என் மலர்
மதுரை
- இரும்பு கடைக்குள் புகுந்து ரூ. 2 லட்சம்- தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்டது.
- கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் சீதாராமன் என்ற மணி கண்டன் (வயது 35). இவர் திருமங்கலம்- மதுரை மெயின் ரோட்டில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல் கடை யை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் கொள்ளையடிக் கும் நோக்கத்தில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். கூட்டாளிகள் வெளியில் நின்று கண்காணிக்க ஒருவர் மட்டும் கடையின் மேல்புற ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தார்.
பின்னர் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், 2 தங்க நாணயங் களை திருடிக் கொண்டு கூட்டாளிகளுடன் தப்பி னார்.
மறு நாள் கடையை திறக்க வந்த சீதாராமன் பணம், தங்க நாணயங்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் திருமங் கலம் நகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் கடைக்கு வந்து விசாரணை நடத்தி னர். அப்போது கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப் பட்டது. அதில் கடைக்குள் மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் காட்சி பதிவாகி யுள்ளது. அதனை வைத்து கொள்ளையர்களை பிடிக் கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
- திருமங்கலம் நகர் போலீசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவரது மகன் யஷ்வந்த் குமார் (வயது 19). இவர் பெருங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவருடன் விரகனூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சூரிய பிரகாஷ் (19), திருப்பு வனத்தைச் சேர்ந்த முருகன் மகன் செந்தூர் பாவா (19) ஆகியோர் படித்து வருகின்றனர்.
நேற்று கல்லூரி முடிந்து யஷ்வந்த் குமார் தனது நண்பர்கள் சூரிய பிரகாஷ், செந்தூர் பாபா ஆகியோரு டன் ஒரே மோட்டார் சைக்கிளில் திருமங்கலத்தை அடுத்துள்ள ஆலம்பட்டிக்கு மற்றொரு நண்பரை பார்க்க சென்றனர். மாலையில் 3 பேரும் அங்கிருந்து புறப் பட்டனர்.
திருமங்கலம் அருகே உள்ள ராஜபாளையம் பிரிவு விலக்கு பகுதியில் வந்தபோது அங்குள்ள வளைவில் உள்ள பாலத்தை கடக்க முயன்றனர்.
அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப் பாட்டை இழந்து தாறு மாறாக ஓடி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்ட னர்.
இதில் படுகாயம் அடைந் தவர்களை அங்கிருந்து அவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த் தனர். பின்னர் மேல் சிகிச் சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி யஷ்வந்த் குமார் பரிதாபமாக இறந்தார். சூரிய பிரகாஷ், செந்தூர் பாவா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிதிலமடைந்த கட்டிடங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தினார்
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரு மங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல் கின்றனர். இங்குள்ள பழமையான கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்படு கின்றன. நேற்று கான்கிரீட் சுவரின் பூச்சு இடிந்து விழுந்ததில் வார்டில் தங்கி இருந்த நோயாளிகள் பீதி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான உதய குமார் ஆஸ்பத்திரியில் நேரடி ஆய்வு மேற் கொண் டார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-
திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நாள்தோ றும் ஆயிரத்துக்கும் மேற் பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஆனால் மருத்துவமனையில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந் துள்ளது. 75 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மருத்துவமனையை சீரமைக்க அரசு போர்க்கால அடிப் படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. இது தொடர்பாக அரசுக்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை.
ரெயில்வே கேட் மூடப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி யை காப்பாற்ற முடியாமல் போனது துரதிஷ்டவசமானது. எனவே அந்த பகுதி யில் மேம்பாலத்தை உடனடி யாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- முதற்கட்ட விசாரணையில் தூக்கமின்மை பிரச்சினைக்கு தரப்படும் மாத்திரையை போதைக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
மதுரை:
மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு பாலிடெக்னிக் பாலம் கீழ்ப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் அவ்வப்போது அரங்கேறி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
அதேபோல் மர்ம கும்பலை சேர்ந்த சிலர் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதை மாத்திரைகளை விற்று வருவதாகவும் ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த குமரேசன் (வயது 26), ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த வீரமனோகர் (37) ஆகியோர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதை கண்டுபிடித்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 1,890 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தூக்கமின்மை பிரச்சினைக்கு தரப்படும் மாத்திரையை போதைக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
மருத்துவர்களின் பரிந்துரை மருந்து சீட்டு இல்லாமல் இவ்வகை மாத்திரை மருந்து கடைகளில் வழங்கப்படுவதில்லை என்பதால் 'இந்தியா மார்ட்' எனும் ஆன்லைன் வர்த்தக இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு மாத்திரைகளை ஆர்டர் செய்து ஆன்லைனில் பெற்றுள்ளனர்.
