட்டி கிடப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம்-நகைகளை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் நாகராஜன் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வர வழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூட்டி கிடந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மதுரையில் தூசி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.
- சாலைகளில் அதிகளவில் மண் மற்றும் தூசி சேர்கிறது.
மதுரை
மதுரை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாலங்கள் அமைப்பது குறித்தும், மெட்ரோ திட்டம் செயல்படுத்துவது குறித்தும் திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் மதுரை நகரின் முக்கிய சாலைகளில் மண்ணும், தூசியும் பறந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் சேரும் மண்ணை அகற்றும் பணிகளில் ஏற்படும் தாமதம் காரணமாக அதிகளவில் மண் சேர்ந்து காற்று அடிக்கும் போது மண்ணும் தூசியும் பறந்து வாகன ஓட்டிகளை கவனம் சிதற செய்கிறது.
மதுரை சாலைகளில் கார்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவில் மண் சேர்கிறது. இந்த நிலையில் இவ்வாறு சேரும் மண்ணை அதிகாலை நேரத்திலேயே அகற்றி சாலையை தூய்மையாக பராமரிப்பதற்காக புதிய நவீன மண் அகற்றும் எந்திரங்களை வாங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஆனால் அந்த வாகனங்களை வாங்குவது தாமதமாகி வருகிறது.
தற்போது மாநகராட்சி வசம் மண் அகற்றும் பணிகளை மேற்கொள்வ தற்காக 5 எந்திரங்கள் உள்ளன. ஆனால் 2 எந்திரங்கள் பழுதடைந்துள்ளன. 3 எந்திரங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இந்த 3 எந்திரங்களை பயன்படுத்தி 5 மண்டல பகுதிகளிலும் உள்ள முக்கிய சாலைகளில் மண் அகற்றும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் சாலைகள் மற்றும் சாலை தடுப்புகளின் ஓரங்களில் சேரும் மண்ணை அகற்றும் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் மண் அகற்றும் பணிகளை விரைவாக செய்து முடிக்க இயலாமல் சில பகுதிகளில் மண் அகற்ற முடியாமல் போகிறது.
இதனால் அந்தப் பகுதிகளில் மேலும் மண் சேர்ந்து சாலைகள் தூசியாக காணப்படுகின்றன. அந்த சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது தூசி பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில், கண்களில் விழுகிறது. இதனால் அவர்கள் கவனம் சிதறி தடுமாறுகின்றனர்.
மதுரையில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள ஆரப்பாளையம் - திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோடு, தேனி ரோடு, புதுஜெயில் ரோடு, சிம்மக்கல், அண்ணா பஸ் நிலையம், மாட்டுத்தாவணி ரோடு, புதூர் ரோடு, கே.கே.நகர், காமராசர் சாலை ஆகிய சாலைகளில் அதிகளவில் மண் மற்றும் தூசி சேர்கிறது.
சில இடங்களில் குடிநீர் பைப்லைன் உள்ளிட்ட திட்டங்களுக்காக பள்ளம் தோண்டப்பட்டு அவை மூடப்பட்டு சரியாக சாலை அமைக்காமல் விடப்படுகிறது. அந்த சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதுடன் மண், தூசி சேர்ந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்து பவையாக உள்ளன.
இந்த நிலையில் மதுரை சாலைகளில் மண் அகற்றும் பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு நவீன எந்திரங்களை விரைவாக வாங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், பள்ளம் தோண்டி மூடும் பகுதிகளில் சாலைகளை விரைவாக செப்பனிட வேண்டும் என்றும், மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக அடையாளப் படுத்தும் வகையில் சாலைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒரே பாட திட்ட முறையை கைவிட கோரி மதுரையில் கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
- துணை தலைவர் முன்னிலை வகித்தார்.
மதுரை
மதுரை பழங்காநத்தத்தல் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று உண்ணா விரத போராட்டம் நடந்தது. தலைவர் செந்தாமரை கண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் முன்னிலை வகித்தார்.
மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பது பல்கலைக்கழக தன்னாட்சி உரிமையை பறிக்கும். மேலும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த இது வலிவகுக்கும். தமிழ் நாட்டின் உயர்கல்வியை பாதிக்கும் இந்த பொது பாடத்திட்ட முறையை திரும்ப பெற வேண்டும்.
உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் இணை பேராசிரியர் பணி மேம்பாடு மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும். பேராசிரியர் பதவி உயர்வுக்கு முனைவர் பட்டம் கட்டாயம் என்ற விதியில் இருந்து தளர்வு அளிக்க வேண்டும். கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதில் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- மன அழுத்தம் போக்கும் வகையில் போலீசாருக்கு புத்துணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வலியுறுத்தியுள்ளார்.
- கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமை தாங்கினார். இதில் மதுரை மாநகர், மாவட்டம், விருதுநகர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் போலீசாரின் மன அழுத்தத்தை போக்குவது குறித்தும், குற்ற சம்ப வங்களை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.
