search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வினர் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும்
    X

    அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். அருகில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

    அ.தி.மு.க.வினர் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும்

    • அ.தி.மு.க.வினர் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும்.
    • ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை

    வருகிற ஆகஸ்டு 20-ந் தேதி மதுரையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தக்கால் அமைக்கும் பணி மற்றும் ஆலோசனை கூட்டம் மதுரை ரிங் ரோடு கருப்புசாமி கோவில் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது.

    இதற்காக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை யில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:-

    தாய் தமிழ்நாட்டை இந்திய அளவில் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்தி, கழகத்தின் எளிய தொண்ட னும் மக்கள் சேவையாலும், உழைப்பாலும் உயர்ந்த இடத்திற்கு வரலாம் என்ற வரலாற்றை கழகத்தில் உருவாக்கித்தந்து, ஜனநா யகத்தை கட்டி காத்து, எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும். இங்கு இல்லாமல் இல்லாத நிலை வேண்டும் என்ற அம்மாவின் கனவை நனவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி.

    இந்த இயக்கம் இன்னும் நூற்றாண்டு காலம் அன்னை தமிழகத்தில் மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்று அம்மா வின் வார்த்தைகளை வேத வாக்காக கொண்டு க உறுப்பி னர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணியில் 2 கோடி தொண்டர்களை கழகத்தில் இணைத்திட இலக்காக வைத்து, இந்த 75 நாட்களில் ஒரு கோடியே 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து தாய் தமிழ்நாட்டில் புதிய வெற்றி சரித்திரம் படைத்து காட்டியுள்ளார்.

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வருகின்ற ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறு கிறது. இந்த மாநாட்டை புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் நேசித்த தென்தமிழகத்தின் தலை நகரம் மதுரையில் நடைபெறும் என்று அறிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டத் தின் சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    இந்திய தேசமே திரும்பி பார்க்கும் வகையில், மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா போல நடைபெறும் இந்த மாநாட்டில், கழகத் தொண்டர்கள், பொது மக்கள் குடும்பம், குடும்ப மாக பங்கேற்று எடப்பாடி யார் தலைமை யில், அம்மாவின் புனித ஆட்சியை தாய் தமிழகத்தில் மீண்டும் ஏற்படுத்திட உறுதி ஏற்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் சரவணன், பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×