என் மலர்tooltip icon

    மதுரை

    • சி.சி.டி.வி. கேமரா பொருத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆலோசனை வழங்கினார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 91-வது வார்டுக்கு உட்பட்ட ஓம்சக்தி நகர், வ.உ.சி. தெரு, சேஷாத்திரி தெரு ஆகிய பகுதிகளில் இடம்புரி செல்வ விநாயகர் கோவில் சங்கத்தின் சார்பாக 16 சி.சி.டி.வி. காமிரா பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவனி–யாபுரம் போலீஸ் இன்ஸ் பெக்டர் பார்த்திபன் கலந்து– கொண்டு நிகழ்ச்சி யை துவக்கி வைத்தது பொது –மக்களுக்கு ஆலோச னை வழங்கினார்.

    அப்போது அவர் பேசு–கையில், பொதுமக்கள் குற்ற செயல்கள் எதுவும் நடை–பெறாமல் இருக்க இனி வரும் காலங்களில் வீடு தோறும் சி.சி.டி.வி. பொருத் தும் சூழ்நிலை ஏற்படும் என்றும், இது போன்று தெருக்களில் பொதுநல அமைப்புகள் சி.சி.டி.வி. காமிரா பொ ருத்துவதினால் குற்றவாளி களை போலீசார் விரைந்து பிடிப்பதற்கும் குற்ற செயல்கள் நடைபெறா–மல் இருக்கவும் மிக அவ–சியமாக இருக்கிறது.

    மேலும் மாணவ, மாண–விகள், பொதுமக்கள் இந்த பகுதிகளில் போதை பொருட்கள் யாரேனும் விற்றால் அல்லது சந்தேகப்ப–டும் படி புதிய நபர்கள் யாரேனும் தெருக்களில் வந்து சென்றால் உடனடி–யாக காவல்துறையிடம் தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தெரி–விக்க வேண்டும்.

    அவ்வாறு தெரியப்ப–டுத்தும் அவர்களின் ரகசி–யங்கள் காக்கப்படும். இதன் மூலம் குற்றச்செயல் புரியும் நபர்களை போலீசார் உடனே கைது செய்து நடவ–டிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்று தெரிவித் தார். முன்னதாக நற்பணி மையத்தின் தலைவர் கர்ணா வரவேற்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர்கள் சக்தி மணிகண்டன், பாண்டி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் சந்திரன், குணசேகரன், மோகன், பாஸ்கரன், பரதன், கண் ணன், சரவணன், பிரக–தீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையின் புதிய அடையாளமாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திகழ்கிறது.
    • ஆங்கில நூல்கள், நூலக நிர்வாகப்பி–ரிவு, நூல்கள் கொள்முதல் பிரிவு, பணியாளர் உணவ–ருந்தும் அறைகள் கட்டப்பட்டுள்ளது.

    மதுரை

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணா–நிதி நினைவாக மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நூலகம் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

    இதையடுத்து மு.க.ஸ்டா–லின் கடந்த ஆண்டு ஜனவரி 11-ந்தேதி மதுரை நத்தம் சாலையில் ரூ.120.75 கோடி மதிப்பில் கலைஞர் நினைவு நூலகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். தற் போது ரூ.134 கோடியில் பணிகள் நிறைவடைந்து உள்ளன.

    கலைஞர் நூலகம் கீழ் தளம், தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டி–டமாக 2 லட்சத்து 13 ஆயி–ரத்து 288 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. நூலகத் தின் கீழ்தளத்தில் வாகனங் கள் நிறுத்துமிடம், நாளிதழ் கள் சேமிப்பு அறை, நூல் கட்டும் பிரிவும், தரைத்த–ளத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு, மாநாட்டு கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, மின் கட்டுப்பாட்டு அறை, தபால் பிரிவு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

    முதல் தளத்தில் கலைஞ–ரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதை–கள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்த–கங்கள், திரைப்படத்துறை தொடர்பான புத்தகங்கள் தனிப்பிரிவாக இடம் பெறு–கிறது.அத்துடன் குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ் கள் பிரிவு உள்ளது.

    இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவும், 3-ம் தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் பிரிவும் உள்ளது. 4-வது தளத்தில் போட்டித் தேர்வுகள் தொடர்பான நூல்கள் இடம் பெறுகின்றன. 5-ம் தளத்தில் அரிய நூல்கள், மின் நூல–கம், ஒளி, ஒலி தொகுப்பு–கள் காட்சியகப்பிரிவு, பார்வை–யற்றோருக்கான மின் நூல் ஒலி நூல் ஸ்டுடியோ உள் ளது.

    6-ம் தளத்தில் ஆங்கில நூல்கள், நூலக நிர்வாகப்பி–ரிவு, நூல்கள் கொள்முதல் பிரிவு, பணியாளர் உணவ–ருந்தும் அறைகள் கட்டப்பட் டுள்ளது. தற்போது அனைத்து தளங்களிலும் பணிகள் நிறைவடைந்து நூலகத்துறையிடம் ஒப்ப–டைக்கப்பட்டு உள்ளது.

    மின் விளக்குகள், குளி–ரூட்டப்பட்ட அறைகள், 6 மாடிகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள் ளன. கட்டிடத்தின் நடுப்பகு–தியில் சூரியவெளிச்சம் கிடைக்கும் வகையில், கண்ணாடி பேழையிலான கூடாரம் அமைக்கப்பட்டுள் ளது. அலங்கார வடிவமைப் புடன், இண்டீரியர் டெகரே–ஷன் எனும் உள் அரங்குகள் வடிவமைப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளது.

    வெளிப்புற அலங்கார கட்டுமான பணிகளும் கலை–ஞரின் உருவச்சிலை அமைக் கும் பணி, மாடித் தோட்டத் துடன் நூல்களை படிப்பதற் கான வசதியும், கலைக்கூ–டமும் அமைக்கப்பட்டுள் ளது. நூலகத்தில் சுமார் 5 லட்சம் புத்தகங்கள் இடம் பெறும் வகையில் அமைக் கப்பட்டுள்ளது. தற்போது 3.50 லட்சம் புத்தகங்கள் அடுக்கும் பணிகளும்ந நிறைவடைந்துள்ளது. சுமார் 17 மாதங்களாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் 100 சதவீதம் முடிந்து விட் டது.

    இந்த கலைஞர் நூற் றாண்டு நினைவு நூலகம் திறப்பு விழா வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிய–ளவில் பிரமாண்டாக நடைபெற உள்ளது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலகத்தை திறந்துவைக்கிறார்.

    மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில், மல்லிகை பூ, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, திருப்ப–ரங் குன்றம், பழமுதிர்ச் சோலை முருகன் கோவில் கள், காந்தி மியூசியம், தெப் பக்குளம், திருமலை நாயக் கர் மகால் உள்ளிட்ட பல் வேறு சிறப்பு அம்சங்கள் மதுரைக்கு பெருமைமிக்க அடையாளங்களாக விளங் குகிறது.

    இதற்கெல்லாம் முத் தாய்ப்பாக தமிழகத்தில் சென்னை அண்ணா நூல–கத்திற்கு பிறகு இரண்டாவது பெரிய நூலகமாக மது–ரைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் அடையாளங்க–ளில் ஒன்றாக மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல–கம் அமையும் என்பதில் ஐயமில்லை.

    • மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி நடந்தது
    • வெற்றி பெற்ற அணிக்கு கவுன்சிலர் காளிதாஸ் சுழற் கோப்பை வழங்கினார்.

    மதுரை

    மதுரை பாண்டி கோவில் அருகே சுற்றுச்சாலையில் உள்ள கலைஞர் திடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள 32 அணிகள் மோதின. இதில் முதல் பரிசினை மதுரை காமராஜர்புரம் ரேயான்சிசி அணி வெற்றி பெற்றது.

