என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.பி. பாராட்டு"

    • மேலூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டிகள், தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட் பட்ட பகுதியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேலூர் மூவேந்தர் பண் பாட்டு கழகத்தில் நடைபெற்றது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பொது மக்களிடம் கோரிக் கை மனுக்களை பெற்றார்.

    இந்த முகாமில் 1-வது வார்டு முதல் 27-வது வார்டு வரை நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மருத்துவ உதவி, சாலை ரோடு வசதி, குடிநீர் வசதி, புதிய ரேசன்கடை, இலவச வீடு, கல்வி லோன், போன்ற உதவிகள் கேட்டு 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

    இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கூறிய தாவது:-

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேலூர் தும்பைப் பட்டியில் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கப் பட்டு, கடந்த 14 மாதங்களில் மாவட்டத்தில் உள்ள மாநக ராட்சி, 2 பேரூராட்சி மற்றும் 123 ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு நடைபெற்று. இறுதியாக மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட மக்களின் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

    இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களை சந்தித்து அவர்களின் குறை கள் குறித்து மனுக்கள் பெற்று, 20 துறை சார்ந்த அதிகாரிகள் உதவியுடன் பல ஆயிரம் மனுக்களுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டு வரு கிறது என்று தெரிவித்தார். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அடித்தட்டு மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உருவாக்குகின்ற திட்டமாக உள்ளது.

    இதுவரை மக்கள் சந்திப்பு முகாம் மூலம் ஒரு லட்சம் மக்களை சந்தித்துள்ளேன் அதில் பெரும்பான்மையாக உதவித்தொகை கேட்டு மனுக்கள் வரப்படுகிறது. 40 வயதுக்கு உட்பட்ட விதவை மற்றும் ஆதரவற்ற பெண் களுக்கு இத்திட்டம் பெரும் பயன் உள்ளதாக அமைய உள்ளது. இத்திட்டம் பற்றி நூறு பேர் நூறு விதமாக விமர்சனம் செய்யலாம் ஆனால் இதைவிட மக் களுக்கு பயன் அளிக்கிற திட்டம் இருக்க போவதில்லை. அதனால் இது மிகுந்த வரவேற்புக்கு உகந்த திட்டம் என்று தெரிவித்தார்.

    மேலும், ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 11 வருடங்களாக ரூபாய் 300 மட்டுமே மானிய மாக கொடுத்து வருகிறது. ஆனால் தமிழக அரசு அவர் களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்குகிறது மாற்றுத்திற னாளிகளுக்கு மிக அதிக மான நிதி ஒதுக்கிய அரசாக தமிழக அரசு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், மதுரை மண்டல நிர்வாக இயக்குனர் சரவ ணன், மேலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், மேலூர் தாசில்தார் செந்தா மரை, நகராட்சி பொறியாளர் பட்டுராஜன், மதுரை கிழக்கு மின் செயற்பொறியாளர் ராஜா காந்தி, மேலூர் தாலுகா செயலாளர் கண் ணன், மேலூர் தாலுகா குழு உறுப்பினர்கள் மணவாளன், ராஜாமணி, அடக்கி வீரணன், மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் 10 கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து புத்தகம் மற்றும் 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டிகள், தையல் இயந்திரம் ஆகியவற்றை வழங்கினார்.

    ×