இளம்பெண்கள் உள்பட 4 பேர் தற்கொலை

இளம்பெண்கள் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இளம்பெண்கள் உள்பட 4 பேர் தற்கொலை
Published on

மதுரை

மதுரை சிந்தாமணி கீழத்தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் பாண்டிராஜ்(வயது18). இவர் வேலைக்கு செல்லா மல் இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த பாண்டியராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை சோலையழகு புரம் மகாலட்சுமி கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் ரம்ஜான்பீவி(45). கணவ ருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனியாக வசித்து வருகிறார். இதனால் மன விரக்தியில் இருந்த ரம்ஜான்பீவி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது சகோதரர் சுல்தான் அலாவு தீன் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணாநகர் தாசில்தார் நகரில் உள்ள சவுபாக்கிய கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி சுகந்தி(39). கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் மன முடைந்த சுகந்தி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தங்குடி அய்யன் பரமகுரு நகரை சேர்ந்தவர் பாண்டிகணேஷ்(37). திருமணமாகாத இவர் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com