    இந்த அணிக்கு கவுன்சிலர் காளிதாஸ் சுழல் கோப்பை மற்றும் ரொக்க பரிசினை வழங்கினார். இதனையடுத்து 2-வது பரிசாக மதுரை ஒத்தக்கடை ஸ்போர்ட்ஸ் வேர்டு அணியும், 3-வது பரிசினை ஏ.பி.டி. பாய்ஸ் அணியும், 4-வது பரிசினை மதுரை அரசரடி யு.சி.வார்யர்ஸ் அணி வென்றது. முன்னதாக போட்டியை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பாலா, உதயா, கார்த்திக், முத்துமணி, வழக்கறிஞர் மகேந்திரன், நாகேந்திரன், முகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை.
    • மழையால் மின்தடை-மக்கள் அவதியடைந்தனர்.

    மதுரை

    மதுரையில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்தி–ரத்தை மிஞ்சும் அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்தால் வெப்பத்தின் அளவு அதிகரித்தது. அதிக வெப்பம் காரணமாக பொது ––மக்கள் சாலைகளில் சென்று வர மிகவும் சிரமப் பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து 3 மணி நேரம் மதுரையின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கொட்டி தீர்த்தது. பின்னர் மழை முடிந்தாலும் தூறல் நிற்காமல் நள்ளிரவு 11 மணி வரை சாரல் மழை போல மழை பெய்தது. இந்த கன மழை காரணமாக மதுரையின் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    ஏ.ஏ. ரோடு பகுதியில் மரம் விழுந்ததில் ஆட்டோ சேதம் அடைந்தது. மணி நகரத்தில் உள்ள கர்டர் பாலம் முற்றிலுமாக மழை வெள்ளத்தால் நிரம்பின. தத்தனேரி சுரங்கப்பாதையும் மழை நீரால் நிரம்பியதால் போக்குவரத்து வேறு பாதை–யில் திருப்பி விடப்பட்டன.

    கனமழை காரணமாக பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளை–யம், தல்லாகுளம், பழங்கா–நத்தம், திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட பகுதிக–ளில் மழை வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் பள்ளி முடிந்து வீடு செல் லும் மாணவ, மாணவர்கள் நனைந்தவாறு சென்றனர்.

    மேல பொன்னகரம் பகு–தியில் மின்கம்பம் சரிந்து விழுந்தது இதனால் அந்த பகுதியில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. இதே–போல் தொடர் மழை கார–ணமாக பல்வேறு இடங்க–ளில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மதுரை–யில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணி–களுக்காக பல்வேறு வார்டு–களில் குழிகள் தோண்டப் பட்டு பணிகள் அரைகுறை–யாகவே நடைபெற்று வரு–கின்றன. இந்த மழை கார–ணமாக அந்த பகுதியில் அனைத்தும் சேறும், சகதி–யுமாக காட்சியளித்தது.

    இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர். முக்கிய சாலை–களில் தேங்கிய மழை–நீரை வெளியேற்ற மாநக–ராட்சி பணியாளர்கள் நீண்ட நேரம் போராடினர். கர்டர் பாலம், தத்தனேரி சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் குளம் போல தேங்கிய நீரை அகற்ற மாந–கராட்சி ஊழியர்கள் தீவி–ரமாக ஈடுபட்டனர்.

    ஆரப்பாளையம், பெத்தா–னி–யாபுரம், புதுஜெயில் ரோடு, கண்மாய் கரை உள்ளிட்ட பகுதியில் மரங் கள் வேரோடு சாய்ந்தது. வீடுகளின் முன்பு நிறுத்தப் பட்டிருந்த வாகனங்கள் மீதும் மரக்கி–ளைகள் முறிந்து விழுந்ததில் ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந் தன.

    நாகமலை புதுக்கோட்டை நான்குவழிச்சாலையில் தனியார் மண்டபம் முன்பு வயர் அறுந்து விழுந்தது. அப்பகுதியில் உள்ள தியேட்டர் அருகில் மரம் விழுந்ததில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் அப்பகுதியிலும் மின் தடை ஏற்பட்டது. 

