இரும்பு கடைக்குள் புகுந்து ரூ. 2 லட்சம் கொள்ளை

இரும்பு கடைக்குள் புகுந்து ரூ. 2 லட்சம்- தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இரும்பு கடைக்குள் புகுந்து ரூ. 2 லட்சம் கொள்ளை
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் சீதாராமன் என்ற மணி கண்டன் (வயது 35). இவர் திருமங்கலம்- மதுரை மெயின் ரோட்டில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல் கடை யை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் கொள்ளையடிக் கும் நோக்கத்தில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். கூட்டாளிகள் வெளியில் நின்று கண்காணிக்க ஒருவர் மட்டும் கடையின் மேல்புற ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தார்.

பின்னர் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், 2 தங்க நாணயங் களை திருடிக் கொண்டு கூட்டாளிகளுடன் தப்பி னார்.

மறு நாள் கடையை திறக்க வந்த சீதாராமன் பணம், தங்க நாணயங்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் திருமங் கலம் நகர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் கடைக்கு வந்து விசாரணை நடத்தி னர். அப்போது கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப் பட்டது. அதில் கடைக்குள் மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் காட்சி பதிவாகி யுள்ளது. அதனை வைத்து கொள்ளையர்களை பிடிக் கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com