search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபழக்கம் 100 சதவீதம் எட்டுவதுதான் திராவிட மாடலா?-கிருஷ்ணசாமி கேள்வி
    X

    மதுபழக்கம் 100 சதவீதம் எட்டுவதுதான் திராவிட மாடலா?-கிருஷ்ணசாமி கேள்வி

    • புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
    • மதுபழக்கம் 100 சதவீதம் எட்டுவதுதான் திராவிட மாடலா? என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.

    மதுரை

    மதுரையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கள்ளுக்கடைகளை மூட வேண்டும் என தொடர்ந்து அரசை வலியு றுத்தி வருகிறோம். தமிழகத் தில் மதுபான கடைகளை மூட வேண்டும் என இப்போதைய முதல்வராக உள்ள ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்தனர். ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூட முதல் கை யெழுத்திடுவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் அதற்கு மாறாக நடக்கிறார். தமிழகத்தில் அண்மைக்காலமாக இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக கனி மொழி எம்.பி. கூறியிருக்கிறார்.

    டாஸ்மாக் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிரியாக உள்ளது. மது அருந்துவதால் உடல் ரீதி யான பாதிப்பு ஏற்படு கிறது என்று தெரியாமல் இளை ஞர்கள், பெரியோர்கள் அனைவரும் மது அருந்து கின்றனர்.

    மது அருந்துவதால் டாஸ் மாக் மூலம் வருவாய் ஈட்டும் முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வரு கிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் மது கடைகளை மூட வேண்டும் என்பது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    டாஸ்மாக்கை நடத்து வதா? வேண்டாமா? என்று பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். பெண்களிடம் எழுத்துப்பூர்வமான கருத்தை கேட்க வேண்டும்.மதுவினால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    தமிழகத்தில் 60 சதவீதம் பேர் மது பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.100 சத வீதத்தை எட்டுவது தான் திராவிட மாடலா?.

    100 சதவீதம் கடைகள் திறந்து இருந்தாலும் மது அருந்தாத நிலையை தமிழ கத்தில் ஏற்படுத்த வேண்டும். தி.மு.க. கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்ற தவறி விட்டது. மதுவால் பொது மக்கள் தவறான வழிக்கு சென்று விட்டனர். மக்கள் மதிப்பை தி.மு.க. இழந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×