    • அய்யங்கோட்டை பள்ளிக்கு ரூ.9.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட் டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் கழிவறை வசதியின்றி மாணவ-மாணவிகள் வயல் வெளி யை பயன்படுத்தி வந்தனர். இது பற்றி தகவலறிந்த நகரி வைகை அக்ரோ நிறுவனம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது,

    ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் டி.வி. வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி கருப்பண் ணன் தலைமை தாங்கி னார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகே சன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் காளீஸ்வரி வரவேற்றார்.

    இந்த விழாவில் வட்டார கல்வி அலுவலர் ஜெசிந்தா நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். அக்ரோ இயக்குநர் குணசேகரன் ஸ்மார்ட் டி.வி. வழங்கினார்.

    இதில் ஆசிரியர்கள் வைகை அக்ரோ நிறுவன பணியாளர்கள் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

    • மதுரை கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் பெண்கள் உள்பட ஏராளமான துப்புரவு பணியாளர்கள் திரண்டனர். மாநில தலைவர் விஜய குமார் தலைமையில் கோ ரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்ற அவர்கள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களை அரசு ஊழியராக அங்கீகரிக்க வேண்டும்.

    மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவ லர்களுக்கு அரசா ணைப்படி ஊதியம் கொடுக்க வேண்டும். கொரோனா காலங்களில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு அரசு அறிவித்த ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்.

    ஒரே மாதிரியான பணி நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். வார விடுமுறை, அரசு விடுமு றையை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    • பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் 10 பூங்காக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பணிகள் தொடங்கிய நாளில் இருந்து 18 மாதங்க–ளில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    கோவில் மாநகராக போற்றப்படும் மதுரையில் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்வது பூங்காக் கள் மட்டுமே. அரசின் பங்க–ளிப்போடு பிரமாண்ட–மாக அமைக்கப்படும் பூங்காங்கள் பல இன்று முறையான பராமரிப்பின்றி காணப்படு–கின்றன.

    மதுரை மாநகராட்சி, மாநகர பகுதிகளில் உள்ள பராமரிக்கப்படாமல் சிதி–லமடைந்து கிடக்கும் பூங்காக் களை கண்டறிந்து, அவற்றை சீரமைத்து, பசுமையை பாது–காக்கும் வகையில் மறு உரு–வாக்கம் செய்யும் பணியை தொடங்கி உள்ளது.

    குறிப்பாக இதில் பெத்தானியாபுரம் அம்மா பூங்கா, அண்ணாநகர் பூங்கா, ஜார்ஜ் ஜோசப் பூங்கா, பழங்காத்தம் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் உரிய பராம–ரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள் ளன. மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் மொத்தம் 199 பூங்காக்கள் உள்ளன. இதில் 80 பூங்காக்களில் பாதுகாப்பு கருதி வேலி அமைக்கப்பட்டுள்ளது. 34 பூங்காக்களுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 33 பூங்காக்களுக்கு இன்னும் வேலி கூட அமைக்காமல் இன்னும் திறந்தவெளியா–கவே காட்சி அளிக்கிறது.

    இதுபற்றி பெத்தானியா–புரம் குடியிருப்பு வாசி ஒருவர் கூறுகையில், நகரில் உள்ள அம்மா குழந்தைகள் பூங்காவின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட பூங்காக்களில் பெத்தானியாபுரத்தில் உள்ள பூங்காவும் ஒன்று. கடந்த 3 ஆண்டுகளாக பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. பெரும்பாலும் மது அருந்துபவர்கள் மற்றும் பிற சட்டவிரோத செயல்க–ளின் ஈடுபடுவோரின் கூடா–ரமாக இந்த பூங்கா இருந்து வருகிறது என்றார்.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பாழடைந்த நிலையில் முதற் கட்டமாக 10 பூங்காக்கள் கண்டறியப்பட்டு புதுப்பிக் கப்பட இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக பழங்காநத்தம் மற்றும் பசுமை குடில் பூங் காக்கள் ரூ.1.5 கோடி செல–வில் புதுப்பிக்கப்படும்.

