என் மலர்
மதுரை
- முக்கிய சாலைகளை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும்.
- பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சோழவந்தான்
சோழவந்தானில் வாகனங்களின் எண் ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. சோழவந்தான் நகரில் மாற்று வழியோ, புறவழிச் சாலையோ, அகலமான சாலையோ இல்லை. இதனால் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் ஒரே நேரத்தில் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது.
தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
1987-ம் ஆண்டில் மார்க்கெட் ரோடு ஒருவழி பாதையாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது இருவழிப்பாதையாக மாறிவிட்டது. இந்த நிலையில் தற்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட சில யோசனைகளை சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்க்கெட் ரோடு வழியாக அனைத்து பஸ்களும் சோழவந்தான் பஸ் நிலையம் சென்று அங்கிருந்து அந்தந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இதேபோல் அங்கிருந்து வரும் பொழுது மாரியம்மன் கோவில் சன்னதி வழியாக வெளியேற வேண்டும். பஸ் நிலையத்தில் இருந்து எந்த கனரக வாகனங்களையும் மார்க்கெட் ரோடு வழியாக அனுமதிக்க கூடாது.
இதேபோல் மாரியம்மன் கோவில் சன்னதியில் இருந்து மேற்கே கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.
மாரியம்மன் கோவில் சன்னதி தெருவில் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்கக் கூடாது. மேலும் ஆட்டோ நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். வாடிப்பட்டி மற்றும் நகரில் இருந்து வரக்கூடிய பஸ்கள் வட்ட பிள்ளையார் கோவில் சென்று திரும்பி தபால் நிலையம் அருகே இருந்து பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
பஸ் நிறுத்தங்களில் பஸ் தொழிலாளர்கள் மற்றும் பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும். மேலும் பாரபட்சமின்றி அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட் விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது.
- பூச்சிக்கொல்லி மருந்து தடைச்சட்டம் 1968-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-
ரேட்டால் என்ற வணிக பெயரில் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் எனும் ரசாயனம் வேளாண்மை மற்றும் இதர உபயோகங்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு நிரந்தர தடை விதித்துள்ளது.
பொதுவாக மக்கள் ரேட்டால் பேஸ்ட்டை எலிகளை கட்டுப்படுத்த வீடுகளில் பயன்படுத்து கின்றனர். இதை குழந்தைகள் பேஸ்ட் என கருதி உப யோகப்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு எதிர்வினை மருந்து இல்லா ததால் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதன் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதித்துள்ளது.
பொதுமக்கள் யாரும் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரேட்டால் பேஸ்ட்டை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு பயன் படுத்த வேண்டாம். பூச்சி மருந்து விற்பனை நிலை யங்கள் மற்றும் இதர கடைகளில் விற்பனை செய்வது தெரிய வந்தால் மாவட்ட நிர்வாகம் அல்லது அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மைய பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வாளர்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.
பூச்சிமருந்து விற்பனையாளர்கள் மற்றும் இதர விற்பனையாளர்கள் மஞ்சள் பாஸ்பரஸ் எலி பேஸ்ட்டை விற்பனை செய்வது தெரிய வந்தால் பூச்சிக்கொல்லி மருந்து தடைச்சட்டம் 1968-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.
இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டு உள்ளது.
- காரில் பயணம் செய்த ஜெயஸ்ரீ மற்றும் சண்முகராஜா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
- விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமங்கலம்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 40). இவரது தலைமையில் கோவையில் ஆன்லைன் விளம்பர கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக செங்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணி மனைவி ஜெயஸ்ரீ (50), சுவைதீர்த்தபுரத்தை சேர்ந்த செந்தில் இசக்கி (28), வீரகேளரபுரம்புதூரைச் சேர்ந்த கிருஷ்ணன் (38) ஆகியோரையும் காரில் அழைத்து சென்றார்.
காரை கடையநல்லூரை சேர்ந்த வைரமுத்து ஓட்டிச் சென்றார். கருத்தரங்க கூட்டம் முடிவடைந்த பின்னர் நேற்று இரவு அவர்கள் அனைவரும் மீண்டும் தென்காசிக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் மொட்டமலை பகுதியில் வந்த போது, முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்குவேனை முந்த முயன்றார்.
