என் மலர்
மதுரை
- ராமேசுவரம் கோவில் ஆடித்திருவிழாவில் ஜோதிடர் கரு.கருப்பையாவின் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது.
- சிவகிரி பேராசிரியர் ராமராஜ், தூத்துக்குடி வக்கீல் சாந்தா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
மதுரை
பிரசித்தி பெற்ற ராமேசு–வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா நாளை (13-ந்தேதி, வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
விழாவையொட்டி கோவில் தெற்குவாசல் திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், இரவு 7 மணிக்கு பரத நாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிக–ளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விழா–வின் சிறப்பு நிகழ்ச்சியாக நாளை (13-ந்தேதி) மாலை 6 மணிக்கு முதலாம் நாள் நிகழ்ச்சியாக கோவை சூலூர் ஏரோ சித்த மருத்து–வமனை கரு.கருப்பையா வழங்கும் உலகம் சிவமயம் என்ற தலைப்பில் ஆன்மீக் சொற்பொழிவு நடைபெறு–கிறது.
இதையடுத்து பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா–வின் நடுவர் பொறுப்பில் நகைக்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. இதில் சிவகிரி பேராசிரியர் முனைவர் ராமராஜ், தூத்துக்குடி வக்கீல் சாந்தா ஆகியோர் கலந்துகொண்ட பேசுகி–றார்கள். முடிவில் பட்டி–மன்ற நடுவர் கரு.கருப் பையா தீர்ப்பு வழங்கு–கிறார்.
- திருமங்கலம் அருகே 2 பெண்களை தாக்கி 8 பவுன் நகை பறிக்கப்பட்டது.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள புங்கங்குளத்தை சேர்ந்தவர் மார்கண்டன். இவரது மனைவி சுந்தரவள்ளி(வயது 49). இவர்கள் கிராமத்தில் சித்தாலை செல்லும் ரோட் டில் ஒத்தவீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் 1 மணியளவில் சுந்தரவள்ளி வீட்டின் முன்பு அமர்ந்து காய்கறி நறுக்கி கொண்டிருந்தார்.
அப்போதுஅந்த வழியாக திருமங்கலம் சோ்ந்த ஈஸ்வரன் மனைவி தெய்வகனி (25), டூவிலரில் சென்றார். ஆள்நடமாட்டம் அற்ற அந்த ரோட்டில் அவரை பின் தொடர்ந்து வேகமாக மற்றொரு டூவிலரில் வந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் தெய்வகனி கழுத்திலிருந்த 5 பவுன் நகையை பறித்துள்ளான்.
அவர் சப்தம் போடவே வீட்டிலிருந்த சுந்தரவள்ளி வெளியேஓடி வந்த நகைபறித்தவனை தடுக்க முயலவே ஆத்திரமடைந்த அந்த நபர் சுந்தரவள்ளி அணிந்திருந்த 3 பவுன் நகையையும் பறித்து கொண்டு மொத்தம் 8 பவு னுடன் தப்பியோடிவிட்டார்.
நகை பறித்துச் சென்றவன் ஹெல்மெட் அணிந்து வந்தால் அடையாளம் தெரிய வில்லை. இதுகுறித்து சுந்தரவள்ளி கொடுத்த புகாரில் திருமங்கலம் தாலுகா போலீ சார் வழக்குபதிவு செய்து இரண்டு பெண்களிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- சோழவந்தான், அலங்காநல்லூரில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- உசிலம்பட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை முன்னிட்டு உசிலம்பட்டி நகர செயலாளர் பூமா கே.ஆர்.ராஜா தலைமையில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர். பி.உதயகுமார் பொதுமக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கினார்.
மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜ், நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் லட்சுமணன், உசிலம்பட்டி மாவட்ட கவுன்சிலர் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுதாகரன், இளைஞரணி மாநிலதுணைச் செயலாளர் போஸ் சிவசுப்பிரமணியன்,
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மகேந்திர பாண்டியன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா, பவளக்கொடி ராசு காளை, ரகு, சசிகுமார், பெருமாள், டி.ஆர். பால்பாண்டி, ராமமூர்த்தி மற்றும் வார்டு நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் முன்னிலை வகித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் வருவாய்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில் யூனியன் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலாஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், சோழவந்தான் உன்னால் பேரூராட்சி தலைவர் முருகேசன், நகரசெயலாளர் முருகேசன், நிர்வாகிகள் முனியாண்டி, கேபிள்மணி, தியாகு, ராமன், கண்ணன், மணிகண்டன், வார்டு கவுன்சிலர்கள் ரேகாராமச்சந்தி ரன், சண்முக பாண்டிய ராஜா, வசந்தி கணேசன், சரண்யாகண்ணன், டீக்கடை கணேசன், மருத்துவர் அணி கருப்பையா, பேட்டை மாரி மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கிளை நிர்வாகிகள், சோழவந்தான் பேரூர் வார்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய கவுன்சிலர் தங்கபாண்டியன் நன்றி கூறினார்.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் குமாரம் பிரிவில் முன்னாள் அமைச் சரும், மாவட்ட செயலாளரு மான ஆர்.பி.உதயகுமார் வழிகாட்டுதல்படி ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
- விவசாயிகளிடம் புகார் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வட்டாட்சியர் கூறினார்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வட்டாட்சியர் சுரேஷ் பிரடரிக்கிள மண்ட் தலைமை வைத்தார். உசிலம்பட்டி மற்றும் செல்லம்பட்டி பகுதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயிர்களை தாக்கும் காட்டு விலங்குகள் மற்றும் பன்றிகள் விளை நிலங்களை சேதப்படுத்துவது அதற்கு விவசாயிகளுக்கு வனத்துறை யினர் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களில் வர விடாமல் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும். தமிழக அரசு சேதமடைந்த கரும்பு மற்றும் உணவுப் பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க கோரியும் வேளாண்மைதுறை மற்றும் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். வனத்துறையினர் விவசாயிகளிடம் புகார் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசு துறையில் இருந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- திருமங்கலம் நகரில் வீரன் அழகுமுத்துக்கோன் 313-வது குருபூஜை விழா நடந்தது.
- தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருமங்கலம்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கி–லேயருக்கு எதிராக தீரத்து–டன் போராடிய வீரன் அழகுமுத்துக்கோ–னின் 313-வது பிறந்தநாள் விழா நேற்று தமிழ்நாடு முழுவதிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதன் ஒருபகுதியாக திருமங்கலம் நகரில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் வீரன் அழகுமுத்துக் கோனின் பிறந்தநாள் விழா வெகுசிறப்பாக நடைபெற் றது.
இந்நிகழ்வினில் மாவட்ட கட்சி அலுவல–கத்தில் அலங் கரித்து வைக்கப் பட்டிருந்த வீரன் அழகு–முத்துக்கோ–னின் திருவு–ருவப் படத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சேட–பட்டி மு.மணிமாறன் மாலை அணிவித்து மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் வீரன் அழகு–முத்துக்கோனின் திருவுருவப் படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,கழக விவசாய–அணி மாநில இணைச் செயலாளர் ம.முத்துராம–லிங்கம், மாவட்ட அவைத்த–லைவர் நாகராஜன், மாவட்ட துணைச் செயலாளர் சிவ–னாண்டி.
தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராமன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல்,துணை அமைப்பாளர்கள் சுரேஷ், ஜெகதீசன், காளிதாஸ், பொதுக்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன், ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் தனபாண் டியன், மதன்குமார், தங்கப்பாண்டி, ராமமூர்த்தி, சண்முகம், சுதாகர், வேட் டையன், சிவா, வருசை முகம்மது,
திருமங்கலம் நகர்மன்ற தலைவர் மு.ரம்யா முத்துக் குமார், துணை தலைவர் ஆதவன் அதியமான், நகர் கழகச் செயலாளர் ஸ்ரீதர், துணைச் செயலாளர் செல் வம், மாவட்ட அணித்த–லைவர், துணை அமைப்பா–ளர்கள் ராஜசேகர், ஜஸ்டின் திரவியம், ராஜபிரபாகரன், மைதீன்பிச்சை, ரிச்சர்டு இன்பம், இந்திராணி, ஜெயக் குமார்,
வலைத்தள பொறுப்பா–ளர் சொர்ணா வெற்றி, இளைஞரணி ஹரி, கௌதம், கீழக்குடி செல் வேந்திரன், மாவட்ட பிரதி–நிதி ரஞ்சித்குமார், ராதா–கிருஷ்ணன்,சேட் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திருமங்கலம் அருகே பிறந்து சில மணி நேரத்தில் ஆண் சிசு ரோட்டில் வீசப்பட்டது.
