என் மலர்
மதுரை
- அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- முடிவில் பேரூர்பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர்அ.தி.மு.க. சார்பாக பொதுச் செயலாளராக தேர்வு செய்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, யூனி யன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் லட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சூர்யா, பிரியதர்ஷினி, வெங்க டேஸ்வரி, பஞ்சவர்ணம், கீதா சரவ ணன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் துணைச்செயலாளர் சந்தன துரை வரவேற்றார்.
இந்த விழாவில் மாவட்ட செயலாளர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பொது மக்களுக்கும், நிர்வாகி களுக்கும் இனிப்பு வழங்கினார். இதில் எம்.ஜி.ஆர். மன்ற பேரூர் செயலாளர் முத்து கண்ணன், வார்டு செயலாளர்கள் கோட்டையன், திருப்பதி, பாரத் சங்கு, ரங்கராஜ், வில்லி, பிரேம், பாண்டி, அழகர், ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவர் பொன்ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பேரூர்பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.
- வீட்டின் பூட்டை உடைத்து தங்கம்- வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
- உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மலைப்பட்டியைச்சேர்ந்த வர் அன்பு (வயது 49). இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தோசைகடை நடத்தி வருகிறார். இதனால் அன்பு குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார்.
இதன் காரணமாக மலைப்பட்டியில் உள்ள இவரது வீடு பெரும்பாலான நேரங்களில்பூட்டியே கிடக்கும். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு இருந்த பீரோக்களை உடைத்து திறந்து தங்க நகைகள், வெள்ளி பொருட் களையும், கண்காணிப்பு கேமராக்களின பதிவுகள் கொண்ட ஹார்ட் டிஸ்க்கை யும் திருடிச் சென்றனர்.
இன்று காலை வீடு திறக்கப்பட்டு கொள்ளை யடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல்கட்ட விசாரணையில் 18 பவுன் நகை, ஒரு கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருடு போயிக்கலாம் என தெரியவந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் வந்த பின்பு தான் திருடு போன பொருட்களின் உண்மையான மதிப்பு தெரியவரும்.
இந்த கொள்ைள சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும்.
- தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மதுரை
கலைஞர் நூற்றாண்டு நூலகத்திறப்பு விழாவிற்கு நாளை (15-ந்தேதி) மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைகளுடன் மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் சார்பில் எழுச்சிமிக்க வரவேற்பு அளிக்கப்ப டுகிறது.
இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மு.மணி மாறன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
செம்மொழி நாயகர், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நூலகம் மதுரையில் உலகத்தரம் வாய்ந்த அளவில் ரூ.216 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க நூலகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைத்து பேசுகிறார். இதற்காக நாளை காலை விமானம் மூலம் மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைகளுடன் மதுரை விமான நிலையம் முதல் விழா நடைபெறும் இடம் வரை பல்லாயிரக் கணக்கான தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி, எழுச்சிமிகுதியுடன் வரவேற்க வேண்டும்.
இந்த மாபெரும் வரவேற்பு நிகழ்வில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட கழகத்தினர், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பி னர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக்கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பா ளர் கள், துணை அமைப்பாளர் கள், கழக முன்னோடிகள், உள்ளா ட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், கழகத்தினர், கழக உடன்பிறப்புகள் என பல்லாயி ரக்க ணக்கானோர் பங்கேற்க வேண்டும்.
இந்த வரவேற்பு நிகழ்வில் பொதுமக்களுக் கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறுமின்றி தி.மு.க.வினர் மிக உற்சாக மாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, சென்னையில் வசித்த எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர்.
- ஜாமின் நிபந்தனையை மாற்றி அமைக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்தார்.
மதுரை:
தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா. இவர் கடந்த 7-ந்தேதி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன், மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரை வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் தூய்மை பணியாளர் மூச்சுத்திணறி இறந்ததால் ஒருவிதமான பதற்றம் நிலவுவதாக கருத்து தெரிவித்து இருந்தார்.
