மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்த தி.மு.க. மாவட்ட செயலாளர் மணிமாறன்

பூவரசம் காயை சாப்பிட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவ-மாணவிகளை தி.மு.க. மாவட்ட செயலாளர் நேரில் சந்தித்தார்.சிகிச்சையில் இருந்த மாணவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.
திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவ-மாணவிகளை மணிமாறன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவ-மாணவிகளை மணிமாறன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
Published on

திருமங்கலம்

திருமங்கலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத்திற்குள் இருந்த பூவரசரம் மரகாயை எடுத்து சாப்பிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் ஒவ்வொரு மாணவராக மயக்கம் அடைந்தனர். அவர்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் மணி மாறன் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் சிகிச்சையில் இருந்த மாணவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் தெரி வித்தார்.

மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் கேட்ட றிந்தார். அப்போது திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட துணைசெயலாளர் லதா அதியமான், தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், ஒன்றிய செயலாளர்கள் ஆலம்பட்டி சண்முகம், மதன்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவமுருகன்.

பி.எஸ்.என்.எல். செல்வம், அணி அமைப்பா ளர்கள் விமல், வில்லூர் ஞானசேகரன், துணை அமைப்பாளர்கள் சுரேஷ், காளிதாஸ், வக்கீல் தங்க சாமி, நகர துணை செய லாளர் செல்வம், நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார் வீரக்குமார், சின்னசாமி, இளைஞரணி ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com