என் மலர்
நீங்கள் தேடியது "bus glass break"
களக்காடு:
தென்காசியில் இருந்து வள்ளியூருக்கு நேற்று இரவு ஒருஅரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை களக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக கீழபத்தையை சேர்ந்த சோமசுந்தரம்(42) என்பவர் இருந்தார்.
இந்நிலையில் பஸ் களக்காடு அருகே உள்ள குட்டுவன்குளம் அருகே வந்த போது மர்ம நபர்கள் 2 பேர் திடீரென பேருந்தின் பின்னால் கல்வீசி தாக்கினர். இதில் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இது குறித்து டிரைவர் பாலசுப்பிரமணியன் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் கோவில் அம்மாள்பிரத்தை சேர்ந்த சேன் டிரைவர் சுடலைமணி, கிளீனர் செல்வகிருஷ்ணன் ஆகியோர் பஸ் மீது கல்வீசி தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா கம்பைநல்லூர் அருகே பெரிச்சாகவுண்டம் பட்டியில் அரசு டவுன் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இது குறித்து பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் பெரிச்சாகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனி (37), சக்தி (38) என்ற 2 வாலிபர்களை கைது செய்தார். 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.