அந்த சமயம் எதிர்பாராவிதமாக கார், முன்னால் சென்ற வேனின் பக்கவாட்டு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த ஜெயஸ்ரீ மற்றும் சண்முகராஜா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். செந்தில் இசக்கி, கிருஷ்ணன், டிரைவர் வைரமுத்து ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காரில் சிக்கி உயிருக்கு போராடிய செந்தில் இசக்கி, கிருஷ்ணன், வைரமுத்து ஆகியோரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். நீண்டநேரம் போராடி காரில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சண்முகராஜா, ஜெயஸ்ரீ உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் மகாலட்சுமி கோவில் 4-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் புவனேஷ் குமார். இவரது மனைவி சுகன்யா (வயது23). இவர்கள் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
பக்கத்து வீட்டில் வசிப்பவர் யோகேசுவரன் என்ற நாகரத்தினம். இவ ரும், நண்பர்களும் சேர்ந்து வீட்டின் மொட்டை மாடி யில் மது அருந்தினர். போதை அதிகமான நிலையில் சுகன்யா வீட்டின் மாடியில் வைக்கப் பட்டிருந்த டிஸ் ஆண்ட னாவை உடைத்து கூச்சலிட்டுள்ளனர்.
இதை சுகன்யா தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 7 அவர்கள் சுகன்யாவை ஆபாசமாக பேசி தாக்கினர்.
இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர்கள் டிஸ் ஆண்டனாவை உடைத்து சுகன்யாவை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து யோகேசுவரன் என்ற நாகரத்தினம், ஹரி கிருஷ்ணன்(19), தினேஷ் குமார்(22), ரியாஸ் அகமது (18), முகமது பரீத் (18) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனர்.
- பா.ஜ.க. தலைவர்கள் குறித்து அவதூறாக பதிவிடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் இப்ராகிம் கூறினார்.
- தி.மு.க.வினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை
மதுரையில் பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியின் ஊழலை கண்டித்து எங்களுடைய நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாநில செயலாளர் சூர்யா திமுக ஆட்சிக்கு எதிராக பதிவிட்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார்.
அதேவேளையில் கடலூர் போலீசார் வேறொரு வழக்குக்காக மதுரை போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் சூர்யாவை கைது செய்ய முயன்றனர்.
அவரை பார்ப்பதற்காக மதுரையில் உள்ள விடுதிக்கு வந்திருந்த மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் விக்னேஷை தாக்கியுள்ளனர். தி.மு.க. ஆட்சியின் ஊழலை கண்டித்து பதிவிடுகின்ற பா.ஜ.க. நிர்வாகிகள் இரவோடு இரவாக கைது செய்யப்படுகின்றனர்.
ஆனால் அதே வேளையில் பா.ஜ.க குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதவிடுகின்ற தி.மு.க.வினர் மீது தமிழக முழுவதும் பா.ஜ.க.வினர் பல்வேறு மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாரத பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கொலை செய்வோம் என்று பதிவிட்ட தி.மு.க.வினர் இதுவரை கைது செய்யப்படவில்லை. மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தி.மு.க.வினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் 50 சதவீதம் பிரசவங்கள் அதிகரித்துள்ளது.
- தடுப்பூசிகள் போடப்படு–கின்றன.
மதுரை
தமிழகத்தில் சுகாதாரத் துறை சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மருத்துவ பரிசோதனை மையங்களை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இந்த மையங்கள் மூலம் விழிப்பு–ணர்வு பிரசாரங்கள் ஏற்ப–டுத்துவதோடு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்க–வும் வழிவகைகள் செய்யப் பட்டுள்ளன.
மதுரை மாநகராட்சியின் கீழ் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிக–ளுக்கான மருத்துவ சேவை–கள், தாய் மற்றும் குழந்தை நலம், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய–வற்றை சிறந்த முறையில் வழங்கி வழங்குகின்றன.