மேலும் இதனை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறார் எனவும் கூறியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, சென்னையில் வசித்த எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர். அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவருக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியது. தற்போது இந்த ஜாமின் நிபந்தனையை மாற்றி அமைக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
எனது குடும்பத்தினர் சென்னையில் உள்ளனர். வாய் பேசமுடியாத தாய், 100 வயதான தாத்தா உள்ளனர். அவர்களை நான் தான் கவனிக்க வேண்டும். எனவே, சென்னையிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் வகையில் ஜாமின் நிபந்தனையை மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், நிபந்தனை ஜாமினில் உள்ள எஸ்.ஜி.சூர்யா சென்னை சைபர் கிரைம் போலீசில் நாள்தோறும் காலை கையெழுத்து இட அனுமதி வழங்கி நீதிபதி செய்து உத்தரவிட்டார்.
- 2002-ம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக டி.எம்.எஸ். நியமிக்கப்பட்டார்.
- 24 வயதில் திரையுலகில் பாடத்துவங்கிய இவர், தன்னுடைய 88-வது வயது வரை பாடி வந்தார்.
மதுரை:
தமிழ் சினிமா வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை அவர் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார். டி.எம்.எஸ். என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜன் மதுரையில் 1922-ம் ஆண்டு, மார்ச் 24-ந்தேதி பிறந்தார்.
அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசை பயிற்சி பெற்ற டி.எம்.எஸ், மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார். கச்சேரிகளில் தனது தனித்துவமான குரல் வளத்தால் மக்களைக் கவர்ந்து வந்த டி.எம்.சவுந்தரராஜனுக்கு, 1950 ஆம் ஆண்டு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
ராதே என்னை விட்டுப் போகாதடி, என்று கிருஷ்ணவிஜயம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல், டி.எம்.சவுந்தரராஜனின் முதல் திரையுலகப் பாடலாக அமைந்தது. அதைத்தொடர்ந்து மந்திர குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற பல படங்களில் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
டி.எம்.எஸ்.ன் குரல் வளத்துடன், அவரது உச்சரிப்பும் மக்களிடையே பிரபலமடைந்தது. பாடல் பாடுவதோடு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். டி.எம்.சவுந்தரராஜன். 1960-ம் ஆண்டுகளில் வெளியான பட்டினத்தார், அருணகிரி நாதர் போன்ற படங்களில் அவர் நடித்திருந்தார். இதில் மிக குறிப்பாக அருணகிரி நாதர் திரைப்படத்தில் இவர் பாடிய, முத்தைத்தரு பக்தித் திருநகை பாடல் இன்றைய தலைமுறையினர் வரை சிறந்த பாடலாக உச்சரிக்கப்படுகிறது. டி.எம். சவுந்தரராஜனின் மற்றொரு தனி அடையாளமாகக் கூறப்படுவது, ஒவ்வொரு கதாநாயகர்களுக்கும் ஏற்ப தனது குரலை மாற்றி பாடுவதுதான்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் தொடங்கி 1970-ம் ஆண்டுகளில் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ஒருதலை ராகம் திரைப்படத்தின் நாயகன் வரை, பல்வேறு தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார். பாசமலர் படத்தில் மலர்ந்தும் மலராத பாடல், பாலும் பழமும் படத்தில் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், திருவிளையாடல் படத்தில் பாட்டும் நானே பாவமும் நானே, படகோட்டி படத்தின் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஆகிய பாடல்கள் திரையுலகில் முத்திரை பதித்தது.
11 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடலை பாடியிருக்கும் டி.எம்.எஸ்., ஆயிரத்திற்கும் மேலான பக்தி பாடல்களுக்கு இசையமைத்து பாடியுள்ளார். இவர் பாடிய பக்தி பாடல்கள் இன்று வரை தமிழ்நாட்டின் அனைத்து கோவில்களிலும் திருவிழாக்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ் கடவுளாக அறியப்படும் முருகனுக்கு இவர் பாடிய பாடல்கள் மிகப் பிரபலமானவை. 1955 ஆம் ஆண்டிலிருந்து 80களின் காலகட்டம் வரை டி.எம்.சவுந்தரராஜன் புகழின் உச்சியில் இருந்தார்.