    அதுமட்டுமின்றி, பயன்ப–டுத்தப்படாத மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை கண்ட–றிந்து, அதனை சிறுவர்க–ளுக்கான விளையாட்டு உபகரணங்கள் கொண்ட பூங்காவாக மாற்ற, குடிமைப் பணித்துறை முடிவு செய் துள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குடியிருப் ேபார் நலச்சங்கங்கள் உதவி–யுடன் வேலி அமைக் கப் பட்ட பூங்காக்கள் மேம்ப–டுத் தப்பட உள்ளன.

    இதுகுறித்து மேயர் இந்தி–ராணி கூறும்போது, மாநக–ராட்சி பட்ஜெட்டில் பூங்காக் களை சீரமைக்க திட்டமிட் டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக பழகாநத்தம் பூங்கா ரூ.75 லட்சம் செலவி–லும், பசுமை குடில் பூங்கா ரூ.35 லட்சம் செலவிலும் சீரமைக்கப்படும்.

    இதேபோல், மாநகர பகுதிகளில் மோசமாக பரா–மரிக்கப்படும் பூங்காக்கள் குறித்து பரிந்துரை செய்ய அனைத்து கவுன்சி–லர்கள் மற்றும் மண்டல தலைவர்க–ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது என்று கூறினார்.

    கடந்த 2022 நவம்பரில், பொதுப் பூங்காக்களை வசதிகள் மற்றும் பொது பொழுதுபோக்கிற்கான இடமாக கருதாமல், சமூக மற்றும் சூழலியல் தேவை–யாக மதிப்பதும், மாற்றுவதும் அவசியம் என்று கருதி, மதுரை ஐகோர்ட்டு மாநக–ராட்சிக்கு உத்தரவிட்டது. அதன்படி 199 பூங்காங்கள் முறையான பராமரிப்பை உறுது செய்துள்ளது. வண்டி–யூர் தெப்பக்குளத்தை அழகு–படுத்தும் பணிகள் இந்த மாத (ஜூலை) இறுதிக்குள் தொடங்கும். இதற்காக ரூ.41.2 கோடி நிதி ஒதுக்கி தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் 2 புதிய பூங்காக் கள் அமைக்கவும், அதற்கான பணிகள் தொடங்கிய நாளில் இருந்து 18 மாதங்க–ளில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கடந்த மாதம் கலெக்டர் சங்கீதாவி–டம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திரு–மங்கலம் ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது தேன்கல்பட்டி கிராமம். இப்பகுதி மக்க–ளுக்கு சொந்தமான மயா–னம் செக்கானூரணி-திரு–மங்கலம் மெயின் ரோட்டில் உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் இறந்தவர்ளை அவர்கள் வழக்கப்படி சாஸ்திர சம்பிரதாயங்கள் முறைப்படி அடக்கம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பீட் டில் புதிதாக மின் மயானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு மின் மயானம் அமைந்தால் பாரம்பரிய பழக்க வழக்கங் கள் மறையும் நிலை ஏற்ப–டும். மேலும் பல்வேறு பகுதி மக்கள் மின்மயா னத்தை பயன்படுத்தினால் சுற்றுச்சூ–ழல் மாசுபாடு மற்றும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று புகார் எழுந்தது. இது குறித்து கடந்த மாதம் கலெக்டர் சங்கீதாவி–டம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்த–னர்.

    இந்த நிலையில் செக்கா–னூரணி பகுதியில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தேவர் சிலை அருகில் கிராம பொதுமக்கள் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட–னர்.

    • வைகை வறண்டதால் திருநகரில் விநியோகம் பாதிக்கப்பட்டது.
    • உள்ளூர் போர் வெல் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட திருப்பரங்குன்றம், திருநகர் பகுதி பொதுமக்கள் கடந்த பத்து நாள்களாக குடிநீன்றி அவதிபடுகின்ற–னர்.