இதன் மூலம் மதுரை நகர மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் பிரசவங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ள–தாக தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது. கடந்த 10 நாட்க–ளுக்கு முன்பு இரண்டு ஆரம்ப சுகாதார மையங்க–ளில் தாய்மார்களுக்கான புதிய வார்டுகள் திறக்கப் பட்டு அதில் 2 கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுள்ளனர்.
கடுமையான நோய்கள், சமூகம் சார்ந்த மற்றும் குழந்தை மருத்துவ சேவை–கள் அளிக்கும் திறன் கொண்டவையாக இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து நகர சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், மதுரை மாநக–ராட்சி நகர்ப்புற மருத்துவம–னைகளுக்கு வரும் கர்ப்பி–ணித் தாய்மார்களுக்கு மாதந்தோறும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படு–கிறது.
பாலூட்டும் தாய்மார்க–ளுக்கு பாதுகாப்பான மற் றும் கவனமாக சிகிச்சை அளிக்கப்படும் போது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து உள் ளிட்ட பல்வேறு சோத–னை–கள் மற்றும் தடுப்பூசி–கள் போடப்படு–கின்றன.
மகப்பேறுக்கு முந்தைய பராம–ரிப்பு திட்டம் உட்பட கர்ப்பிணிப் பெண்களை செவிலியர்கள் முறையான பரிசோதனைகளுக்கு உட்ப–டுத்துகிறார்கள். மேலும் இதன் விளைவாக, சராசரி மாதத்திற்கு 70 முதல் 80 பிரச–வங்கள் என்று இருந் தது தற்போது 120 ஆக அதி–கரித்துள்ளது. இது எங்க–ளுக்கு பெருமைக்குரிய விஷயம்.
தற்போது, மதுரை மாநக–ராட்சியில் உள்ள அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மகப் பேறு மற்றும் பிரசவத் திற்கு பின்னர் கவனிக்க வேண் டிய, வசதிகளை ஏற்படுத்த தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் மூலம் நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.
மாநகராட்சியில் மேலும் ஆறு நகர்ப்புற ஆரம்ப சுகதார மையங்களில் கூடு–தல் கட்டிடங்கள் கட்டப் பட்டு, மகப்பேறு சிகிச்சை அளிக்க தேவையான வச–திகள் ஏற்படுத்தப்பட்டுள் ளன. இந்த வசதிகளை சுகா–தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த மாதம் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அரசு மருத்துவமனை–களை நம்பியிருக்கும் கர்ப்பி–ணிப் பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் பரிசோதனை செய்வதன் மூலம் அதிக பயனடைந்து வருகின்றனர் என்றார்.
- மதுரை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடக்கிறது.
- வடகிழக்கு பருவ மழை துவங்குகிறது.
மதுரை
மதுரை மாநகராட்சி வட கிழக்கு பருவமழைக்கு முன் னெச்சரிக்கையாக மாநக ராட்சி பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன் னர் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், நீர்நிலைகள், கால்வாய்கள், ஊரணிகள், ஆறுகள், மழைநீர் வடிகால் கள் ஆகியவற்றில் தேங்கி யுள்ள ஆகாயத்தாமரைகள், தேவையற்ற குப்பைகள், செடி கொடிகள் உள்ளிட்ட வற்றை அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொண்டு மழைநீர் சீராக செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணை யாளர் பிரவீன்குமார் மாநக ராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்களை கடந்த 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மூன்று நாட்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வைகை ஆற்றுப் பகுதிகளில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள், ஊரணிகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள குப்பைகள், மணல்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் மாநகராட்சியின் மூலம் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
- ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சிறுவனுடன் வாலிபர் நின்றிருந்தார்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பாரதியார் ரோட்டில் உள்ள ஒரு பள்ளி அருகே சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு சிறுவனுடன், வாலிபர் நின்றிருந்தார். அவர்களை பிடித்து ேபாலீசார் விசாரித்தனர். பின்னர் அவர்களிடம் சோதனை யிட்டபோது வாள் மற்றும் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் 17வயது சிறுவன், எம்.கே.புரம் முத்துத் தேவர் தெருவை சேர்ந்த சேகர் மகன் கார்த்தி கேயன்(19) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- மதுரை அருகே பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்தது.