- இது குறித்து கள்ளிக்குடி கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி அருகேயுள்ள பொட்டல்பட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலைத்தொட்டியின் அருகே பிறந்து சில மணி நேரமேயான ஆண்சிசுவை யாரோ பையில் சுற்றி வீசி சென்றுள்ளனர். சிசுவின் அழுகுரல் கேட்ட கிராமமக்கள் இது குறித்து கள்ளிக்குடி கிராம நிர்வாக அதிகாரி முகமது தைப்புக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் பொட்டல்பட்டி கிராமத்திற்கு விரைந்து சென்று சிசுவை மீட்டு கள்ளிக்குடி ஆரம்ப சுகா தாரநிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கிருந்து மேற்சிகிச்சைக்கு சிசு மதுரை அரசுமருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஆண் சிசு உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து பிறந்து சில மணிநேரத்தில் ஆண் சிசுவை தூக்கி வீசி சென்றவர்கள் யார்? என விசாரணை நடத்திவருகின்றனர்.
- புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
- மதுபழக்கம் 100 சதவீதம் எட்டுவதுதான் திராவிட மாடலா? என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.
மதுரை
மதுரையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கள்ளுக்கடைகளை மூட வேண்டும் என தொடர்ந்து அரசை வலியு றுத்தி வருகிறோம். தமிழகத் தில் மதுபான கடைகளை மூட வேண்டும் என இப்போதைய முதல்வராக உள்ள ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்தனர். ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூட முதல் கை யெழுத்திடுவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் அதற்கு மாறாக நடக்கிறார். தமிழகத்தில் அண்மைக்காலமாக இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக கனி மொழி எம்.பி. கூறியிருக்கிறார்.
டாஸ்மாக் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிரியாக உள்ளது. மது அருந்துவதால் உடல் ரீதி யான பாதிப்பு ஏற்படு கிறது என்று தெரியாமல் இளை ஞர்கள், பெரியோர்கள் அனைவரும் மது அருந்து கின்றனர்.
மது அருந்துவதால் டாஸ் மாக் மூலம் வருவாய் ஈட்டும் முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வரு கிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் மது கடைகளை மூட வேண்டும் என்பது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
டாஸ்மாக்கை நடத்து வதா? வேண்டாமா? என்று பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். பெண்களிடம் எழுத்துப்பூர்வமான கருத்தை கேட்க வேண்டும்.மதுவினால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் 60 சதவீதம் பேர் மது பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.100 சத வீதத்தை எட்டுவது தான் திராவிட மாடலா?.
100 சதவீதம் கடைகள் திறந்து இருந்தாலும் மது அருந்தாத நிலையை தமிழ கத்தில் ஏற்படுத்த வேண்டும். தி.மு.க. கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்ற தவறி விட்டது. மதுவால் பொது மக்கள் தவறான வழிக்கு சென்று விட்டனர். மக்கள் மதிப்பை தி.மு.க. இழந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாலசுப்ரமணியம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடை புறநகர் பகுதியில் உள்ள வரைவாளன் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.
இவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு விவசாய கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோனியா மதுரை பாண்டிகோவிலில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மென் பொறியாளராக உள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 45 பவுன் நகை, ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.
