search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தான பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்கள்
    X

    ஆபத்தான "பைக்" ரேசில் ஈடுபடும் இளைஞர்கள்

    • ஆபத்தான “பைக்” ரேசில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.
    • சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

    மதுரை

    மதுரையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்ல வசதியாகவும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை-நத்தம் சாலையில் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சுமார் ரூ.615 கோடி செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் பாலத்தில் ஐயர் பங்களா, திருப்பாலை பகுதிகளில் இறங்குவதற்கு வசதியாக சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி களுக்கும், நத்தம் உள்ளிட்ட வெளியூர்களுக்கும் செல்லும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பகல் நேரங்களில் அதிக அளவில் செல்லுகிறது.

    ஆனால் இரவு நேரங்களில் சொற்ப அளவி லேயே கார், இருசக்கர வாகனங்கள் பறக்கும் பாலத்தில் சென்று வருகின்றன. இதனால் பறக்கும் மேம்பால பகுதிகளில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடை பெறுவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் இரவு நேரங்களில் போலீசார் அவ்வப்போது ரோந்து பணிகளிலும் ஈடுபடு கிறார்கள். பறக்கும் மேம்பாலத்தில் குறைந்த அளவே வாகனங்கள் செல்வதால் சாலைகளில் சாகசம் செய்பவர்களின் அட்டகாசமும் அவ்வப் போது அறங்கேறி வருகிறது. அதிவேகத்தில் பைக் ரேஸ் சென்று அந்த காட்சிகளை இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் பதிவிட்டு அதிக 'லைக்' களை பெறுவதும் இளசுகளின் தெளியாத கனவாக உள்ளது. இளம்பெண்களும் பாலத்தின் மையப் பகுதிகளிலிருந்து நடனமாடி அதனை சமூக வலைத்த ளங்களில் வெளியிடுவதும் சமீப காலமாக டிரெண்டாகி வருகிறது.

    இதனை போலீசார் கடுமையாக எச்சரித்து வருகின்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நத்தம் பறக்கும் மேம்பா லத்தில் நான்கு இரு சக்கர வாகனங்களில் வாலிபர்கள் அதிவேகத்தின் சைரன் ஒலிக்க முன்பக்க சக்கரத்தை உயரே தூக்கிய படி அதிவேகத்தில் சென்று சாகசம் என்ற பெயரில் அபாயகரமான பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

    இது அந்த வழியாக வாகனத்தில் சென்ற வர்களை கடும் பீதிக்கு உள்ளாக்கியது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் இந்த பைக் ரேஸ் இளைஞர்கள் மாயமாய் மறைந்து விட்டனர்.

    இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள் ளனர். இந்த நிலையில் பறக்கும் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சென்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேஸ் செல்வது சமூக விரோத செயலாகும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    நத்தம் மேம்பாலத்தில் பைக் ரேஸ் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பலமுறை எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதனை மீறி தொடர்ந்து மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் தேவை யின்றி வாகனங்களை நிறுத்துவது பாலத்தின் மேலே நின்று செல்பி எடுப்பது, வாகனங்களில் அதிவேகமாக சென்று சாகசம் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, பாலத்தின் மேலே அமர்ந்து கொண்டு கேக் வெட்டுவது, பாலத்தின் இருபுறங்களில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்து பொழுது போக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

    Next Story
    ×