சுமார் 65 ஆண்டுகள் அவர் திரையுலகில் தன்னுடைய இசை பயணத்தைத் தொடர்ந்து வந்தார். தன்னுடைய தனித்துவமான இசைப் பயணத்தில், இவர் செய்த சாதனைக்காக பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டன. இதுதவிர கலா ரத்னம், கான ரத்னம், அருள் இசை சித்தர், நவரச பவ நளின கான வர்ஷினி, ஞானாமிர்த வர்ஷினி, சாதனை சக்கரவர்த்தி, பாரதிய இசை மேகம், கான குரலோன் போன்ற பட்டங்களும் ரசிகர்களால் சூட்டப்பட்டது.
2002-ம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக டி.எம்.எஸ். நியமிக்கப்பட்டார். 24 வயதில் திரையுலகில் பாடத்துவங்கிய இவர், தன்னுடைய 88-வது வயது வரை பாடி வந்தார். இன்றைய தலைமுறையினரின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடலில், மற்ற இளம் பாடகர்களுடன் இணைந்து டி.எம்.எஸ். பாடியிருந்தார். அதுவே அவரது கடைசி பாடலாகும்.
2013-ம் ஆண்டு, தன்னுடைய 91-வது வயதில் சென்னையில் இருக்கும் அவரது வீட்டில், வயது மூப்பு காரணமாக டி.எம்.சவுந்தரராஜன் காலமானார். அவரது நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தவெளி வெளிவட்ட சாலை பகுதிக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன், புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்ற வகையில் அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி மதுரையில் முழு திருவுருவச்சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மதுரை தெற்கு வட்டம் முனிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம் (பழைய) அலுவலகக் கட்டிட வளாகத்தில் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் முழு திருவுருவச் சிலை அமைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.50 லட்சம் செலவில் சிலை நிறுவுவதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருவுருவச் சிலை தயார் நிலையில் உள்ளது.
மதுரையின் மற்றொரு அடையாளமாக திகழப்போகும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை திறந்து வைப்பதற்காக நாளை (15-ந்தேதி) மதுரை வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முனிச்சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள டி.எம்.சவுந்தரராஜனின் சிலையையும் திறந்துவைக்கிறார்.
- இலவச வேட்டி, சேலை திருடு போன சம்பவம் குறித்து அவர் மீது மட்டுமே பொறுப்பு சுமத்த முடியாது.
- இலவச வேட்டி சேலைகளுக்கான பொறுப்பு அதிகாரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆவார்.
மதுரை:
காரைக்குடியை சேர்ந்த அருள்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சிவகங்கை மாவட்டம் கழனிவாசல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக நான் பணிபுரிந்து வந்தேன். என்னை தூதை என்ற கிராமத்திற்கு பணியிட மாற்றம் செய்தனர். இந்த நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
அதன் பேரில் எனது பணியிட மாற்றத்துக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதனால் என் மீது உயர் அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி கொண்டு இருந்தனர். பல்வேறு வகையில் என் மீது பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வந்தனர்.
குறிப்பாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளை மக்களுக்கு வழங்காமல் வீட்டில் பதுக்கி வைத்ததாகவும், அதிகாரிகள் சோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்ததாகவும் என் மீது 2017-ம் ஆண்டு பொய்யான வழக்கு பதியப்பட்டது.
இதனை தொடர்ந்து என்னை பணி இடை நீக்கம் செய்தனர். இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இந்த வழக்கில் என் மீது பதியப்பட்ட வழக்கு மற்றும் குற்றப்பத்திரிக் கையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
கிராம நிர்வாக அலுவலரான மனுதாரர், இலவச வேட்டி, சேலைகளை திருடி பதுக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் மனுதாரர் தரப்பு வாதம் கவனிக்கத்தக்கது. அதாவது, மனுதாரர் கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே. இலவச வேட்டி, சேலை திருடு போன சம்பவம் குறித்து அவர் மீது மட்டுமே பொறுப்பு சுமத்த முடியாது.
இலவச வேட்டி சேலைகளுக்கான பொறுப்பு அதிகாரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆவார். எனவே அரசின் இலவச வேட்டி, சேலைகளை மோசடி செய்ததாக மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
- மகளிர் உரிமைத் தொகை நிபந்தனை என்பது அரசாங்கத்தின் முடிவு.
