search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழை
    X

    கீரைத்துறை பகுதியில் சாலையில் குளம்போல் மழை நீர் தேங்கியிருந்த காட்சி. அடுத்த படம் புதுஜெயில் ரோட்டில் சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றிய காட்சி.

    3 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழை

    • மதுரையில் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை.
    • மழையால் மின்தடை-மக்கள் அவதியடைந்தனர்.

    மதுரை

    மதுரையில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்தி–ரத்தை மிஞ்சும் அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்தால் வெப்பத்தின் அளவு அதிகரித்தது. அதிக வெப்பம் காரணமாக பொது ––மக்கள் சாலைகளில் சென்று வர மிகவும் சிரமப் பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து 3 மணி நேரம் மதுரையின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கொட்டி தீர்த்தது. பின்னர் மழை முடிந்தாலும் தூறல் நிற்காமல் நள்ளிரவு 11 மணி வரை சாரல் மழை போல மழை பெய்தது. இந்த கன மழை காரணமாக மதுரையின் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    ஏ.ஏ. ரோடு பகுதியில் மரம் விழுந்ததில் ஆட்டோ சேதம் அடைந்தது. மணி நகரத்தில் உள்ள கர்டர் பாலம் முற்றிலுமாக மழை வெள்ளத்தால் நிரம்பின. தத்தனேரி சுரங்கப்பாதையும் மழை நீரால் நிரம்பியதால் போக்குவரத்து வேறு பாதை–யில் திருப்பி விடப்பட்டன.

    கனமழை காரணமாக பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளை–யம், தல்லாகுளம், பழங்கா–நத்தம், திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட பகுதிக–ளில் மழை வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் பள்ளி முடிந்து வீடு செல் லும் மாணவ, மாணவர்கள் நனைந்தவாறு சென்றனர்.

    மேல பொன்னகரம் பகு–தியில் மின்கம்பம் சரிந்து விழுந்தது இதனால் அந்த பகுதியில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. இதே–போல் தொடர் மழை கார–ணமாக பல்வேறு இடங்க–ளில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மதுரை–யில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணி–களுக்காக பல்வேறு வார்டு–களில் குழிகள் தோண்டப் பட்டு பணிகள் அரைகுறை–யாகவே நடைபெற்று வரு–கின்றன. இந்த மழை கார–ணமாக அந்த பகுதியில் அனைத்தும் சேறும், சகதி–யுமாக காட்சியளித்தது.

    இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர். முக்கிய சாலை–களில் தேங்கிய மழை–நீரை வெளியேற்ற மாநக–ராட்சி பணியாளர்கள் நீண்ட நேரம் போராடினர். கர்டர் பாலம், தத்தனேரி சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் குளம் போல தேங்கிய நீரை அகற்ற மாந–கராட்சி ஊழியர்கள் தீவி–ரமாக ஈடுபட்டனர்.

    ஆரப்பாளையம், பெத்தா–னி–யாபுரம், புதுஜெயில் ரோடு, கண்மாய் கரை உள்ளிட்ட பகுதியில் மரங் கள் வேரோடு சாய்ந்தது. வீடுகளின் முன்பு நிறுத்தப் பட்டிருந்த வாகனங்கள் மீதும் மரக்கி–ளைகள் முறிந்து விழுந்ததில் ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந் தன.

    நாகமலை புதுக்கோட்டை நான்குவழிச்சாலையில் தனியார் மண்டபம் முன்பு வயர் அறுந்து விழுந்தது. அப்பகுதியில் உள்ள தியேட்டர் அருகில் மரம் விழுந்ததில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் அப்பகுதியிலும் மின் தடை ஏற்பட்டது.

    Next Story
    ×