இதனிடையே பாலசுப்ரமணியம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாலசுப்பிரமணியன் வெளியூரில் இருந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சோனியா ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் சுகுமாறன், சப்-இன்ஸ்பெக்டர் சேது, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே பேராசிரியர் வீட்டின் அருகே உள்ள குமரன் நகரில் புகுந்த கொள்ளை கும்பல் 4 பவுன் நகையை திருடி சென்றுள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரட்டைக்கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது.
- ஜெயராஜூம், பென்னிக்சும் இறந்ததற்கு காரணம், போலீசாரின் தொடர் தாக்குதல்கள்தான்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரும் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை போலீசார் கடுமையாக தாக்கினார்கள்.
இதில் படுகாயம் அடைந்த அவர்களை, கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு காயங்களால் அவதிப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். இதுகுறித்து சி.பி.ஐ., இரட்டைக்கொலை வழக்குபதிவு செய்தது. இந்த வழக்கில் சாத்தான்குளத்தின் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. பல்வேறு முக்கிய சாட்சிகள் கோர்ட்டில் ஆஜராகி, சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்தநிலையில் இந்த வழக்கானது பொறுப்பு நீதிபதி தமிழரசி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைதான 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிசோதனை செய்து, அதுசம்பந்தமாக அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்வதற்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த்குமார், நீதிபதி முன்பு நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் கைதான 2 பேர் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை வருகிற 24-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
எய்ம்ஸ் டாக்டர் அரவிந்த்குமார் அளித்த சாட்சியம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்த அறிக்கையில் அவர்கள் இருவரையும் போலீசார் லத்தி, உருளை போன்றவற்றால் தாக்கினர். மீண்டும் மீண்டும் அவர்களை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து உள்ளனர். இதனால் உடல் உறுப்புகள் கொஞ்சம், கொஞ்சமாக செயல் இழந்துதான் அடுத்தடுத்து தந்தை-மகன் பரிதாபமாக இறந்தனர் என கூறியிருந்தனர்.
அந்த அறிக்கையை எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவைச்சேர்ந்த நாங்கள் ஆய்வு செய்தோம். பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின்பு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். ஜெயராஜூம், பென்னிக்சும் இறந்ததற்கு காரணம், போலீசாரின் தொடர் தாக்குதல்கள்தான்.
இவ்வாறு டாக்டர் அரவிந்த்குமார் சாட்சியம் அளித்ததாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- அரசு வக்கீல் ஆஜராகி, சந்தேக மரணம் என்று பதிவான வழக்கை, தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றப்பட்டு உள்ளது.
- விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கணவர் இருதயம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளார்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரைச் சேர்ந்தவர் மீனாள். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது கணவர் வேலுகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் இருதய நோயாளி. நீரிழிவு நோய்க்காகவும் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லல் பகுதியை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் என்னுடைய கணவர் பெயரையும் போலீசார் சேர்த்தனர்.
சமீபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த என் கணவரை, இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த 6-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து சென்றனர். இதுவரை அவரது நிலை என்ன என்று தெரியவில்லை. எனது கணவரை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிர்மல் குமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கணவர் மீதான வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் அளித்து கடந்த மாதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் மனுதாரர் கணவரை போலீசார் கைது செய்தது சட்டவிரோதம் என வாதாடினார்.
அரசு வக்கீல் ஆஜராகி, சந்தேக மரணம் என்று பதிவான வழக்கை, தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ள மனுதாரர் கணவர் விசாரணைக்கு மட்டுமே போலீசார் அழைத்து சென்றுள்ளனர். விரைவில் விடுவிக்கப்படுவார் என்றார்.
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கணவர் இருதயம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளார். அவருக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் கிடைத்தும், அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து உள்ளனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கையானது, கோர்ட்டுக்கு கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. இது ஏற்புடையதல்ல. எனவே அவரை சிறையில் இருந்து விடுவிக்கும் படி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிடுகிறோம். இந்த வழக்கை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். இதற்கிடையே மனுதாரரின் கணவருக்கு ஏற்கனவே இந்த கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில், ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை நடந்தது.
- அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப் பட்டது.
