search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம்
    X

    கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தின் உட்புற எழில்மிகு தோற்றத்தையும், புத்தகங்கள் அழகுற அடுக்கி வைக்கப்பட்டுள்ளதையும் படத்தில் காணலாம்.

    4 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம்

    • 4 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலக திறப்பு விழா மதுரையில் நாளை மறுநாள் கோலாகலமாக நடக்கிறது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா–லின் திறந்து வைக்கிறார்.

    மதுரை

    தமிழக அரசு சார்பில் மதுரையில் பிரமாண்டமாக 'கலைஞர் நூற் றாண்டு நினைவு நூலகம்' கட்டப்பட் டுள்ளது. இந்த நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்த–கங்களுடன் உள்ள கலைஞர் நூற் றாண்டு நூலகம் மதுரையின் மற்று–மொரு அடையாளமாக திகழப்போ–கிறது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மதுரையில் கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் பிரமாண்ட நூலகம் மதுரை–யில் அமைக்கப்படும் என்று அறி–விக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்த–வுடன் இதற்கான அரசாணை பள்ளிக் கல்வித்துறை மூலம் கடந்த ஆண்டு ஜூலை 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்காக மதுரை புது நத்தம் சாலை–யில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூல–கம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.

    சென்னை கோட்டூர்புரத்தில் 2010 ஆம் ஆண்டு பிரமாண்டமான அண்ணா நினைவு நூற்றாண்டு நூல–கம், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது. அதைப் போலவே தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேசத் தரத்தில் நூலகம் மதுரையின் மற் றொரு அடையாளமாக கலைஞர் நூற் றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

    இதற்காக ஆரம்பத்தில் 70 கோடிக்குத் திட்டமிடப்பட்டு பின்பு 99 கோடியாக உயர்த்தப்பட்டு இறுதி–யாக தற்போது 134 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. அனைத்து தரப்பி–னருக்கும் பயனளிக்கும் வகையில் 4 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன.

    குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இளம் பெண்கள் என பலரும் இந்த நூல–கத்தின் மூலம் பயன்பெறலாம். நூல–கம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதியு–டன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள் ளது நூலகம். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.

    முதல் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் முன்னாள் முதல்வர் கரு–ணாநிதி எழுதிய நூல்கள், குழந்தை–கள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளுக்கான நூலகப் பிரிவும் உள்ளது. இரண்டாம் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் தமிழ் நூல்கள் பிரிவும் உள்ளது. மூன்றாம் தளத்தில் 2,810 சதுர அடி பரப்பில் ஆங்கில நூல்கள் பிரிவும், ஆராய்ச்சிக்கட்டுரைகளும் நான்காம் தளத்தில் 1,990 சதுர அடி பரப்பில் அமரும் வசதியுடன்கூடிய ஆங்கில நூல் பிரிவும், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் வைக்கப் பட்டுள்ளன.

    ஐந்தாம் தளத்தில் 1,990 சதுர அடியில் மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல் பிரிவும், ஆறாம் தளத்தில் 1,990 சதுர அடியில் கூட்ட அரங்கு, நூலகத்துக்கான ஸ்டூடியோ, மின்னணு உருவாக்கப் பிரிவு, நுண்ப–டச்சுருள், நுண்பட நூலக நிர்வாகப் பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு எனப் பல பிரிவுகள், நிர்வாக அலுவ–லகம் உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

    தி.மு.க. முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரு–மான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3-ந்தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் நாளை மறுநாள் (15-ந்தேதி) மாலை 5 மணிக்கு தொடங்கும் விழாவில் கலை–ஞர் நூற்றாண்டு நினைவு நூல–கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா–லின் திறந்து வைக்கிறார்.

    இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என பல்லாயிரக்க ணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த விழா தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான கே.என்.நேரு தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 மாலையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எச்.சி.எல். குழும நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல் குழுமத் தலைவர் ரோஷினி நாடார் ஆகியோர் பங்கேற் கிறார்கள்.

    அறிவுத் திருவிழாவாக இந்தத் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகமானது படிக்கும் பழக்கத்தினை மேம்படுத்தி வளர்ப்ப–தற்கும், நேரடி நூல் வாசிப்பு மட்டு–மின்றி, பல்வேறு தொழில்நுட்பங்க–ளின் வாயிலாகக் கற்று உலகத்தரத் திற்கேற்ப தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களை–யும், இளைய தலை–முறையினரையும் உயர்ந்து நிற்கச் செய்யவும் துணை நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×