search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "USD"

    • பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பணம் உண்மையான அமெரிக்க டாலரா? அல்லது கலர் ஜெராக்ஸா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தை சேர்ந்தவர் சுலைமான் ஷேக். இவர் பெங்களூருவில் குப்பை அள்ளும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 1-ந் தேதி இவர் நாகவாரா ரெயில் நிலையத்தில் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களை சேகரித்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ஒரு கருப்பு பை கிடந்தது. பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அதை யாருக்கும் தெரியாமல் தனது அறைக்கு எடுத்து சென்றார்.

    மேலும் அதிகளவில் இருந்த பணத்தை பார்த்து அச்சமடைந்த சுலைமான் சேட் இதுகுறித்து தான் வேலைபார்க்கும் முதலாளி பாப்பா என்பவரை சந்தித்து இதுகுறித்து தெரிவித்தார். மேலும் அந்த பணத்தையும் சுலைமான் ஷேக் எடுத்து காட்டினார். இதை பார்த்து பாப்பாவும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர்கள் இதுகுறித்து சமூக ஆர்வலர் கலீமுல்லா என்பவரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் சுலைமான் ஷேக் மற்றும் பாப்பா ஆகியோரை பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் போலீசார் அந்த கரன்சி நோட்டுகளை ஆய்வு செய்தபோது அது அமெரிக்க டாலர்கள் என்றும், இந்திய மதிப்பில் ரூ.25 கோடி என்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் தயானந்தா, ஹெப்பால் போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர்கள் இந்த பணம் உண்மையான அமெரிக்க டாலரா? அல்லது கலர் ஜெராக்ஸா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பணத்துடன் ஒரு கடிதம் இருந்தது. அதில் இந்த பணத்தை நல்ல காரியத்துக்கு பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே அது உண்மையான பணமாக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

    எனவே பெங்களூருவில் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்க டாலர்கள் உண்மையானதா என்பதை கண்டறிய டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே அங்கிருந்து வரும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று மேலும் 22 காசுகள் சரிந்து, வரலாற்றில் இல்லாத அளவிற்கு 72.91 என்ற நிலைக்கு சென்றது. #IndianRupee #RupeeValue
    மும்பை:

    சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
    வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 72.74 என்ற அளவில் சரிந்தது.  அதன்பின்னர் சற்று ஏற்றம் பெற்று நேற்றைய வர்த்தக முடிவில் 72.69 என்ற நிலையில் இருந்தது.

    இந்நிலையில், ரூபாய் மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் மீண்டும் சரியத் தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி 22 காசுகள் சரிந்து 72.91 என்ற நிலையை எட்டியது. இதன்மூலம் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது.



    கச்சா எண்ணெய் விலை நேற்றைய வர்த்தகத்தின்போது 2 சதவீதம் அதிகரித்த நிலையில், இன்று 0.35 சதவீதம் குறைந்தது. அதேசமயம் இந்திய பங்குச்சந்தையில் இன்று காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 133.29 புள்ளிகள் உயர்ந்து, 37546.42 புள்ளிகளாக இருந்தது. #IndianRupee #RupeeValue

    இந்தியாவில் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் கட்டப்படும் எனவும், அதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும் விமான போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். #SureshPrabhu
    புதுடெல்லி:

    இந்தியாவின் விமான போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ் பிரபு கூறுகையில், உலகின் மிக அதிக விமான போக்குவரத்து வசதி கொண்ட 3-வது நாடாக அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா வருவதற்காக முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    இதற்காக அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், (இந்திய மதிப்பில் 4.2 லட்சம் கோடி ரூபாய்) நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் கட்டப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும், இந்த கட்டுமானத்தில் அரசு மற்றும் தனியார் இணைந்து செயல்படும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். #SureshPrabhu 
    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா நேற்று அதிரடியாக கூடுதல் வரி விதித்து உள்ளது. #USD #ChineseGoods #ImportTariff
    வாஷிங்டன்:

    சீனாவால் ஏற்படுகிற வர்த்தக பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதித்து வருகிறது. இவ்விரு வல்லரசு நாடுகள் இடையே ஏற்பட்டு உள்ள வர்த்தக போர் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா நேற்று அதிரடியாக கூடுதல் வரி விதித்து உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 50 பில்லியன் டாலர் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா முதலில் அறிவித்தது. அதன்படி ஏற்கனவே 34 பில்லியன் டாலர் பொருட்கள் மீது கூடுதல் வரியை விதித்து விட்டது. மீதி 16 பில்லியன் டாலர் பொருட்களுக்குத்தான் இப்போது கூடுதல் வரி விதித்து உள்ளது.

    அமெரிக்கா சீனப்பொருட்கள்மீது எந்த அளவுக்கு கூடுதல் வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அந்த நாட்டின் பொருட்கள் மீது நாங்கள் வரி விதிப்போம் என்று சீனா ஏற்கனவே கூறி இருப்பது நினைவுகூரத்தக்கது. இது பற்றி அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்காவுக்கு பதிலடி தருகிற விதத்தில் அதே அளவுக்கு சீனாவால் கூடுதல் வரி விதிக்க முடியாது. அவர்கள் சிறிதளவு வரி விதிப்பார்கள். முடிவில், அவர்களை விட நாங்கள் தான் கூடுதல் வரி விதிக்க முடியும். இது அவர்களுக்கும் தெரியும்” என குறிப்பிட்டார்.  #USD #ChineseGoods #ImportTariff  
    ×