மதுரை
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத் துக்கோன் குருபூஜையை முன்னிட்டு அவரது திருவுரு–வப்படத்திற்கு அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் சோழ–வந்தான் சட்டமன்ற உறுப்பி–னர்கள் வெங்கடேசன், அவைத் தலைவர் பாலசுப்பி–ரமணியம், பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், அழகுபாண்டி, பகுதி செய–லாளர்கள் சசிகுமார், ராம–மூர்த்தி, செயற்குழு பூமிநா–தன், மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன்,
பேரூர் தலைவர் ரேணுகா ஈஸ்வரி, கவுன்சி லர்கள் ரோகினி பொம்மை தேவன், செல்வகணபதி, பாபு, இளைஞரணி அழகு பாண்டி, வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க.வை முடக்க நினைத்து கனவு கண்ட துரோகிகளுக்கு பலத்த இடி விழுந்து விட்டது.
- கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
மதுரை
இந்திய தேர்தல் ஆணை–யம் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற் றம் செய்தது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. அம்மா பேரவையின் சார் பில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமங்கலம் தொகுதியில் உள்ள நடுவக்கோட்டை, ஆலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழக அம்மா பேரவை செயலாள–ரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பொது–மக்களுக்கு இனிப்புகளை வழங்கி பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா–வுக்கு பிறகு தாய் இல்லாத பிள்ளைகளாய் நாம் தவித்த போது இந்த இயக்கத்தையும், இயக்கத் தொண்டர்களை காப்பாற்ற கலங்கரை விளக்கமாய் எடப்பாடியார் நமக்கு கிடைத்தார். இந்த இயக்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையில் உலக அளவில் ஏழாவது இடத்திற்கும், இந்திய அளவில் மூன்றாவது இடத்திற்கும், தமிழகத்தில் முதலிடத்திற்கு கொண்டு சென்றார். உலகத்திலே ஏழைகளுக்கான ஒரே மக்கள் இயக்கம் தான் அ.தி.மு.க. உள்ளது.
இன்றைக்கு இந்திய தேர் தல் ஆணையம் கழக பொதுச் செயலாளராக எடப்பாடியாரையும் அங்கீக–ரித்துள்ளது. அதனைத் தொ–டர்ந்து தலைமை கழக நிர்வாகிகளையும், மாவட்ட செயலாளர்களையும் அங்கீ–கரித்த நல்ல மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.
இந்த இயக்கம் தான் ஜனநாயகத்தின் முகவரி யாக உள்ளது. தமிழக மக்களின் உரிமை, தமிழக மக்களின் வளர்ச்சி, தமிழக மக்கள் எல்லாம் வளமும் பெற வேண்டும். இங்கு இல்லாமல் இல்லை என்ற நிலை உரு–வாக வேண்டும். அமைதி, வளம், வளர்ச்சி என்று இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் சேவை–யாற்ற வேண்டும் என்ற அம்மாவின் தெய்வ வாக்கை கொண்டு மக்கள் பணியாற் றியவர் எடப்பாடியார்.
இயக்கத்திற்காக எடப் பாடியார் ஊன், உறக்கம் இல்லாமல் உழைத்து வருகி–றார். ஆனால் தொடர்ந்து சிலர் அவதூறு பழிச்சொல் கூறி வருகிறார்கள். இந்த இயக்கத்தை எப்படியாவது முடக்கிட வேண்டும் என்று எதிரிகளும், துரோகிகளும் இயக்கத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க வேண் டும் என நினைத்தனர். அவர்கள் கண்ட கனவில் இடி விழுந்து விட்டது.
ஒரு கிளைக் கழகச் செயலாளர் நாட்டின் முதல–மைச்சராக ஆகலாம். ஒரு கிளைக் கழகச் செயலாளர் ஒரு இயக்கத்தின் கழகப் பொதுச் செயலாளராக வரலாம் என்று தன் உழைப் பால் இன்று எடப்பா–டியார் நிரூபித்துள்ளார். நிச்சயம் வருகின்ற தேர்தல்களில் எடப்பாடியார் மகத்தான வெற்றி பெற்று, அம்மாவின் புனித ஆட்சி அமைப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.






