search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரம் மலை போல் தேங்கி இருக்கும் குப்பைகள்
    X

    சாலையோரத்தில் தேங்கி இருக்கும் குப்பைகளை படத்தில் காணலாம். 

    சாலையோரம் மலை போல் தேங்கி இருக்கும் குப்பைகள்

    • சாலையோரம் மலை போல் தேங்கி இருக்கும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் சிரமைப்படுகின்றனர்.
    • தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    திருமங்கலம்

    திருமங்கலம் விமான நிலைய சாலை செல்லும் பகுதியில் நகராட்சி எல்லைக்கு அடுத்தபடியாக வடகரை ஊராட்சி அமைந்துள்ளது. ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வீடுகள் கடைகள் இருந்து வெளி யேற்றப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது.

    குறிப்பாக உணவகங்களில் மீதமாகும் உணவு கழிவுகள் சிக்கன் கடைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கோழிக்கழிவு கள் மூட்டை, மூட்டையாக கட்டப்பட்டு கொட்டப்படு கிறது.

    குப்பைகளை நாய்கள் கிளறுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசப்படுகிறது. காற்று வீசும்போது பறக்கும் குப்பையால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே விமான நிலைய சாலை செல்லும் சாலையில் சாலையோரம் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், குப்பை மேடாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த குப்பைகளால் அந்தப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் கொட்டப் படும் கழிவுகளை உண்ப தற்காக வரும் நாய், பன்றி, மாடுகள் போன்றவை களுக்குள் ஏற்படும் சண்டையால் அவைகள் சாலைகளில் ஓடிவரு கின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.

    மேலும் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அந்தப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.

    எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதிக்கவும், குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், குப்பைகளை வாங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×