- குவாரிகளில் கனிமவளம் கொள்ளையடிப்பதை தடுப்போம்.
மதுரை:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகத்தின் நிர்வாகியுமான சௌமியா அன்புமணி ராமதாஸ், மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பசுமைத்தாயகம் நாளான ஜூலை 25-ந்தேதி 2 லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்திருக்க வேண்டும் என்பது பசுமைத்தாயகம் நிறுவன தலைவரின் விருப்பம். அதற்கிணங்க 2 லட்சம் மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறோம். அதன் ஒரு நிகழ்ச்சியாக இன்று மதுரை திருமங்கலத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
அதைத்தொடர்ந்து காலநிலை, அவசரநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். அதை எப்படி ஆவணம் செய்வது, பின்னர் அதை எப்படி ஐக்கிய நாடுகள் அவையில் சமர்ப்பிப்பது போன்ற விஷயங்களை பேசவிருக்கிறோம்.
மகளிர் உரிமைத் தொகை நிபந்தனை என்பது அரசாங்கத்தின் முடிவு. நிர்வாக காரணங்களால் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதை சட்டரீதியாக நாம் பின்பற்ற வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். பா.ம.க. தலைவரும் தேர்தல் வாக்குறுதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதனை செவ்வனே செயல்படுத்த வேண்டும்.
மதுவிலக்குக்கு எதிரான கட்சி பா.ம.க., பசுமைத் தாயகம் என்றாலே நாங்கள் சமுதாய வளர்ச்சியை முக்கியமாக பார்க்கிறோம். ஏழை, எளியவர்களுக்கு எதிரான மது விற்பனை எதுவாக இருந்தாலும் அதை கண்டிப்பாக வரவேற்கப்போவதில்லை.
நெடுஞ்சாலைத்துறை வேலையின் போது மரங்கள் வெட்டப்படுவது தொடர்பாக சென்னையில் ரெயில் நிலையத்தில் மரத்தை வெட்டும்போது பெரிய போராட்டம் நடத்தி இருக்கிறோம். அதற்கு அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள். ஒரு மரம் வெட்டும்போது அதற்கு இணையாக 10, 20 அல்லது 100 மடங்கள் கூட நடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஒரு மரத்தை எடுத்தாலும் பசுமைத் தாயகம் போராட்டம் செய்யும். செங்கல்பட்டில் ஒரு இடத்தில் பெரிய ஆலமரத்தை எடுத்ததற்கு, அதை வேறு ஒரு இடத்தில் நடப்பட்டு அதற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறோம்.
குவாரிகளில் கனிமவளம் கொள்ளையடிப்பதை தடுப்போம். நெய்வேலி, கடலூரில் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி இருக்கிறோம். காவேரி காப்போம், வைகை காப்போம் என கனிம வளங்கள் மற்றும் நீர் வளங்களை பாதுகாக்க எல்லா முயற்சிகளையும் பசுமைத் தாயகம் முன்னெடுத்து நடத்தி வருகிறது. எங்களுடைய தேர்தல் அறிக்கையை படித்தாலே தெரியும் எதுவாக இருந்தாலும் இதை நாங்கள் குறிப்பிட்டு தெரிவித்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 4 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலக திறப்பு விழா மதுரையில் நாளை மறுநாள் கோலாகலமாக நடக்கிறது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா–லின் திறந்து வைக்கிறார்.
மதுரை
தமிழக அரசு சார்பில் மதுரையில் பிரமாண்டமாக 'கலைஞர் நூற் றாண்டு நினைவு நூலகம்' கட்டப்பட் டுள்ளது. இந்த நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்த–கங்களுடன் உள்ள கலைஞர் நூற் றாண்டு நூலகம் மதுரையின் மற்று–மொரு அடையாளமாக திகழப்போ–கிறது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மதுரையில் கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் பிரமாண்ட நூலகம் மதுரை–யில் அமைக்கப்படும் என்று அறி–விக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்த–வுடன் இதற்கான அரசாணை பள்ளிக் கல்வித்துறை மூலம் கடந்த ஆண்டு ஜூலை 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்காக மதுரை புது நத்தம் சாலை–யில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூல–கம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.
