search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Biodegradable waste"

    • திருமங்கலம் நகராட்சியில் மக்கும் குப்பையில் உரம் தயாரித்து நகராட்சி தலைவர் இலவசமாக வழங்கினார்.
    • 45 நாட்களுக்கு ஈரப்பதத்துடன் தண்ணீர் தெளித்து உரம் பதப்படுத்தப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி யில் உள்ள 27 வார்டுகளில் பொதுமக்கள் துப்புரவு பணியாளர்கள் மூலம் பெறப்படும் குப்பைகளை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகிறது. முதற்கட்டமாக 100 மில்லி மீட்டர் அளவுக்கு மக்கும் கழிவுகள் பிரிக்கப்பட்டு அவற்றை அரைத்து உரமாக வெளியேற்றப்படுகிறது.

    அந்த உரத்தை குவித்து வைத்து 45 நாட்களுக்கு ஈரப் பதத்துடன் தண்ணீர் தெளித்து பதப்படுத்தப்படுகிறது. அதன்பின் 30 மில்லி மீட்டர் அளவுள்ள கழிவுகள் இயந்திரங்கள் மூலமாக குறைந்தபட்சம் நாலு மில்லி மீட்டர் அளவுக்கு இயந்திரம் உதவியுடன் பொடியாக மாற்றி இயற்கை உரமாக்கப் படுகிறது. மேலும் குப்பை கிடங்கில் வாழை இலை, தோட்ட கழிவுகள், மா இலைகள் போன்றவற்றை அரைத்து உலர வைத்து அதனை இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.

    இதனால் 16 டன் குப்பை களை 10 டன் மக்கும் குப்பைகளாக வருவதை தொடர்ந்து மக்கும் குப்பை களை இயற்கை உரம் ஆக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை பிளாஸ்டிக் கழிவுகள் இயந்திரம் மூலமாக சமப்படுத்தி பண்டலாக மாற்றி சிமெண்ட் தொழிற் சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் 10 டன் வரை தயாரிக்கப்படும் இலவச உரங்களை விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சின்னச்சாமி, வீரக்குமார், திருக்குமார், அமுதா, சரவணன், சங்கீதா, சுகாதார அதிகாரி சண்முகநாதன், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தினசரி 12 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகிறது
    • ஒரு கிலோ உரம் 1 ரூபாய்க்கு வழங்க பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

    அவிநாசி :

    அவிநாசி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் இருந்து தினசரி 12 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகிறது.கைகாட்டிப்புதூர் பகுதியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் அவை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.சில மாதங்களாக தொய்வுற்றிருந்த இப்பணி தற்போது வேகமெடுத்துள்ளது.

    ஒரு கிலோ சலித்தெடுத்த உரம், 5 ரூபாய்க்கும், சலித்தெடுக்காத உரம் கிலோ ஒரு ரூபாய்க்கும் வழங்க பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இங்கு கொட்டப்படும் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அப்புறப்படுத்தும் பணியை காண்டிராக்டர் பாதியில் கைவிட்டதால் மறுடெண்டர் விடப்பட்டுள்ளது. பணிகள் துவங்கி இங்கு குவிந்துள்ள மக்காத குப்பைகள் முற்றிலும் அகற்றப்படும் பட்சத்தில் வளம் மீட்பு பூங்கா, விரைவில் நலம் பெறும்.அதேநேரம் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை வீடுகளில் இருந்தே துவங்க வேண் டும் என்ற நோக்கில் பேரூராட்சி சார்பில் வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்ற பேரூராட்சியின் அறிவிப்பு வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளது. மக்கள் பின்பற்றுவதில்லை. இந்த அறிவிப்பும் அமலுக்கு வந்தால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் திடம் பெறும் என்கின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.

    ×