search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம்
    X

    இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி சுற்றுச்சுவர்.

    அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம்

    • அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
    • நடவடிக்கை எடுப்பார்களா? என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கீழமட்டையான் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியின் தெற்கு பக்கமுள்ள சுற்று சுவர் விரிசலடைந்து உள்ளதால் தற்காலிகமாக குத்துக்கல்லை சுவற்றை தாங்கி பிடிக்க நிறுத்தி உள்ளனர்.

    இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவி கள் உயிர் அச்சத்தில் படித்து வருகின்ற சூழல் நிலவி வருகின்றது. மேலும் பள்ளி அருகில் உள்ள தெருவில் இதுவரை கழிவுநீர் வாய்கால் கட்டாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருவதால் தெருவில் நடுவே கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவ தோடு பள்ளி வகுப்பறை சுவர்களின் அடிப்பகுதி சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமாகி உள்ளது.

    மேலும் இதன் அருகில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையம் உள்ள நிலையில் சேதமான சுற்று சுவரை இடித்து அப்புறப் படுத்தி மாணவர்களின் அச்சத்தை போக்க முன் வருவார்களா? என்றும் மேலும் கோவில் தெருவில் கழிவுநீர் வாயிக்கால் கட்ட சம்பத்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    Next Story
    ×