- போலீசில் வசந்தி புகார் செய்தார்.
மதுரை
மதுரை செல்லூர் பூந்தமல்லி நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சித்ரா (40). இவர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 1¾ பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து சித்ரா கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்லூர் முனியாண்டி கோவில் தெரு 3-வது தெரு போஸ் வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வசந்தி (58). இவர் செல்லூர் 50 அடி சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து செல்லூர் போலீசில் வசந்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்து வாலிபர் இறந்தார்.
- பஸ்சை திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
திருமங்கலம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாயன்மான்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார் மகன் முகேஷ் (வயது26). இவரது மனைவி இசைவாணி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முகேஷ் சென்னை கோயம்பேடு பகுதியில் பிளக்ஸ் போர்டு வைக்கும் வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவி அங்கே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தென்காசியில் நடைபெறும் உறவினர் இல்ல விழா விற்காக வருவதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ்சில் புறப்பட்டார். பஸ் அதிகாலை 4 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தது.அப்போது முகேஷ் வாந்தி எடுத்துள்ளார்.
பின்னர் திருமங்கலம் பஸ் நிலையத்தை கடந்தபோது முகேஷ் பஸ்சுக்குள் மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் வந்து பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து திருமங்கலம் டவுன் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பஸ்சில் பயணித்த வாலிபர் இறந்ததால் பஸ்சை திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு ெசன்று விசாரணை நடத்தினர். இதனால் அந்த பஸ்சில் பயணிந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் 3 மணி நேரம் காத்திருந்து பரிதவித்தனர். பின்னர் பஸ் அனுப்பி வைக்கப் பட்டது.
- கடை வழங்க முன்னுரிமை கேட்டு வியாபாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
- நாளை முதல் தற்காலிக பஸ் நிலையம் செயல்படும்
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதுப்பிக்க அரசு ரூ.8 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. இந்த நிலையில் பழைய பஸ் நிலையத்தின் ஒரு பகுதி அடைக்கப்பட்டது. இதையடுத்து அய்யப்பன்எம்.எல்.ஏ. தலைமையில் கடைக் காரர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் சமரச கூட்டம் நகராட்சி அலுவ லகத்தில் உசிலம்பட்டி ஆர்.டி.ஒ. ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ. அய்யப்பன், நகராட்சித் தலைவர் சகுந்தலா, நக ராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டித்தாய் ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.
அப்போது நகராட்சி கமிஷனர் தற்போது உள்ள பஸ் நிலையம் 1½ ஏக்கரில் உள்ளது. கூடுதலாக ஒரு ஏக்கர் விரிவாக்கம் செய்து 2½ ஏக்கரில் 18 பஸ்கள் நிற்கும் வகையில் புதுப்பிக்க அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நாளை முதல் தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து புதிதாக கட்டப்படும் பஸ் நிலையத்தில் தற்போது கடை வைத்துள்ள வியா பாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் அது போன்று முன்னுரிமை வழங்க முடியாது எனவும் அதற்கு உத்தரவாதம் தரமுடியாது எனவும் தெரிவித்தனர். இதனால் கடை வியாபாரிகள் கூட்டத்தை புறக்கணித்துச் சென்றனர்.
தற்காலிக பஸ் நிலையம் உசிலம்பட்டி-தேனி ரோடு ஹவுசிங் போர்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் பஸ்கள் இயங்குகின்றன.
- அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- மாவட்ட நிர்வாகிகள் கலந்து பலர் கொண்டனர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் மண்டலம் பொறுப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
நகர செயலாளர் குணசேகரபாண்டியன், அவைத்தலைவர் குருபால முருகன், ஓன்றிய செயலாளர் மலேசியா பாண்டி, சேடபட்டி நரசிங்க பெருமாள் ஏழுமலை பக்ருதீன், தொழிற்சங்க நிர்வாகி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜா, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயராமன், மாவட்ட நிர்வாகிகள் வீரமாரிபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுப்புராஜ், குமுதா ராமன், சுமதி, ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்னன், நகர் மன்ற கவுன்சிலர் ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் கிளைகளில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து பலர் கொண்டனர்.