இதற்கான தொகையினை சம்பந்தப்பட்ட டீலருக்கு கூகுள்பே மூலம் அனுப்பி உள்ளனர். இதனை தொடர்ந்து வாங்கிய மாத்திரைகளை 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து இருவரிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து வருபவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரேசன்கடைகளில் தக்காளியை விற்பதால் மக்களுக்கு பயன் இல்லை.
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.
மதுரை
அ.தி.மு.க. பொதுச்செய லாளராக எடப்பாடி பழனி சாமி தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்தது. இதையடுத்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலை மையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்
பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை வலிமையான இயக்கமாக நடத்தி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால் இதுவரை மக்களுக்கு பயன்படக்கூடிய எந்த திட்டத்தையும் அவர்கள் நிறைவேற்ற வில்லை. மதுரை மக்களுக்கு எந்த அடிப்படை திட்டங் களையும் கொண்டு வராமல் கலைஞர் பெயரிலான நூலகத்தை மட்டுமே தந்துள்ளனர்.
மக்களுக்கு போதிய சாலை வசதி இல்லை. அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. விலைவாசி தற்போது அதி கரித்துவிட்டது. காய்கறிகள் மளிகை பொருட்கள் தினந்தோறும் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரேஷன் கடைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்க போவதாக கூறுகிறார்கள். ரேஷன் கடையில் தக்காளியை விற்பதால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை .
தக்காளி அழுகும் தன்மை கொண்டதால் விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படு வார்கள்.
மேலும் நகரும் கடைகள் மூலம் காய்கறிகள், தக்காளியை விற்பனை செய்தால் மட்டுமே மக்கள் பயனடைவார்கள். இதனை அரசு கவனத்தில் கொண்டு நகரும் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும் .
அமைச்சர் செந்தில் பாலாஜியை சுதந்திர போராட்ட தியாகி போல தி.மு.க.வினர் போற்று கிறார்கள். ஊழல் செய்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும். ஆனால் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தேவை யில்லாமல் மத்திய அரசை விமர்சிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்
- திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மதுரை
மதுரை சிம்மக்கல் ஒர்க் ஷாப் ரோடு பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, மதுரை 2-வது மாஜிஸ் திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த–தாவது:-
நான் எனது கணவருடன் சேர்ந்து இதே பகுதியில் டயர் வியாபாரம் செய்து வருகிறேன். சட்டப்படிப்பும் படித்து வருகிறேன். எனது கணவர் சரவணன் மாற்றுத் திறனாளி. அவரின் சகோ–தரர் மது பாண்டியன் எங்கள் கடையை சட்ட–விரோதமாக அபகரிக்கும் நோக்கத்தில் பல்வேறு தொந்தரவுகளை அளித்து வருகிறார்.
அவர் கொடுத்த பொய்யான புகார் குறித்து முறை–யாக விசாரிக்காமல் என்னை போலீசார் கைது செய்தனர். உரிய விசாரணை நடத்தாமல் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை பின் பற்றாமலும் என்னை கைது செய்ததற்காக போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக் டர்கள் என் மீது மற்றொரு பொய்யான புகார் பெற்று வழக்கு பதிவு செய்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கினர்.
எனவே திலகர் திடல் போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரே–சன், சொர்ண ராஜா ஆகி–யோர் மீது உரிய நடவ–டிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி–யிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி கல்யாண மாரிமுத்து விசா–ரித்தார். முடிவில், மனுதா–ரரை கைது செய்ததில் உரிய வழிகாட்டுதல்களை பின் பற்றவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக் டர்கள் மீதான புகார் குறித்து திலகர் திடல் உதவி போலீஸ் கமிஷனர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கையை குறித்து ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தர–விட்டார்.
