என் மலர்
நீங்கள் தேடியது "Osteopathy"
- எலும்பு நோய்கள் குறித்து சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
- முகாமில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மதுரை
மதுரை கோச்சடை லட்சுமி மருத்துவமனை - ஒலிம்பஸ் எலும்பியல் சென்டர் சார்பில் ஆஸ்டியோ போரோசிஸ் (எலும்பு தேய்மானம்) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பின் அடர்த்தி மற்றும் தரம் குறைவதால், எலும்புகள் மிகவும் உடையக்கூடிய தாகவும், எலும்பு முறிவு களுக்கு ஆளாகக்கூடிய தாகவும் ஆகும். இது பெரும்பாலும் "அமைதி யான நோய்" என்று குறிப்பிடப்படுகிறது.
இதுகுறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டது. இதில் எலும்பு, மூட்டு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை, அட்வான்ஸ் ட்ராமா கேர், எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை, ஆர்தோஸ் கோப்பி உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில் நுட்பம் வாயிலாக சிகிச்சை வழங்குவதில் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர் சரவணன், முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரூ.2500 மதிப்புள்ள இலவச எலும்பு அடர்த்தி பரிசோ தனை, இரத்த பரசோத னைகள், எக்ஸ்ரே மற்ற அனைத்து மருத்துவ சிகிச்சைகள் குறித்த ஆலோ சனைகள் வழங்கினார்.
முகாமில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.






