என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிறந்து சில மணி நேரத்தில் ஆண் சிசு ரோட்டில் வீச்சு
- திருமங்கலம் அருகே பிறந்து சில மணி நேரத்தில் ஆண் சிசு ரோட்டில் வீசப்பட்டது.
- இது குறித்து கள்ளிக்குடி கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி அருகேயுள்ள பொட்டல்பட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலைத்தொட்டியின் அருகே பிறந்து சில மணி நேரமேயான ஆண்சிசுவை யாரோ பையில் சுற்றி வீசி சென்றுள்ளனர். சிசுவின் அழுகுரல் கேட்ட கிராமமக்கள் இது குறித்து கள்ளிக்குடி கிராம நிர்வாக அதிகாரி முகமது தைப்புக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் பொட்டல்பட்டி கிராமத்திற்கு விரைந்து சென்று சிசுவை மீட்டு கள்ளிக்குடி ஆரம்ப சுகா தாரநிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கிருந்து மேற்சிகிச்சைக்கு சிசு மதுரை அரசுமருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஆண் சிசு உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து பிறந்து சில மணிநேரத்தில் ஆண் சிசுவை தூக்கி வீசி சென்றவர்கள் யார்? என விசாரணை நடத்திவருகின்றனர்.