சென்னை கோட்டூர்புரத்தில் 2010 ஆம் ஆண்டு பிரமாண்டமான அண்ணா நினைவு நூற்றாண்டு நூல–கம், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது. அதைப் போலவே தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேசத் தரத்தில் நூலகம் மதுரையின் மற் றொரு அடையாளமாக கலைஞர் நூற் றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.
இதற்காக ஆரம்பத்தில் 70 கோடிக்குத் திட்டமிடப்பட்டு பின்பு 99 கோடியாக உயர்த்தப்பட்டு இறுதி–யாக தற்போது 134 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. அனைத்து தரப்பி–னருக்கும் பயனளிக்கும் வகையில் 4 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன.
குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இளம் பெண்கள் என பலரும் இந்த நூல–கத்தின் மூலம் பயன்பெறலாம். நூல–கம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதியு–டன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள் ளது நூலகம். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.
முதல் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் முன்னாள் முதல்வர் கரு–ணாநிதி எழுதிய நூல்கள், குழந்தை–கள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளுக்கான நூலகப் பிரிவும் உள்ளது. இரண்டாம் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் தமிழ் நூல்கள் பிரிவும் உள்ளது. மூன்றாம் தளத்தில் 2,810 சதுர அடி பரப்பில் ஆங்கில நூல்கள் பிரிவும், ஆராய்ச்சிக்கட்டுரைகளும் நான்காம் தளத்தில் 1,990 சதுர அடி பரப்பில் அமரும் வசதியுடன்கூடிய ஆங்கில நூல் பிரிவும், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் வைக்கப் பட்டுள்ளன.
ஐந்தாம் தளத்தில் 1,990 சதுர அடியில் மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல் பிரிவும், ஆறாம் தளத்தில் 1,990 சதுர அடியில் கூட்ட அரங்கு, நூலகத்துக்கான ஸ்டூடியோ, மின்னணு உருவாக்கப் பிரிவு, நுண்ப–டச்சுருள், நுண்பட நூலக நிர்வாகப் பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு எனப் பல பிரிவுகள், நிர்வாக அலுவ–லகம் உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
தி.மு.க. முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரு–மான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3-ந்தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் நாளை மறுநாள் (15-ந்தேதி) மாலை 5 மணிக்கு தொடங்கும் விழாவில் கலை–ஞர் நூற்றாண்டு நினைவு நூல–கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா–லின் திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என பல்லாயிரக்க ணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழா தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான கே.என்.நேரு தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 மாலையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எச்.சி.எல். குழும நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல் குழுமத் தலைவர் ரோஷினி நாடார் ஆகியோர் பங்கேற் கிறார்கள்.
அறிவுத் திருவிழாவாக இந்தத் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகமானது படிக்கும் பழக்கத்தினை மேம்படுத்தி வளர்ப்ப–தற்கும், நேரடி நூல் வாசிப்பு மட்டு–மின்றி, பல்வேறு தொழில்நுட்பங்க–ளின் வாயிலாகக் கற்று உலகத்தரத் திற்கேற்ப தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களை–யும், இளைய தலை–முறையினரையும் உயர்ந்து நிற்கச் செய்யவும் துணை நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது.
- வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது
மதுரை
அம்பர் கிரீஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை வைத்திருந்ததாக ஸ்ரீவில்லி புத்தூர் பகுதியை சேர்ந்த தர்மராஜ், வன துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறுகையில், இது போன்ற வழக்குகளில் கைதான வர்கள் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளதால், மனுதா ரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, அரிய உயிரினமான திமிங்கலத்தை வேட்டை யாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது என்றார்.
மேலும் அதே நேரத்தில் திமிங்கலம் வாய் வழியாக உமிழும் அம்பர் கிரீஸ் என்ற பொருளை ஒருவர் வைத்திருப்பது சட்டபடி குற்றமாகுமா? என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்துஅரசு தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- முதல்வர் வரவேற்பில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள வேண்டும்.
- மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்டச் செயலாளர் மணிமாறன் பேசினார்.