- தனியார் பள்ளி பஸ் மோதி 1½ குழந்தை நசுங்கி பலியானது.
- தனியார் பள்ளி பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரையை அடுத்துள்ள பெருங்குடியை சேர்ந்தவர் உத்தமநாதன். இவர் அதே பகுதியில் விறகு கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் வீரசக்தி என்ற 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் ஆதார் கார்டு விண்ணப்பிப்பது தொடர்பாக உத்தமநாதன், தனது மனைவி, குழந்தை களுடன் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு நேற்று காலை எலக்டரிக் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு ஆதார் பணிகளை முடித்துவிட்டு மாைலயில் 3 பேரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.
வில்லாபுரம் தியேட்டர் அருகே வந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த தனியார் பள்ளி பஸ் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் உரசி சென்றது.
இதில் மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து கீழே சரிந்தது. அதில் பயணம் செய்த உத்தமநாதன் தனது மனைவி, குழந்தை யுடன் ரோட்டில் விழுந்தார். அப்போது பஸ்சின் பின்பக்க டயர் குழந்தை வீரசக்தி மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி பச்சிளங் குழந்தை பரிதாபமாக இறந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து பெற்றோர் துடித்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்துகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக தனியார் பள்ளி பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஐ.டி.ஐ.யில் நேரடி மாணவர் சேர்க்கை நாளை நடக்கிறது.
- இத்தகவலை செக்கானூரணி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்டம் செக்கானூரணி அரசினர் தொழிற்பயற்சி நிலையத்தில் பிட்டர், டர்னர், எலக்ட்ரீ–சியன், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப் பபடுத்துதல் போன்ற இரண்டு வருட தொழிற் பிரிவுகளுக்கும், வெல்டர், உலோகத்தகடு வேலையாள் போன்ற ஓராண்டு தொழிற் பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட தொழிற்பி–ரிவுகளில் காலியாக உள்ள ஒரு சில இடங்களுக்கு சேர விருப்பம் உள்ள 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை (13.07.2023) முதல் செக்கா–னூரணி அரசு தொழிற்ப–யிற்சி நிலையத்திற்கு நேரடி–யாக வந்து விண்ணப்பித்து பயிற்சியில் சேர்ந்து கொள் ளலாம்.
மேலும், இங்கு சேர்ந்து பயிற்சி பெறுகின்ற மாண–வர்களுக்கு இலவச பேருந்து கட்டண சலுகை, விலை–யில்லா மிதிவண்டி, சீருடை–கள், காலணி, வரைபடக்க–ருவிகள், புத்தகங்கள் வழங் கப்படும்.
மேலும் பயிற்சியா–ளர்க–ளுக்கு மாதம் ரூ.750 உத–வித்தொகை யும், பயிற்சி முடித்த மாணவ ர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடு–களில் 100 சதவீத வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.
கூடுதல் விபரங்க ளுக்கு 04549-287224, 96260 67302, 98409 47460, 95669 03149 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள லாம். இத்த கவலை செக்கானூ ரணி அரசி னர் தொழி ற்ப யிற்சி நிலைய முதல்வர் அசோகன் தெரி–வித்து ள்ளார்.
- குப்பை கொட்டும் நிலையமாக மாறிய வைகை தென்கரை பகுதி உள்ளது.
- கால்நடை கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுகிறது.
மதுரை
தமிழகம் முழுவதும் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அது காற்றில் பறக்கும் உத்தரவாகவே மாறிவிட்டது.
இதனை அதிகாரிகள் ஒருபோதும் பெரிதாக எடுத்துக்கொண்டு கண்டு–கொள்ளாததால் ஆறுகளும், குளங்களும் குப்பை கொட் டும் இடமாக மாறிவிட்டது.
அதிலும் சமீப காலமாக வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை யாருக்கும் தெரி–யாமல் இரவு, பகல் என்று பாராமல் ஆறுகளிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமான சாக்கடைகளில் கலந்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுத்து சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் பல–னில்லை.