கூட்டத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பேசியதாவது:-
போலீசார் பணியின் போது மன அழுத்தமின்றி வேலை பார்ப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக அவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்துணர்வு முகாம்களை நடத்த வேண்டும். பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சைபர் கிரைம் குற்றங்களை தீவிர கவனத்துடன் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பொது மக்களுடன் நட்புறவை பேணி காக்க வேண்டும்.
உரிய காரணங்களோடு விடுமுறைக்கு விண்ணப் பிக்கும் போலீசாருக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசா ருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடக்கிறது.
அதனை தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பைக் ரேசில் ஈடுபடுவோர்களை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை அணிவகுப்பு அளிக்கப்பட்டது.
- கோவிலுக்கு நன்கொடை அளித்தவருக்கு சிறப்பு மரியாதை வேண்டுமா? என்பது பற்றி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- பொது நலன் கருதி ஒரு விசயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
மதுரை
சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தை சேர்ந்த சின்னன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, கண்டனூர் கிராமத்தில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதை முன்னிட்டும், திருவிழாக்காலங்களிலும் தனி நபருக்கு எந்த விதமான சிறப்பு மரியாதை கோவில் சார்பில் வழங்கக்கூடாது என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கோவில் நிர்வாக நடைமுறையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில், பொது நலன் கருதி ஒரு விசயத்தை தெளிவு படுத்த வேண்டும்.
ஒரு நபர் கோவிலுக்கு தனது பங்களிப்பை, நன்கொடையாக வழங்கியிருந்தால் அவர்களுக்கு, கோவில் சார்பில் சிறப்பு மரியாதை வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதி நீதிபதி ஒத்தி வைத்தார்.
- மாநாட்டு பணிக்காக நாளை கால்கோள் விழா நடந்தது.
- மதுரை மாநகர் அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அழைப்பு விடுவிக்கிறார்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை பனகல் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா, பொருளாளர் குமார், நிர்வாகிகள் எம் எஸ் பாண்டியன், அண்ணா துரை, முன்னாள் மேயர் திரவியம், கவுன்சிலர்கள் கருப்புசாமி, சோலைராஜா, மாயத்தேவன், பரவை பேரூராட்சி செயலாளர் பரவை ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
அ.தி.மு.க. இயக்கத்தின் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடைபெறுகிறது. நாடே திரும்பி பார்க்கும் வகையில் மதுரையில் முத்திரை பதிக்கும் வகையில் அ.தி.மு.க. மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. தமிழ கத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் தி.மு.க.வுக்கு முடிவு கட்டும் வகையில் முத்தாய்ப்பாக இந்த மாநாடு அமையும். எனவே மாநாட்டிற்கு அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக பங்கேற்க வேண்டும்.
அ.தி.மு.க. பாராட்டு பணிகளை தொடங்கும் வகையில் ரிங்ரோடு வலையங்குளம் பகுதியில் மாநாட்டிற்கான கால்கோள் விழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 7 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செய லாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
எனவே மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி களும், தொண்டர் களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
அ.தி.மு.க. இயக்கத்தை மேலும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் இளைஞர்கள், இளம்பெண்கள் அதிக அளவில் சேர்ந்து வருகிறார்கள். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதல் படி மதுரை மாநகர் மாவட்டம் அதிக உறுப்பி னர்களை சேர்த்து சாதனை படைக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் கூடுதலாக வரி சுமைகளையும், விலை வாசி உயர்வையும், திணித்துள்ளது.
தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் அத்தி யாவசிய பொருள்களின் விலைகளையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் மீது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற நாம் அனைவரும் அயராது உழைத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- பாலத்தில் இருந்து கீழே விழுந்த வியாபாரி பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை நெல்பேட்டை காயிதே மில்லத் 6-வது தெருவை சேர்ந்தவர் முகமது நாசர். இவரது மகன் முகமது தாஹா (30). இவர் பிளாஸ்டிக் பைகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அபியா பேகம் என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று ஏ.வி. மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வேகமாக பிரேக் பிடித்துள்ளார். இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பால தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது தாஹா பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் முகமது தாஹாவின் மனைவி அபியா பேகம் புகார் செய்தார். போக்குவரத்து புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
- நடவடிக்கை எடுப்பார்களா? என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கீழமட்டையான் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியின் தெற்கு பக்கமுள்ள சுற்று சுவர் விரிசலடைந்து உள்ளதால் தற்காலிகமாக குத்துக்கல்லை சுவற்றை தாங்கி பிடிக்க நிறுத்தி உள்ளனர்.
இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவி கள் உயிர் அச்சத்தில் படித்து வருகின்ற சூழல் நிலவி வருகின்றது. மேலும் பள்ளி அருகில் உள்ள தெருவில் இதுவரை கழிவுநீர் வாய்கால் கட்டாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருவதால் தெருவில் நடுவே கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவ தோடு பள்ளி வகுப்பறை சுவர்களின் அடிப்பகுதி சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமாகி உள்ளது.
மேலும் இதன் அருகில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையம் உள்ள நிலையில் சேதமான சுற்று சுவரை இடித்து அப்புறப் படுத்தி மாணவர்களின் அச்சத்தை போக்க முன் வருவார்களா? என்றும் மேலும் கோவில் தெருவில் கழிவுநீர் வாயிக்கால் கட்ட சம்பத்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
- கீழடியில் 183 தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
- அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையின ரால் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன.சிந்து சமவெளிக்கு நிகராக கீழடி வைகை நாகரிகம் விளங்கி இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.
கடந்த ஏப்ரல் மாதம் கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.
9 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இந்த அகழாய்வில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சூடு மண்ணால் செய்யப்பட்ட விலங்கின் உருவங்கள், ஆட்ட காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனை கள் என 183 தொல்பொருட் கள் இதுவரை கண்டறி யப்பட்டுள்ளது.
மேலும் 4 அகழாய்வு குழிகளில் 35 சென்டிமீட்டர் ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு அமைக்கப்பட்ட தரைத்தளமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைத்தளம் 3 செ.மீ. முதல் 6 சென்டி மீட்டர் தடிமனுடன் காணப்படு கிறது.9-ம் கட்ட அகழாய்வு பணியில் பானை ஓடுகள், எலும்பு மற்றும் கரி மாதிரிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.
- திருமணமாகி ஓராண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் கருப்பசாமி என்ற கார்த்திக், என்ஜினீயர். சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுவேதா (19). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் சுவேதா சாத்தங் குடியில் கணவர் வீட்டில் தங்கி ஆலம்பட்டி யில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கர்ப்பமாக இருந்த சுவேதாவுக்கு கருவில் குழந்தை வளர்ச்சி இல்லை என தெரிய வந்ததால் கடந்த 3 மாதங்க ளுக்கு முன்பு கருக்கலைப்பு செய்தார்.
இதனால் அவர் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அவரது மாமியார் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டி இருந்தது. தட்டி பார்த்தபோது கதவை திறக்கவில்லை.
இதையடுத்து அதே பகுதியில் வசிக்கும் சுவேதா வின் தந்தை கருப்பசாமிக்கு போனில் தகவல் தெரி வித்தார். அவரும், அக்கம் பக்கத்தினரும் சேர்ந்து கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அப்போது சுவேதா தூக்கில் தொங்கிய படி பேச்சு, மூச்சின்றி இருந்தார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஓராண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் திருமங்கலம் ஆர்.டி.ஓ. மேல்விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக அரசாணை அடிப்படையில் எனக்கான முழு ஓய்வூதிய பணப்பலன்களை முறைப்படுத்தி வழங்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
- கோர்ட்டு உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஏன் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார்.
மதுரை:
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறி இருந்ததாவது:-
நெல்லை மாவட்டம் பழையபேட்டை கிராமத்தில் உள்ள ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி மையத்தில் 1966 ஆம் ஆண்டு முதல் அலுவலக உதவியாளராக 40 ஆண்டுகள் பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன்.
தமிழக அரசாணை அடிப்படையில் எனக்கான முழு ஓய்வூதிய பணப்பலன்களை முறைப்படுத்தி வழங்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், எனது மனுவினை பரிசீலனை செய்து பணப் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் எனக்கு பணப்பலன்கள் வழங்குவது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் தற்போது வரை நிறைவேற்றவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோர்ட்டு உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஏன் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார். பின்னர், இது குறித்து தமிழக பள்ளிக்கல் வித்துறை செயலாளர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி கல்வி இயக்குனர் ஆகியோர் வருகிற 19-ந்தேதி இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு முகூர்த்த கால் நடும் விழா நடந்தது.
- அனைத்து பிரிவு தொண்டர்களும், நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
மதுரை
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனி சாமி ஆணைக்கிணங்க வரும் ஞாயிற்றுக்கிழமை (9-ந்தேதி) காலை 7 மணி அளவில் விமான நிலையம் அருகே உள்ள வலையங் குளம் கருப்பு கோவில் அருகே அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டிற்கு முகூர்த்த கால் நடும் விழா நடைபெற இருக்கிறது.
இந்த கால்கோள் நடும் நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.
எனவே மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, இளைஞர் அணி, மாணவரணி, மகளிர் அணி, வர்த்தக அணி, வழக்கறிஞர் பிரிவு, விவசாய பிரிவு, மீனவரணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, கலை பிரிவு இலக்கிய அணி, அண்ணா தொழிற்சங்கம், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு உள்பட அனைத்து பிரிவு தொண்டர்களும், நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