திருமங்கலம்
மதுரையில் நாளை மறுநாள் (ஜூலை 15-ந் தேதி) பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினை திறப்பு விழா நடைபெறு–கிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலகத் தினை திறந்து வைக்கிறார். மதுரை வரும் முதல்வரை வரவேற்பது தொடர்பாக திருமங்கலம் தி.மு.க. அலுவலகத்தில் நேற்று தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை–பெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசியதாவது:-
முதல்வர் வரவேற்பில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அதிகளவில் வந்து முதலிடத் தினை பிடிக்கவேண்டும். இன்னும் 30 ஆண்டுகள் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி–தான் நடைபெறும் அந்தள–விற்கு பல்வேறு நலத்திட்டங் களை முதல்வர் செய்து வருகிறார். கலைஞர் நூலகம் திறப்பு விழாவில் சால்வை, வேட்டி, பொன்னாடையை கட்சியினர் தவிர்த்து முத–ல் வருக்கு புத்தங்களை தர–வேண்டும்.
நாம் தரும் புத்தகங்கள் நூலகத்தில் இடம் பிடித்து பொதுமக்களுக்கு பயன் தரும். மேலும் முதல்வர் வரவேற்பில் 50 ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்கள் திரண்டு வரவேற்பு அளிக்க–வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி–னார்.
இந்த கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகையை அறி–வித்துள்ள தமிழக முதல் வருக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறை–வேற்றப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங் கம், துணை செயலாளர் லதா அதியமான், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, தங்கபாண்டி, ஆலம்பட்டி சண்முகம், ராமமூர்த்தி, மதன்குமார், நகர செயலா–ளர்கள் ஸ்ரீதர், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா–முத்துக்குமார், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், திருமங்கலம் நகர துணை–செயலாளர் செல்வம், பொருளாளர் சின்னசாமி நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் இருக்க வேண்டும்.
- கல்லூரி விழாவில் டி.எஸ்.பி. பொன்னுசாமி பேசினார்.
மதுரை
மதுரை அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அன்பரசு தலைமை தாங்கினார். ஒருங் கிணைப்பாளர் பிரதீபா சிறப்பு விருந்தினரை அறிமு–கப்படுத்திப் பேசினார். விழாவில் மதுரை கோட்ட ரெயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அதிகம் பங்கேற்று அரசு பணிகளில் சேர தங்களை தயார் செய்து–கொள்ள வேண்டும். மாண–வர்களுக்கு அரசியல் ஆர் வம் இருக்க வேண்டும். மாணவர்களிடமிருந்து தான் நல்ல தலைவர்கள் உருவாக முடியும் என பேசினார்.
அதிபர் ஜான் பிரகாசம், செயலர் அந்தோணிசாமி ஆகியோர் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மாணவப் பிரதிநிதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த–னர். இணை முதல்வர் சுந்த–ரராஜ் வாழ்த்திப் பேசினார்.
விழாவிற்கான ஏற்பாடு–களை மாணவர்களுக்கான கல்விப்புலத் தலைவர் நிர்மல் ராஜ்குமார் ஏற்பாடு–களை செய்திருந்தார். மாணவி பிரதிநிதி மோனிகா இந்திரா நன்றி கூறினார்
- இரும்பு கடைக்குள் புகுந்து ரூ. 2 லட்சம்- தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்டது.
- கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் சீதாராமன் என்ற மணி கண்டன் (வயது 35). இவர் திருமங்கலம்- மதுரை மெயின் ரோட்டில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல் கடை யை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் கொள்ளையடிக் கும் நோக்கத்தில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். கூட்டாளிகள் வெளியில் நின்று கண்காணிக்க ஒருவர் மட்டும் கடையின் மேல்புற ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தார்.
பின்னர் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், 2 தங்க நாணயங் களை திருடிக் கொண்டு கூட்டாளிகளுடன் தப்பி னார்.
மறு நாள் கடையை திறக்க வந்த சீதாராமன் பணம், தங்க நாணயங்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் திருமங் கலம் நகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் கடைக்கு வந்து விசாரணை நடத்தி னர். அப்போது கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப் பட்டது. அதில் கடைக்குள் மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் காட்சி பதிவாகி யுள்ளது. அதனை வைத்து கொள்ளையர்களை பிடிக் கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