இதற்கிடையே கோவில் மாநகரமான மதுரையிலும் இதுபோன்ற கொடுமைகள் ஆங்காங்கே அரங்கேறி வரு–கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநா–தபுரம் ஆகிய 6 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமா–கவும், விவசாய தேவைகளை பூர்த்தி செய்யவும் பயன்ப–டுத்தப்படுகிறது. ஆனால் இந்த ஆற்றில் அதிக அளவிலான கழிவுகள் கொட்டப்பட்டு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குறிப்பாக வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் கால் நடை வளர்ப்போர் ஏராள–மாக வசித்து வருகிறார்கள். அவர்கள் கால்நடைகளுக் கென்று தனியாக தங்களது சொந்த இடத்தில் கொட் டகை அமைத்து பராமரிக் காமல் சாலைகளில் சுற்றித் திரிய விட்டுள்ளனர்.
அவை இரவு, பகல் பாராமல் சாலைகளின் ஆங்காங்கே கிடைக்கும் உணவுகளை உண்டும், படுத்து உறங்கியும் போக்கு–வரத்துக்கு இடையூறு அளித்து வருகிறது. திடீ–ரென்று அந்த கால்நடைகள் மூர்க்கத்தனமாக சாலை–களில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்து–டனேயே அந்த பகுதியை கடந்து செல்கிறார்கள். மேலும் அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது.
இவை அனைத்தையும் மீறி வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் மாடு–களை கட்டி வைத்து பராம–ரிக்கும் கால்நடை வளர்ப் போர் அதன் கழிவுகளை அப்பறப்படுத்தாமல் அங் ேகயே விட்டுச்செல்வ–தும், பல நேரங்களில் வைகை ஆற்றில் கொட்டி விடுவதும் வாடிக்கையாகி விட்டது. பல்வேறு வரலாற்று சிறப் புகளை கொண்ட வைகை ஆறு இன்று குப்பை கழிவு–களை கொட்டும் இடமாக மாறிவருவது பொது–மக் களை வெறுப்படைய செய் துள்ளது.
சித்திரை திருவிழா நடை–பெறும் காலங்களில் மட்டும் வைகை ஆற்றை போற்றி பாதுகாத்தால் போதாது, காலம் முழுக்க அதனை சுத்தமாகவும், சுகாதார–மாகவும் வைத்துக்ெகாள்ள முயற்சிக்க வேண்டும். ஏற்கனவே கால் நடை வளர்ப்போர் தென் கரை பகுதியில் மாடுகளை கட்டி வைக்கக்கூடாது என்றும், மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
ஆனால் அதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் தங்களுடைய செயல்பாடு–களை கால்நடை வளர்ப் போர் தொடர்ந்து வரு–கின்றனர். அதேபோல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளையும் பறிமுதல் செய்து, அதனை வளர்ப்போ–ருக்கு அபராதம் விதிப்பதை–யும் மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்த வேண் டும் என்பதும் ஒட்டுமொத்த மதுரை மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.
- கைதி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
- சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைனை சேர்ந்தவர் செல்வம் (வயது68). இவர் 2023-ம் ஆண்டு குற்ற வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் (தண்டனை கைதி) உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி முனீஸ் திவாகர் மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பசுமலை டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுஜிதா (35). இவர் திருநகரில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பணியில் இருந்த போது திடீரென்று மயங்கி விழுந்தார்.
அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுஜிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவருடைய கணவர் ஆறுமுகம் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதூர் ஆத்திகுளம் வண்டி பாதை ரோட்டை சேர்ந்தவர் சிவசங்கர் (56). இவர் மேல கோபுரம் அருகே வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையை நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது.
இதுகுறித்து திலகர்திடல் போலீஸ் நிலையத்திற்கு மேன்சன் மேலாளர் சேகர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து பார்த்தனர். அப்போது சிவசங்கர் பிணமாக கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோழவந்தானில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- சமூக ஆர்வலர் பிரேமலதா உறுதிமொழி வாசித்தார்.