    சோழவந்தான் பகுதியை அடுத்த பன்னியான் சித்தை–யாபுரம் பகுதியில் வைகை ஆற்றில் 5 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர், அமைதிசோலை நகர், நெல்லையப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இப்பகுதிகளில் தண்ணீர் வருவதில்லை என பொதுமக்களிடம் புகார் எழுந்துள்ளது. குடிநீர் இல் லாததால் இப்பகுதி பொது–மக்கள் தனியார் லாரிகளில் குடிநீர் குடம் ரூ.10 விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள–னர்.

    மேலும் புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிய–டைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாந–கராட்சி நிர்வாகம் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் வார்டு எண் 97, 98 மற்றும் 99-ல் உள்ள உள்ளூர் நீர் ஆதாரங்கள் போதிய அளவு இல்லாததால், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், மாநகராட்சி தண்ணீர் வழங்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது சுழற்சி முறையில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் என்ற மாநகராட்சியின் உறுதிமொழிக்கு மாறாக, ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிதண்ணீர் வழங்கப்படுகி–றது.

    வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் கிடைக்கி–றது. கடந்த இரண்டு மாதங்க–ளில், எஸ்.மேட்டுத்தெரு, பள்ளர் மேட்டுத்தெரு, சக்கி–லியர் மேட்டுத்தெரு, கூடல் மலைத்தெரு, படப்பை மேட் டுத்தெரு ஆகிய பகுதி–களில் குடிநீர் விநியோகம் என்பது வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை என்ற நிலைக்கு தள்ளப்பட் டுள்ளது.

    இதுதொடர்பாக அப்பகு–தியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக மாநகரில் நல்ல மழை பெய்தபோதிலும், நீரேற்று நிலையங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினை–களாலும், தண்ணீர் வரத்து குறைந்ததாலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போர் வெல் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.

    இந்த மூன்று வார்டுக–ளுக்கும் நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்தாலும், இப்பகுதிகள் பலர் மாடி வீடுகளில் இருப் பதால் தண்ணீர் பிடிக்க முடிவதில்லை.

    மேலும் பக்கத்து தெருக்க–ளில் உள்ளவர்களும், வயதா–னவர்களும் நடக்க முடியாத நிலையில் தண்ணீர் பிடிக்க அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மூலக்கரை அருகே உள்ள பம்பிங் ஸ்டேஷனில் 2 மின் மோட்டார்களில் ஏற்பட்ட பிரச்சினையால், கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதியில் நீர் அழுத்தம் குறைந்துள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி மேற்கு மண்டலத்தலைவர் சுவிதாவிமல் கூறுகையில், வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் வைகை கூட்டு குடிநீர் மூலம் தண்ணீர் விநியோகிப்பது தடை பட்டுள்ளது. தற்காலி–கமாக லாரிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது.

    லாரிகள் செல்ல–முடியாத பகுதிகளில் சிறிய–ரக வாக–னங்களில் தன்னார் வலர் கள் மூலமும், எங்களது சொந்த செலவிலும் பொது–மக்களுக்கு குடிநீர் விநியோ–கம் செய்து வருகி–றோம். இதேபோல பொதுமக்கள் புழக்கத்திற்கு மாடக்குளம் மற்றும் மூலக்கரை பகுதியில் இருந்து தண்ணீர் விநியோ–கிக்கப்பட்டு வந்தது.

    அப்பகு–தியில் இருந்து மின்மோட்டார்கள் பழுது ஆனதால் தண்ணீர் விநியோ–கிக்க முடியமல் போனது. மின் மோட்டார்கள் சரி–செய்யப்பட்டு இன்னும் ஓரிருநாள்களில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பரங்குன்றம் பகு–திக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி–களில் தண்ணீர் தேக்கி வைத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற் றாக்குறையை சமாளிக்க முடியும் என்றார்.

    மாநகராட்சி உயர் அதி–காரி ஒருவர் கூறுகை–யில், மேற்கண்ட மூன்று வார்டுக–ளுக்கும் ஒரு நாளைக்கு 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும், அதிகப்படியான தண்ணீரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு வழங்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் குடிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்க–ளுக்கு மாற்று நாட்களில் திருநகரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும். மூலக்கரை பம்பிங் ஸ்டே–ஷனில் உள்ள 60 ஹெச்பி மோட்டார் பம்ப் அடுத்த இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் என்று தெரி–வித்தார்.

