மோட்டார் சைக்கிள் விபத்தில் ரியல் எஸ்டேட் தரகர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் ரியல் எஸ்டேட் தரகர் பலியானார்.கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் ரியல் எஸ்டேட் தரகர் பலி
Published on

திருமங்கலம்

விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சிவசங்கர்(வயது59). ரியல் எஸ்டேட் தரகரான இவர் கடந்த 29-ந்தேதி வேலை நிமித்தமாக மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கு வேலையை முடித்த சிவசங்கர் இரவு ஊருக்கு புறப்பட்டார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கள்ளிக்குடி ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் கீழே விழுந்த சிவசங்க ருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம், பக்கத்தி னர் அவரை மீட்டு விருது நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவசங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ஹரிகரசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com