சோழவந்தான்
சோழவந்தானில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி-சி.பி.எஸ்.இ மாணவர்கள் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். இந்த பேரணி நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் ஜூடி தலைமை தாங்கினார்.
உதவி தலைமை ஆசிரியை அபிராமி, ஒருங்கிணைப்பாளர்கள் சுபா, ரெய்னாபேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சோழவந்தான் அரசுஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் தீபா விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் பிரேமலதா உறுதிமொழி வாசித்தார். அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்தப் பேரணி சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து வட்டப்பிள்ளையார் கோவில், ஜெனகை மாரியம்மன், தபால் அலுவலகம் வழியாக ஊர்வலமாக வந்து தொடங்கிய இடத்தில் பேரணி வந்து சேர்ந்தனர். இதில் ஆசிரியர், ஆசிரியைகள் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர். பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் விவிதா நன்றி கூறினார்.
- மேலூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டிகள், தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட் பட்ட பகுதியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேலூர் மூவேந்தர் பண் பாட்டு கழகத்தில் நடைபெற்றது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பொது மக்களிடம் கோரிக் கை மனுக்களை பெற்றார்.
இந்த முகாமில் 1-வது வார்டு முதல் 27-வது வார்டு வரை நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மருத்துவ உதவி, சாலை ரோடு வசதி, குடிநீர் வசதி, புதிய ரேசன்கடை, இலவச வீடு, கல்வி லோன், போன்ற உதவிகள் கேட்டு 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கூறிய தாவது:-
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேலூர் தும்பைப் பட்டியில் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கப் பட்டு, கடந்த 14 மாதங்களில் மாவட்டத்தில் உள்ள மாநக ராட்சி, 2 பேரூராட்சி மற்றும் 123 ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு நடைபெற்று. இறுதியாக மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட மக்களின் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களை சந்தித்து அவர்களின் குறை கள் குறித்து மனுக்கள் பெற்று, 20 துறை சார்ந்த அதிகாரிகள் உதவியுடன் பல ஆயிரம் மனுக்களுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டு வரு கிறது என்று தெரிவித்தார். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அடித்தட்டு மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உருவாக்குகின்ற திட்டமாக உள்ளது.
இதுவரை மக்கள் சந்திப்பு முகாம் மூலம் ஒரு லட்சம் மக்களை சந்தித்துள்ளேன் அதில் பெரும்பான்மையாக உதவித்தொகை கேட்டு மனுக்கள் வரப்படுகிறது. 40 வயதுக்கு உட்பட்ட விதவை மற்றும் ஆதரவற்ற பெண் களுக்கு இத்திட்டம் பெரும் பயன் உள்ளதாக அமைய உள்ளது. இத்திட்டம் பற்றி நூறு பேர் நூறு விதமாக விமர்சனம் செய்யலாம் ஆனால் இதைவிட மக் களுக்கு பயன் அளிக்கிற திட்டம் இருக்க போவதில்லை. அதனால் இது மிகுந்த வரவேற்புக்கு உகந்த திட்டம் என்று தெரிவித்தார்.
மேலும், ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 11 வருடங்களாக ரூபாய் 300 மட்டுமே மானிய மாக கொடுத்து வருகிறது. ஆனால் தமிழக அரசு அவர் களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்குகிறது மாற்றுத்திற னாளிகளுக்கு மிக அதிக மான நிதி ஒதுக்கிய அரசாக தமிழக அரசு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், மதுரை மண்டல நிர்வாக இயக்குனர் சரவ ணன், மேலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், மேலூர் தாசில்தார் செந்தா மரை, நகராட்சி பொறியாளர் பட்டுராஜன், மதுரை கிழக்கு மின் செயற்பொறியாளர் ராஜா காந்தி, மேலூர் தாலுகா செயலாளர் கண் ணன், மேலூர் தாலுகா குழு உறுப்பினர்கள் மணவாளன், ராஜாமணி, அடக்கி வீரணன், மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் 10 கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து புத்தகம் மற்றும் 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டிகள், தையல் இயந்திரம் ஆகியவற்றை வழங்கினார்.