    • தேரோட்டம் ஆகஸ்டு 1-ந்தேதி நடக்கிறது.
    • 3-ந்தேதி உற்சவ சாந்தி நடக்கிறது.

    மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரம்மோற்சவ விழா தனி சிறப்புடையது. இந்த ஆடி பெருந்திருவிழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.

    25-ந் தேதி காலையில் தங்கப்பல்லக்கு, இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 26-ந் தேதி காலையில் சுவாமி புறப்பாடு, இரவு அனுமார் வாகனத்திலும், 27-ந் தேதி இரவு கருட வாகனத்திலும், 28-ந் தேதி காலை பெருமாள் பல்லக்கில் புறப்பாடாகி, மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்தில் எழுந்தருளுவார். இரவு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    மேலும் 29-ந் தேதி இரவு யானை வாகனத்திலும், 30-ந் தேதி காலையில் சூர்ணோத்சவம், இரவு புஷ்ப சப்பரமும் நடைபெறும். 31-ந் தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரில் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். பின்னர் காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் தேர் வடம் பிடித்தல், இரவு புஷ்ப பல்லக்கு, 2-ந் தேதி சப்தவர்ணம், புஷ்ப சப்பரம், 3-ந் தேதி உற்சவ சாந்தி நடக்கிறது. அதை தொடர்ந்து 16-ந் தேதி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இத்துடன் ஆடி பெருந்திருவிழா முடிவடையும்.

    திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கிராம மக்கள் பஸ்சை மறித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளா ளப்பட்டியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளியில் குடிதண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

    இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் பலமுறை பள்ளி நிர்வாகத்தி டம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் சத்திர வெள்ளாளப்பட்டி கிராம மக்கள் இன்று காலை ஊருக்கு வந்த அரசு பஸ்சை மறித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் மாணவிகள், பெற்றோர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாலமேடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளியில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி கூறப்பட்டது. இதையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • புதிய யூனியன் அலுவலக அமைவிடத்தில் தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டது.
    • ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூய்மை படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    திருமங்கலம்

    திருமங்கலம் யூனியன் அலுவலகம் தற்போது ரெயில்வேபீடர் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. திருமங்கலம் தாலுகா அலுவலகத்தின் பின்புறம் உள்ள இந்த அலுவலகம் கடும் இட நெருக்கடியில் இயங்கி வருகிறது.

    திருமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கான இடம் தேர்வு செய்யப்பட்ட போது யூனியன் அலுவல கத்தின் முன்புற பகுதிகள் எடுத்துக்கொள்ளப்படும் என பொதுபணி துறையினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து திருமங்கலம் யூனியன் நிர்வாகம் அலுவலகம் கட்டுவதற்கு புதிய இடத்தினை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியது.

    அதில் கப்பலூர் அருகே உச்சப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் போதுமான நிலம் இருந்தது தெரிய வந்தது. இந்த இடத்தில் ஏற்கனவே அரசு கலைக் கல்லூரி மற்றும் திருமங்கலம் ஆர்.டி.ஓ. அலுவலகம் அமைந்துள்ளது. ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் அருகே 75 சென்ட் இடத்தில் புதிய யூனியன் அலுவலகம் அமைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது.

    அதன்படி அந்த இடமானது திருமங்கலம் பி.டி.ஓ. பெயருக்கு பெயர் மாற்றம் செயப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த இடத்தை வருவாய் துறையினர் அளந்து கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து புதிய யூனியன் அலுவலகம் அமைய உள்ள இடத்தை தூய்மை செய்யும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூய்மை படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஒன்றிய அதிகாரிகள், தலைவர், கவுன்சிலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். சீர் செய்த பின்பு கற்கள் ஊன்றி கம்பிவேலி போடப்பட்டு நிதி ஒதுக்கீடு வந்தவுடன் கட்டிடப் பணிகள் தொடங்கப்்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×