search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cleaner"

    • பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பணம் உண்மையான அமெரிக்க டாலரா? அல்லது கலர் ஜெராக்ஸா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தை சேர்ந்தவர் சுலைமான் ஷேக். இவர் பெங்களூருவில் குப்பை அள்ளும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 1-ந் தேதி இவர் நாகவாரா ரெயில் நிலையத்தில் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களை சேகரித்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ஒரு கருப்பு பை கிடந்தது. பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அதை யாருக்கும் தெரியாமல் தனது அறைக்கு எடுத்து சென்றார்.

    மேலும் அதிகளவில் இருந்த பணத்தை பார்த்து அச்சமடைந்த சுலைமான் சேட் இதுகுறித்து தான் வேலைபார்க்கும் முதலாளி பாப்பா என்பவரை சந்தித்து இதுகுறித்து தெரிவித்தார். மேலும் அந்த பணத்தையும் சுலைமான் ஷேக் எடுத்து காட்டினார். இதை பார்த்து பாப்பாவும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர்கள் இதுகுறித்து சமூக ஆர்வலர் கலீமுல்லா என்பவரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் சுலைமான் ஷேக் மற்றும் பாப்பா ஆகியோரை பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் போலீசார் அந்த கரன்சி நோட்டுகளை ஆய்வு செய்தபோது அது அமெரிக்க டாலர்கள் என்றும், இந்திய மதிப்பில் ரூ.25 கோடி என்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் தயானந்தா, ஹெப்பால் போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர்கள் இந்த பணம் உண்மையான அமெரிக்க டாலரா? அல்லது கலர் ஜெராக்ஸா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பணத்துடன் ஒரு கடிதம் இருந்தது. அதில் இந்த பணத்தை நல்ல காரியத்துக்கு பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே அது உண்மையான பணமாக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

    எனவே பெங்களூருவில் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்க டாலர்கள் உண்மையானதா என்பதை கண்டறிய டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே அங்கிருந்து வரும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • மதுரை கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் பெண்கள் உள்பட ஏராளமான துப்புரவு பணியாளர்கள் திரண்டனர். மாநில தலைவர் விஜய குமார் தலைமையில் கோ ரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்ற அவர்கள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களை அரசு ஊழியராக அங்கீகரிக்க வேண்டும்.

    மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவ லர்களுக்கு அரசா ணைப்படி ஊதியம் கொடுக்க வேண்டும். கொரோனா காலங்களில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு அரசு அறிவித்த ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்.

    ஒரே மாதிரியான பணி நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். வார விடுமுறை, அரசு விடுமு றையை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    • கேரளாவிலிருந்து கழிவு பேப்பர் ஏற்றிக் கொண்டு உடுமலை அருகே உள்ள தனியார் பேப்பர் மில்லுக்கு வந்துள்ளார்.
    • இயற்கை உபாதையை கழிப்பதற்காக ரோட்டு ஓரத்தில் லாரியை நிறுத்தியுள்ளார்.

    உடுமலை :

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த மனப்பூர் பகுதியை சேர்ந்தவர் விஜி (வயது 38).டிரைவரான இவர் கேரளாவிலிருந்து கழிவு பேப்பர் ஏற்றிக் கொண்டு உடுமலை அருகே உள்ள தனியார் பேப்பர் மில்லுக்கு வந்துள்ளார். அங்கு பேப்பரை இறக்கி விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த அவர் அதிகாலை உடுமலை பொள்ளாச்சி ரோட்டிலுள்ள தனியார் கல்லூரி அருகில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக ரோட்டு ஓரத்தில் லாரியை நிறுத்தியுள்ளார்.

    அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லோடு ஆட்ேடா ஒன்று நின்று கொண்டிருந்த லாரியில் பயங்கரமாக மோதியது. இதில் மோதிய லாரியின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. அந்த லாரியில் இடது புறம் அமர்ந்திருந்த கேரள மாநிலம் மணப்புரம் பகுதியைச் சேர்ந்த கிளீனர் உன்னிகிருஷ்ணன் (வயது 52) இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த டிரைவர் ராமச்சந்திரனை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இரணியல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கருங்கல் ஏற்றிவந்த லாரி டிரைவர் மற்றும் கிளீனரை கைது செய்தனர்.

    இரணியல்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இதையடுத்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞான சிகாமணி மற்றும் போலீசார் நேற்று தோட்டியோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தினார்கள்.

    பின்னர் அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் எந்தவித அனுமதியும் இன்று கருங்கல் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் லாரியை நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த கோமதி (வயது 38) என்பவர் ஓட்டி வந்ததும், அவருடன் கிளீனராக நெய்யூர் பகுதியை சேர்ந்த மைக்கேல்ஜோஸ் (44) என்பவர் வந்ததும் தெரியவந்தது.

    போலீசார் அவர்களை எந்தவித அனுமதியும் இன்றி கருங்கல் ஏற்றி வந்ததாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் எங்கிருந்து கருங்கல் ஏற்றி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து போலீசார் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருவதை தடுப்பதற்காக கண்காணித்து வருகின்றனர். அனைத்து வாகன சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தென்காசியில் இருந்து வள்ளியூருக்கு நேற்று இரவு ஒருஅரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை கல்வீசி தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    களக்காடு:

    தென்காசியில் இருந்து வள்ளியூருக்கு நேற்று இரவு ஒருஅரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை களக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக கீழபத்தையை சேர்ந்த சோமசுந்தரம்(42) என்பவர் இருந்தார்.

    இந்நிலையில் பஸ் களக்காடு அருகே உள்ள குட்டுவன்குளம் அருகே வந்த போது மர்ம நபர்கள் 2 பேர் திடீரென பேருந்தின் பின்னால் கல்வீசி தாக்கினர். இதில் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இது குறித்து டிரைவர் பாலசுப்பிரமணியன் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் கோவில் அம்மாள்பிரத்தை சேர்ந்த சேன் டிரைவர் சுடலைமணி, கிளீனர் செல்வகிருஷ்ணன் ஆகியோர் பஸ் மீது கல்வீசி தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×