என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் இருக்க வேண்டும்
    X

    மதுரை அருகே கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் மாணவர் மன்ற துவக்க விழா நடைபெற்றபோது எடுத்தபடம்.

    மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் இருக்க வேண்டும்

    • மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் இருக்க வேண்டும்.
    • கல்லூரி விழாவில் டி.எஸ்.பி. பொன்னுசாமி பேசினார்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அன்பரசு தலைமை தாங்கினார். ஒருங் கிணைப்பாளர் பிரதீபா சிறப்பு விருந்தினரை அறிமு–கப்படுத்திப் பேசினார். விழாவில் மதுரை கோட்ட ரெயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அதிகம் பங்கேற்று அரசு பணிகளில் சேர தங்களை தயார் செய்து–கொள்ள வேண்டும். மாண–வர்களுக்கு அரசியல் ஆர் வம் இருக்க வேண்டும். மாணவர்களிடமிருந்து தான் நல்ல தலைவர்கள் உருவாக முடியும் என பேசினார்.

    அதிபர் ஜான் பிரகாசம், செயலர் அந்தோணிசாமி ஆகியோர் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மாணவப் பிரதிநிதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த–னர். இணை முதல்வர் சுந்த–ரராஜ் வாழ்த்திப் பேசினார்.

    விழாவிற்கான ஏற்பாடு–களை மாணவர்களுக்கான கல்விப்புலத் தலைவர் நிர்மல் ராஜ்குமார் ஏற்பாடு–களை செய்திருந்தார். மாணவி பிரதிநிதி மோனிகா இந்திரா நன்றி கூறினார்

    Next Story
    ×